📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
தரம் 9 - 13 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தரம் 9 - 13 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 ஜூன், 2025

தமிழில் கலந்துள்ள தெலுங்கு மொழிச் சொற்கள்

 தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்

--------------------------------------------------------------------

தெலுங்குமொழிச் சொற்களிற் சில...

---------------------------------------------------------

  •  அப்பட்டம்−கலப்பில்லாதது
  • ஆஸ்தி−செல்வம்
  • எக்கச்சக்கம்−மிகுதி
  • ஏடாகூடம்− ஒழுங்கில்லாமை
  • ஏராளம்−மிகுதி
  • ஒய்யாரம்-குலுக்கு நடை
  • கச்சிதம்− ஒழுங்கு
  • கெட்டியாக− உறுதியாக
  • சந்தடி−இரைச்சல்(கம்பியூட்டர் சிறுகதையில் வரும் ஒருசொல்)
  • சரக்கு− வாணிகப் பொருள்
  • சாகுபடி−பயிரிடுதல்
  • சொகுசு− நேர்த்தி
  • சொச்சம்−மிச்சம்
  • சொந்தம்− உரிமை

புதன், 18 ஜூன், 2025

🌍 உலகில் பேசப்படும் பழைய மொழிகள் - தமிழ்ச்சுடர்

🌍 உலகில் பேசப்படும் பழைய மொழிகள் – ஒரு பார்வை

மொழி என்பது ஒரு மக்களின் கலாச்சாரம், வரலாறு மற்றும் அறிவின் பிரதிபலிப்பாகும். உலகில் பல மொழிகள் இன்று மறைந்து கொண்டிருக்கின்றன, ஆனால் சில மொழிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவை அழியாமல் இன்று வரை உயிருடன் இருந்திருப்பது மிகவும் அதிசயமான விடயமாகும்.

🏛️ பழமையான மொழிகளின் வரிசை

1. தமிழ் (Tamil)

  • பழமை: கிமு 500 இற்கும் முந்தைய காலம்
  • இன்றும் பேசப்படுகிறதா? ஆம்
  • தன்மை: இந்தியாவின் செம்மொழி, சங்க இலக்கிய மரபு
  • பேசப்படும் இடங்கள்: இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கென்யா, கனடா, ஐரோப்பா

2. சமஸ்கிருதம் (Sanskrit)

  • பழமை: கிமு 1500 – வேத காலம்
  • இன்றும் பேசப்படுகிறதா? ஒரு சில இடங்களில்
  • தன்மை: இந்திய தர்ம சாஸ்திரங்களின் மொழி

ஞாயிறு, 2 மார்ச், 2025

தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகள்

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். இவற்றில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவையாவன

அ - எட்டு 

ஆ -  பசு 

இ - அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி

ஈ -  கொடு, பறக்கும் பூச்சி 

உ -  சிவன் 

ஊ - தசை, இறைச்சி 

சனி, 25 ஜனவரி, 2025

இலக்கண வினாக்கள் | இலக்கண - பல்தேர்வு வினா விளக்கங்கள்

 தமிழ் இலக்கண வினாக்கள் - அவற்றிற்கான விடைகள் இங்கு இற்றைப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். தமிழ்மொழி ஆர்வலர்கள். ஏனையோருக்கும் இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தவும். 

உங்கள் வினாக்களையும் இங்கு வினவவும்.  

1. தன் வினையாகவும் பிற வினையாகவும் அமையும் சொல் பின்வருவனவற்றுள் எது? 1.எரி 2.உண்

வியாழன், 16 ஜனவரி, 2025

அளபெடை என்றால் என்ன? அளபெடை எத்தனை வகைப்படும்?

அளபெடை

​செய்யுளொன்றில் ஓசை குறையும் போது அந்த இடத்திலுள்ள எழுத்தோடு அதன் இணை எழுத்தையும் சேர்த்து ஓசையை நிறைவு செய்வர். இதற்கு அளபெடை என்று பெயர். அளபெடை இரு வகைப்படும்.

அ. உயிரளபெடை

ஆ. ஒற்றளபெடை


1.உயிரளபெடை