📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 17 மார்ச், 2025

தமிழ்மொழியும் இலக்கியமும் - தரம் 11 வினா விடைத் தொகுப்பு

 நீதிப்பாடல்கள்

    குறு வினாக்கள்

*     'தண்டாமரையி னுடன் பிறந்தும் தண்டேன்

        நுகரா மண்டுகம்...'

01)    மேற்படி செய்யுள் இடம்பெறும் நூல் எது?

        * விவேக சிந்தாமணி

02)    விவேக சிந்தாமணி எக்காலத்திற்குரிய நூலாகும்?

        * விஜய நாயக்கர் காலம் (எனக் கருதப்படுகிறது.)

03)    'மண்டுகம்' எனப்படுவது யாது?

        * தவளை

04)    மண்டுகம் யாருக்கு உவமிக்கப்பட்டுள்ளது?

        * புல்லருக்கு (அறிவில்லாதவருக்கு)

05)    இங்கு இடம்பெற்றுள்ள அணி யாது? விளக்குக.

        * உவமை அணி

        * உவமானம் - மண்டுகம்

        * உவமேயம் - அறிவற்றவர்

        * பொதுத்தன்மை - அறியாமை

06    மண்டுகத்தின் இயல்பு யாது?

        * தாமரையுடன் வாழ்ந்தும் அம் மலரில் உள்ள தேனைக் குடிக்கவியலாத அறியாமை கொண்டிருத்தல்

    * வண்டோ கானத்திடை யிருந்து வந்து

      கமல மதுவுண்ணும்"

07)    கானம் எனப்படுவது யாது?

    * காடு

08)    கமலம், மது எனப்படுபவை யாவை?

    * தாமரை, தேன்

09)    வண்டு யாருக்கு உவமிக்கப்பட்டுள்ளது?

    * அறிவுடையாருக்கு

10)    வண்டின் இயல்பு யாது?

    * காட்டில் இருந்த போதும் தாமரையின் சிறப்பை அறிந்து, அங்கிருந்து வந்து         தாமரையின் தேனை உண்ணக்கூடிய அறிவுடைமையைக் கொண்டிருத்தல்.

    * பண்டே பழகியிருந்தாலும் -அறியார்

       புல்லர் நல்லோரை'

11)    புல்லர் என்பதன் பொருள் யாது?

    * அறிவில்லாதவர்

    * தேம்படு பனையின் றிரள்பழத் தொருவிதை

      வானுற வோங்கி வளம்பெற வளரினும்

12)    மேற்படி பாடல்வரி இடம்பெறுகின்ற இலக்கியம் எது?

    * வெற்றி வேற்கை

13) வெற்றிவேற்கை வேறு எப்பெயரினால் அழைக்கப்படுகிறது?

    * நறுந்தொகை

14)    'நறுந்தொகை' என அழைக்கப்படுவதன் காரணம் யாது?

    * நல்ல நீதிகளை எல்லாம் தொகுத்துத் தருவதால் 'நறுந்தொகை' என்று அழைக்கப்படுகிறது.

15) இந்நூலின் ஆசிரியர் யார்?

    * அதிவீரராம பாண்டியன்

16)    'வானுறவோங்கி வளம்பெற வளரினும்' எனும் தொடரில் கையாளப்பட்டுள்ள அணி யாது? விளக்குக.

    * உயர்வு நவிற்சியணி

    * பனை மரமானது வானத்தை நோக்கி மிக உயர்ந்து வளர்ந்திருப்பதாக, அதன் உயர வளரும் தன்மை மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது.

17)    பனை மரத்தின் இயல்பு யாது?

    * பெரிய விதையிலிருந்து முளைத்து வளர்ந்திருந்தாலும் ஒருவருக்கு நிழல் கொடுத்து உதவாது.

18)    இப்பாடலில் குறிப்பிடப்படும் இரு மரங்களும் எவை?

    * பனைமரம், ஆலமரம்

   *தௌ்ளியவாலின் சிறுபழத்தொரு விதை

    தெண்ணீர்க் கயத்துட் சிறுமீன் சினையினும் நுண்ணிதே'

 19)    கயம், சினை எனப்படுபவை யாவை?

    * குளம், முட்டை

20)    'தௌ்ளியவாலின்' எனும் தொடரின் பொருள் யாது?

    * தௌிவாகத் தெரிகின்ற ஆல மரம்


21) சிறுபழத்தொரு விதை எதனிலும் நுண்ணியதாகக் குறிப்பிடப்படுகின்றது?

    * சிறுமீன் முட்டையிலும் நுண்ணியதாக

22) 'கயம்' என்பதன் பொருள் யாது?

    * குளம்

23) பெரு நிழலைத் தருவதாகக் கூறப்படும் மரம் எது?

    * ஆல மரம்

24) ஆலின் சிறிய விதை யாருக்கு உவமிக்கப்படுகிறது?

    * உருவில் சிறியவர்களுக்கு

25) பனம் பழ விதை யாருக்கு உவமிக்கப்பட்டுள்ளது?

    * உருவில் பெரியவர்களுக்கு

26) 'ஆட்பெரும் படையொடு மன்னர்க்கிருக்க நிழலாகுமே' - இதில் வரும்  அணி யாது? விளக்குக.

    * உயர்வு நவிற்சியணி

    * இங்கு ஆல மர நிழலில் மன்னரும் அவருடைய நாற்படைகளும் இருக்கலாம் என, அந்தப் பரந்த நிழல் கொடுக்கும் தன்மை மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது. 

'அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா'

27) இப்பாடல் இடம்பெறுகின்ற நூல் எது?

    * வாக்குண்டாம்

28) 'வாக்குண்டாம்' என்ற நூலை எழுதியவர் யார்?

    * ஔவையார்

29) இந்நூல் எத்தனை பாடல்களைக் கொண்டமைந்துள்ளது?

    * 30 பாடல்கள்

30) ஔவையாரால் எழுதப்பட்ட வேறு நூல்கள் மூன்றினைக் குறிப்பிடுக.

    * ஆத்திசூடி, நல்வழி, கொன்றை வேந்தன்

'மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன்

வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு'

31) 'மடைத்தலை', 'உறுமீன்' எனும் தொடர்களின் பொருள்களைத் தருக.

    * மடைத்தலை - நீரோடும் வாய்க்கால், உறுமீன் - பெரிய மீன்


32) கொக்கின் இயல்பு யாது?

    * ஓடுகின்ற சிறிய மீன்களை ஓடவிட்டு, தனக்கேற்ற பெரிய மீன்கள் வரும்வரை வாட்டத்துடன் காத்திருத்தல்.

33) வாட்டத்துடன் இருக்கும் கொக்கு யாருக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது?

    * பொறுமையுடையவருக்கு / அறிவுடையவருக்கு

'கணக்காய ரில்லாத வூரும் பிணக்கறுக்கு'

34) இப்பாடல் இடம்பெறுகின்ற நூல் யாது?

    * திரிகடுகம்

35) திரிகடுகங்களும் எவை?

    * சுக்கு, மிளகு, திப்பிலி

36) 'திரிகடுகம்' என்ற நூலை இயற்றியவர் யார்?

    * நல்லாதனார்

37) 'கணக்காயர்' எனப்படுபவர் யார்?

    * ஆசிரியர் / ஓதுவிப்பவர்

38) இந்நூல் எத்தனை பாடல்களைக் கொண்டமைந்துள்ளது?

    * 101 பாடல்கள்

39) 'திரிகடுகம்' எப்பா அமைப்பினைக் கொண்டமைந்துள்ளது?

    * 'திரிகடுகம்' வெண்பா யாப்பினால் ஆனது.

40) 'பாத்துண்ணும்' எனும் தொடரின் பொருள் யாது?

    * பகிர்ந்து உண்ணும்










41) எப்படிப்பட்ட அவைக்களன் நன்மை தராது?

    * மனிதர்களிடையே ஏற்படும் முரண்பாடுகளை அகற்றும் அறிவும், அனுபவமும் மிக்க பெரியவர்களைக் கொண்டிராத அவைக்களன்


* உப்பிலாக் கஞ்சியினை யுண்ணு மறுசுவை போல்...'

42) மேற்படி பாடல் இடம்பெறுகின்ற நூல் எது?

    * முதுமொழி வெண்பா


43) முதுமொழி வெண்பாவின் ஆசிரியர் யார்?

    * புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன்


44) இவரால் இயற்றப்பட்ட ஏனைய நூல்கள் இரண்டினைத் தருக.

    * சூறாவளி படைப்போர், புதுகுஷ்ஷாம்


45) புலவர்மணி அவர்கள் எப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்?

    * கிழக்கு மாகாணம் / மருதமுனை


46) இங்கு அறுசுவை உணவாகக் கருதப்படுவது எது?

    * உப்பிலாக் கஞ்சி


47) 'தப்பிய கந்தை' என்பதால் விளங்கிக் கொள்வது யாது?

    * துவைத்துக் கிழிந்த ஆடை


48) இப்பாடலில் இடம்பெறும் முதுமொழி யாது?

    * மனம் கொண்டது மாளிகை


49) இப்பாடலின் பிரதான பொருளுக்குச் சமமாக வழக்கிலுள்ள பழமொழி ஒன்றினைக் குறிப்பிடுக.

    * போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து


50) 'மனம் கொண்டதே மாளிகை' என்பதன் கருத்து யாது?

    * உயர்வும் தாழ்வும் மனதைப் பொறுத்தததே.


(இன்னும் வரும்....)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக