📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 26 பிப்ரவரி, 2025

தமிழன் பயன்படுத்திய இசைக்கருவிகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

தமிழ் இசைக்கருவிகள் என்பன தமிழர் பயன்படுத்திய இசைக் கருவிகளாகும். சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள், மட்டுமல்லாது பாணர், பாடினியர், விறலியர் (ஆடல் மகளிர்) போன்றோர், பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் துணையோடு சிறப்பாகப் பாடி உள்ளனர். பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பாக ஆற்றுப்படை நூல்கள் அக்காலத்தியத் தமிழர் தம் இசைத்திறத்தை எடுத்தியம்புகின்றன. யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில் மற்றும் இன்னியம் முதலான இசைக்கருவிகள் இருந்துள்ளன. இசையைத் தொழிலாகக் கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாக பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் நூற்பா தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது.

தெய்வ முணாவே மாமரம் புட்பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவும் கருவென மொழிப என்கிறது தொல்காப்பியம்- அகத்திணையியல். 

இங்கு தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள். ஏழு கருப்பொருளில் ஒன்று யாழ். மற்றொன்று.

பறை. ஆகுளி, இடக்கை, இலயம், உடுக்கை,ஏழில், கத்திரிகை, கண்டை, கரதாளம், கல்லலகு, கல்லவடம், கவிழ், கழல், காளம், கிணை, கிண்கிணி, கிளை, கின்னாரம், கொக்கரை, குடமுழா, குழல், கையலகு, கொக்கரை, கொடுகொட்டி, கொட்டு, கொம்பு, சங்கு, சச்சரி, சலஞ்சலம், சல்லரி, சிரந்தை, சிலம்பு, சின்னம், தகுணிச்சம், தக்கை, தடாரி, தட்டழி, தத்தளகம், தண்டு, தண்ணுமை, தமருகம், தாரை, தாளம், துத்திரி, துந்துபி, துடி, தூரியம், திமிலை, தொண்டகம், நரல் சுரிசங்கு, படகம், படுதம், பணிலம், பம்பை, பல்லியம்,

பறண்டை, பறை, பாணி, பாண்டில், பிடவம், பேரிகை, மத்தளம், மணி, மருவம், முரசு, முரவம், முருகியம், முருடு, முழவு, மொந்தை, யாழ், வங்கியம், வட்டணை, வயிர், வீணை, வீளை, வெங்குரல்

யாழ்நூலும் சுவாமி விபுலாநந்தரும்

கர்நாடக இசையின் பெருமையான இசைக்கருவியான வீணை, கோட்டு வாத்தியம் இவைகளுக்கு இணையாக தமிழிசையில் சொல்லப்படும் இசைக்கருவி யாழ். வீணை பற்றிய குறிப்புகள் பல இலக்கியங்களில் காணப்பட்டாலும், யாழிசைக்கு ஒரு சிறப்பான முதலிடம் தரப்பட்டிருந்ததை காணமுடிகிறது. வீணையைப் போன்றே யாழும் கம்பி அல்லது நரம்புகளை இழுத்துக் கட்டப்பட்டு கைகளால் இசைக்கப்படும் கருவியாக இருந்திருக்கிறது. சுவாமி விபுலாநந்தாவின் “யாழ் நூலில்” யாழினைப் பற்றி பல விடய




































ங்கள் கூறப்பட்டிருக்கின்றன.

தமிழர் சங்க காலம் தொடக்கம் பயன்படுத்திய இசைக்கருவிகள் சிலவற்றின் படங்களைக் கீழே காணலாம். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக