📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 ஜூலை, 2025

தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்கள் | THAMILSH SHUDAR

திங்கள், 14 ஜூலை, 2025

தரம் 06 - தமிழ் - இரண்டாம் தவணைப் பரீட்சை - Thamilsh Shudar

Thamilsh Shudar இனால் இன்றிலிருந்து கடந்த கால வினாப்பத்திரங்கள் (தமிழ்மொழி | தமிழ் இலக்கிய நயம்) வெளியிடப்படவுள்ளது. இன்று தரம் 6 வகுப்பிற்கான தமிழ்மொழி | மேல் மாகாணம் | 2018 வௌியிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 11 ஜூலை, 2025

தரம் 5 முன்னோடிப் பரீட்சை வினாப்பத்திரம் - வினாத்தாள் 2

1. பின்வரும் பந்தியை வாசித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

      குமார் மாலைநேர வகுப்புக்கு தனது தாயாருடன் சென்றான். அப்போது பாதையோரத்தில் சிறிய பூனைக் குட்டியொன்று கத்தியபடி இருந்தது. பாசத்துடன் அப்பூனைக்குட்டியைத் தூக்கி எடுத்தான். அவன் ‘அம்மா இந்தப் பூனைக்குட்டி பாவம் வீட்டுக்குக் கொண்டு போவோமா?’ என்று கேட்டான். அம்மாவும் சரியெனக் கூறியதால் அவன் மகிழ்ச்சியடைந்தான்.
       I.          பந்தியில் வந்துள்ள காலப் பெயர் ஒன்றை எழுதுக.
     II.          பந்தியில் வந்துள்ள பெயரடைமொழிச் சொல்லொன்றை எழுதுக.

புதன், 25 ஜூன், 2025

எதிர்ப்பாற் சொற்கள்

எதிர்ப்பாற் சொற்கள் சகல வகுப்புகளுக்குமான -  பொதுப் ரீட்சைகளுக்குமான வினாக்களாக வருகின்றமை குறிப்பிடத்தக்கதுஇங்கு இற்றைப்படுத்தப்படுகின்ற எதிர்ப்பாற் சொற்களின் PDF’ கோப்பும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது

ஒரு பால் குறிக்கும்  சொல்லுக்கு எதிரான பால் எதிர்ப்பாற்  சொல் எனப்படும். இது இரண்டு வகைப்படும்.

1. உயர்திணை எதிர்ப்பாற் சொல்

2. அஃறிணை எதிர்ப்பாற் சொல்

1.  அப்பன் அம்மை

2.       அப்பா - அம்மா

3.       அரசன் அரசி

4.       அழகன்  - அழகி

5.       அடியான் அடியாள்

6.       அண்ணன் அக்கா

7.       அரக்கன் அரக்கி

வியாழன், 27 மார்ச், 2025

ஆங்கிலப் பழமொழிகளுக்கு நிகரான தமிழ்ப் பழமொழிகள் கற்போமா?

A Penny saved is a penny gained.
சிறு துளி பெருவெள்ளம்.

◆ A good horse often wants a good Spur.
சுடர் விளக்காயினும், தூண்டுகோல் வேண்டும்.

A lamb at home and lion at chase.
பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.

◆ A burnt child dreads fire.
சூடுபட்ட பூனை அடுப்படியை அண்டாது.

◆ A stich in time saves nine.
உரிய காலத்தில் தைத்தல் ஒன்பது கிழிசலைத் தவிர்க்கலாம்.

புதன், 26 பிப்ரவரி, 2025

தமிழன் பயன்படுத்திய இசைக்கருவிகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

தமிழ் இசைக்கருவிகள் என்பன தமிழர் பயன்படுத்திய இசைக் கருவிகளாகும். சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள், மட்டுமல்லாது பாணர், பாடினியர், விறலியர் (ஆடல் மகளிர்) போன்றோர், பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் துணையோடு சிறப்பாகப் பாடி உள்ளனர். பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்கள் குறிப்பாக ஆற்றுப்படை நூல்கள் அக்காலத்தியத் தமிழர் தம் இசைத்திறத்தை எடுத்தியம்புகின்றன. யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர்,

சனி, 22 பிப்ரவரி, 2025

தமிழ் கற்றால் இப்படித்தான் கற்க வேண்டும்.

எனதும் நாடகவியல் பயிற்றுவிப்பாளரான பேராசிரியர் மௌனகுரு சின்னையா அவர்களின் முகநூல் பக்கத்தில் வரும் கட்டுரைகளை அடிக்கடி வாசித்து வருபவன் என்றவகையில், இன்று என் கண்களுக்குள் குத்திக்ெகாண்ட சிறந்ததொரு கட்டுரை பேராதனைப். பல்கலைக்கழகத்தில் அன்றைய தமிழ்க் கல்வி-- நினைவில் நிற்கும் பழைய ஞாபகங்கள் எனும் கட்டுரை.

கட்டுரையானது, நமது தமிழ் ஆசிரியர்களுக்கு பல

வியாழன், 16 ஜனவரி, 2025

தமிழ் வளர்ச்சி என்றால் என்ன? - கோரா பதில் தருகிறது.

தமிழ் வளர்ச்சி என்றால் என்ன?

இந்த கேள்வியை இரண்டாக பிரிக்கலாம்.

  1. தமிழ் என்றால் என்ன?
  2. வளர்ச்சி என்றால் என்ன?

தமிழ் என்றால் என்ன?

தமிழ் என்பது ஒரு மொழி, அது அதன் அடித்தளமான தொல்காப்பிய சூத்திரத்தின் வழி இயங்கும். அது தமிழ் மொழியின் கட்டமைப்பு, மொழிபெயர்ப்பு விதி, மறுவுதல், திரிதல் உட்பட அனைத்தையும் பேசுகிறது. அதாவது தமிழ்

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

பயிற்சி - 1


ஓரிடத்தில் இருந்திடாமல்

ஓடி ஓடிக்  கேட்டிடலாம்

பாடகரைப் பார்த்திடாமல்

பாட்டுக்களைக் கேட்டிடலாம்