நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது உவமையணி. அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடர் ஆகும். இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன.
- அத்தி பூத்தாற்போல் - எப்போதாவது
- அச்சில்லா தேர்போல் - ஒன்றும் செய்ய முடியாத நிலை
- அனலில் இட்டமெழுகுபோல் - துன்பத்தால் மனம் உருகுதல்
- அணை கடந்த வெள்ளம் போல - கட்டுக் கடங்காதபோது
- ஆனை வாய் அகப்பட்ட கரும்பு போல் - ஒன்றும் செய்ய முடியாத நிலை
- ஆழ்கடல் முத்துப் போல - பெறுமதி மிக்கது
- ஆடி ஓய்ந்த பம்பரம் போல - ஓய்ந்து போதல்
- இலைமறை காய்போல் - ஆற்றல் வெளிப்படாமல் இருத்தல்
- இலவு காத்த கிளிபோல் - காத்திருந்து ஏமாறுதல்
- இரண்டு தோணியிற் கால் வைத்தாற்போல் - செய்யமுடியாது இருத்தல்
- இடியோசை கேட்ட நாகம் போல - பயப்படல்
- உள்ளங்கை நெல்லிக் கனி போல் - கவனமாக வைத்திருத்தல்
- ஊமை கண்ட கனவு போல் - கூற முடியாத நிலையில் இருத்தல்
- ஒரு தாய் வயிற்று பிள்ளை போல் - ஒற்றுமை
- ஓடும் புளியம் பழமும் போல - ஒட்டுறவின்றி இணைந்திருத்தல்
- கலங்கரை விளக்கம் போல் - உதவல்
- கடன்பட்டார் நெஞ்சம் போல் - மனம் கலக்கம் அடைதல்
- கனியிருக்க காய் கவருவது போல - நல்லவற்ற்றை வெறுத்து தீயவற்றை நாடுதல்
- காட்டுத் தீபோல் - ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்
- கிணற்றுத் தவளை போல - வெளியுலகம் தெரியாதிருத்தல்
- கீரியும் பாம்பும் போல் - எப்போதும் பகை உணர்ச்சி
- குரங்கின் கைப் பூமாலை போல - சேதமடைதல்
- குன்றின் மேல் விளக்குப்போல் - எல்லோரினாலும் அறியப்படட திறமை
- கொழு கொம்பற்ற கோடி போல - ஆதாரமற்று நிற்றல்
- சிவபூசையில் கரடி புகுந்தது போல - நன்மைக்கு இடையூறு
- சிலை மேல் எழுதுப்போல் - மனதில் அழியாமல் பதிந்திருத்தல்
- சித்திரப் பதுமை போல - அடக்கமாய் இருத்தல்
- சூரியனைக்கண்ட பனி போல் - பெருந்துன்பம் நீங்குதல்
- செவிடன் காதிற் சங்கு ஊதியது போல - பயனற்ற முயற்சி
- தலையிருக்க வால் ஆடுவது போல - உரியவரை மீறி சார்ந்திருப்பவர் முன்னிற்பது
- தூண்டிலில் அகப்பட்ட மீன் போல - துன்பப்படல்
- நகமும் சதையும் போல் - ஒட்டி உறவாக இருத்தல்
- நீர் மேல் எழுத்துப் போல - நிலையில்லாமை
- நுனிப் புல் மேய்ந்தாற் போல - மேலோட்டமாகச் செய்தல்
- பச்சைக்கம்பளம் விரித்தாற்போல் - பசுமை
- பசுத்தோல் போர்த்திய புலி - நல்லவன் போல் நடித்தல்
- மலரும் மணமும் போல் - பிரியாமல் சேர்திருத்தல்
- மதில் மேற் பூனை போல - தீர்கமான முடிவு எடுக்க முடியாதிருத்தல்
- வளர்த்த கடா மார்பிற் பாய்ந்தாற் போல - நன்றி மறத்தல்
- வெள்ளிடை மலை போல் - தெட்டத்தெளிவு
- வேலியே பயிரை மேய்ந்தாற் போல - பாதுகாப்பு இன்மை
- வைக்கோல் போர் நாய் போல - தானும் அனுபவியாது பிறரையும் தடுத்தல்.
#education #tamil #australia #india #srilanka #tamillanguage and #literature #thamilshshudar #kalaimahanfairooz
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக