📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
தமிழ்மொழியும் இலக்கியமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்மொழியும் இலக்கியமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஜூன், 2025

🌍 உலகில் பேசப்படும் பழைய மொழிகள் - தமிழ்ச்சுடர்

🌍 உலகில் பேசப்படும் பழைய மொழிகள் – ஒரு பார்வை

மொழி என்பது ஒரு மக்களின் கலாச்சாரம், வரலாறு மற்றும் அறிவின் பிரதிபலிப்பாகும். உலகில் பல மொழிகள் இன்று மறைந்து கொண்டிருக்கின்றன, ஆனால் சில மொழிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை அழியாமல் இன்று வரை உயிருடன் இருந்திருப்பது மிகவும் அதிசயமான விடயமாகும்.

🏛️ பழமையான மொழிகளின் வரிசை

1. தமிழ் (Tamil)

  • பழமை: கிமு 500 இற்கும் முந்தைய காலம்
  • இன்றும் பேசப்படுகிறதா? ஆம்
  • தன்மை: இந்தியாவின் செம்மொழி, சங்க இலக்கிய மரபு
  • பேசப்படும் இடங்கள்: இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கென்யா, கனடா, ஐரோப்பா

2. சமஸ்கிருதம் (Sanskrit)

  • பழமை: கிமு 1500 – வேத காலம்
  • இன்றும் பேசப்படுகிறதா? ஒரு சில இடங்களில்
  • தன்மை: இந்திய தர்ம சாஸ்திரங்களின் மொழி

செவ்வாய், 18 மார்ச், 2025

உவமைத் தொடர்கள் அகர வரிசையில்

நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது உவமையணி. அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடர் ஆகும். இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன.

  1. அத்தி பூத்தாற்போல் - எப்போதாவது 
  2. அச்சில்லா தேர்போல் - ஒன்றும் செய்ய முடியாத நிலை 
  3.  அனலில் இட்டமெழுகுபோல் - துன்பத்தால் மனம் உருகுதல்
  4. அணை கடந்த வெள்ளம் போல - கட்டுக் கடங்காதபோது 
  5. ஆனை வாய் அகப்பட்ட கரும்பு போல் - ஒன்றும் செய்ய முடியாத நிலை 
  6. ஆழ்கடல் முத்துப்  போல - பெறுமதி மிக்கது 

சனி, 22 பிப்ரவரி, 2025

தமிழ் கற்றால் இப்படித்தான் கற்க வேண்டும்.

எனதும் நாடகவியல் பயிற்றுவிப்பாளரான பேராசிரியர் மௌனகுரு சின்னையா அவர்களின் முகநூல் பக்கத்தில் வரும் கட்டுரைகளை அடிக்கடி வாசித்து வருபவன் என்றவகையில், இன்று என் கண்களுக்குள் குத்திக்ெகாண்ட சிறந்ததொரு கட்டுரை பேராதனைப். பல்கலைக்கழகத்தில் அன்றைய தமிழ்க் கல்வி-- நினைவில் நிற்கும் பழைய ஞாபகங்கள் எனும் கட்டுரை.

கட்டுரையானது, நமது தமிழ் ஆசிரியர்களுக்கு பல

வெள்ளி, 10 ஜனவரி, 2025

மாதிரி வினாப்பத்திரம் க.பொ.த. (சா.த) 2025 PDF

எதிர்வரும் மார்ச் மாதம் க.பொ.த. (சா.த) பரீட்சை நடைபெறவுள்ளது. மாணாக்கர் பல்வேறு வினாப்பத்திரங்களையும் தேடியெடுத்து, அவற்றைச் செய்து பார்த்து, தங்களது புள்ளிகளைக் கூட்டிக் கொள்ள ஆவன செய்ய வேண்டும். இங்கே பகுதி 1, பகுதி 2, பகுதி 3 வினாக்களைக் கொண்ட வினாப்பத்திரமொன்று இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கிக் கொள்ளலாம். உங்களது