பின்வரும் பந்தியை வாசியுங்கள்
கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.
1. ஆதிகால மக்கள் முதலில் எங்கே வசித்தனர்?
.......................................................
2. அவர்கள் எதனைத் தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்தினர்?
.....................................................
3. 'முடிய' என்னும் சொல்லின் எதிர்க்கருத்துச்சொல்லை எழுதுக.
....................................................
4. 'கூர்மையாக்கி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
.....................................................
5. சங்கிலிக்ெகாம்பு உடைய எழுத்தைக் கொண்ட ஒரு வினைச்சொல்லைப் பந்தியிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.
..............................................................
6. பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள உவமானத்தை எழுதுக.
----------------------------------------------
02. சரியாக எழுத்துக்கூட்டப்பட்டுள்ள சொல்லைத் தெரிவுசெய்து அதன் கீழ்க் கோடிடுக.
1. முயச்சி / முயற்சி
2. வறலாறு / வரலாறு
03. கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களில் இருக்கும் வெற்றிடத்துக்குப் பொருத்தமான சொல்லை அடைப்புக்குள் இருந்து தெரிவுசெய்து, அதன் கீழ்க் கோடிடுக.
1. ............................... (அவர் / அவர்கள்) பழங்கள் வாங்க சந்தைக்குச் சென்றார்.
2. நானும் எனது நண்பர்களும் மேடையில் ஏறிப் ................ (பாடினர் / பாடினோம்.)
3. கிளி பழத்தைத் ................. (தின்றது / தின்றன)
4. மாமரங்கள் பூவும் பிஞ்சும் காயுமாகக் காட்சி ................ (தருகிறது / தருகின்றன)
04. கீழே தரப்பட்டுள்ள வாக்கியத்தைப் பூரணப்படுத்துக.
சிங்கம் கர்ச்சிக்கும் என்பது போல யானை .......................
05. கீழே தரப்பட்டுள்ள வெற்றிடத்திற்குப் பொருத்தமா சொல்லை எழுதிப் பழமொழியைப் பூரணப்படுத்துக.
..................................... அருமை வெயிலில் தெரியும்.
06. கீழே தரப்பட்டுள்ள சொற்றொடருக்குரிய தனிச்சொல்லைப் புள்ளிக் கோட்டின் மீது எழுதுக.
நடக்க இருப்பவற்றை முன்னரே கூறுபவன் ......................................
07. கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களில் வெற்றிடத்திற்குப் பொருத்தமான விடையை அடைப்புக்குள் இருந்து தெரிவுசெய்து, அதன் கீழ்க் கோடிடுக.
1. நான் பரீட்சையில் சித்தியடைந்த செய்தியைக் கேட்டு அம்மா உச்சி குளிர்ந்தார். தடித்த எழுத்திலுள்ள மரபுத் தொடரின் கருத்து
(மிக மகிழ்தல் / பாராட்டுதல்) என்பதாகும்.
2. இருபத்தைந்தாவது ஆண்டில் எடுக்கப்படும் விழா .......................... (பொன் விழா / வௌ்ளி விழா)
3. திருமண நிகழ்ச்சியில் .......................... (உற்றார் உறவினர்/ ஏழைய எளியவர்) பங்கு பற்றினர்.
08. ஆற்று நீர் (பட பட / சல சல / கல கல) என ஓடியது.
09. கீழே தரப்பட்டுள்ள கவிதையை வாசித்து, கேட்கப்பட்டுள்ள வினாவுக்குரிய விடையைப் புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.
கோல மயிலின் கூத்தைக் கண்டு
குரங்கு தாளம் போடுது
கொப்புக் கொப்பாய்த் தாவிப் பாய்ந்து
குரங்கு தாளம் போடுது
குரங்கு எப்படித் தாளம் போடுகிறது? ...................................................................
10. பின்வரும் இரு வாக்கியங்களையும் சேர்த்து ஒரு வாக்கியமாக எழுதுக.
சபரி குடிசைக்குள் சென்றாள். அவள் நீர் கொண்டு வந்தாள்.
.........................................................................................................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக