இலங்கை கல்வி வௌியீட்டுத் திணைக்களத்தினால் தரம் 10 - 11 மாணாக்கருக்காக வௌியிடப்பட்டுள்ள, தமிழ் இலக்கிய நயம் பாடப்புத்தகத்தின் 85 ஆம் பக்கத்தில் பன்முக எழுத்தாளர் திரு. எம்.எச்.எம். ஷம்ஸ் பற்றிய படம் கொடுக்கப்பட்டு, அவர் பற்றியும் குறிப்புகள் எழுதுமாறு கேட்கப்பட்டுள்ளது.
அவர் பற்றி மாணாக்கரும், ஆசிரியர் பெருந்தகைகளும் அறிந்துகொள்ளுமுகமாக 'தமிழ்மணி அஷ்ரப் ஷிஹாப்தீனின் கட்டுரை இங்கு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் பற்றி மாணாக்கரும், ஆசிரியர் பெருந்தகைகளும் அறிந்துகொள்ளுமுகமாக 'தமிழ்மணி அஷ்ரப் ஷிஹாப்தீனின் கட்டுரை இங்கு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.
'தெற்கில் உதித்த சூரியன்'
மர்ஹூம் எம்.எச்.எம். ஷம்ஸ் மறைந்து 12 வருடங்கள் தாண்டிய பின்னர் சமூகத்தில் அவரது இழப்பு ஏற்படுத்திய இடைவெளியின் விசாலம் உணர்ந்து 'தெற்கில் உதித்த சூரியன்' என்று இப்பத்திக்குத் தலைப்பிட்டிருக்கிறேன். 15.07.2002 அன்று இவ்வுலகை நீத்த அவர்கள் பற்றி அன்னாரது பத்திரிகைத் தோழரான சிதம்பரப் பிள்ளை சிவகுமார் ஆற்றிய நினைவுரையை 'யாத்ரா' பத்தாவது இதழில் பிரசுரித்து அதற்குத் 'தெற்கில் மறைந்த சூரியன்' என்று தலைப்பிட்டிருந்தேன்.
20 வருடங்களுக்கு முன்னர் அவர் தொகுத்து வைத்திருந்த அவரது சிறுகதைத் தொகுதி 'வளவையின் மடியிலே' என்ற மகுடத்தில் கடந்த 2.11.2014 அன்று அவரது புத்திரரான பத்திரிகையாளர் பாஹிமின் முயற்சியால் வெளியிட்டு