புதன், 7 மே, 2025
மீன் பாடுமா?
வியாழன், 24 ஏப்ரல், 2025
தரம் 4 - தரம் 5 | சரியான சொல்லைத் தெரிந்து கோடிடுதல்
தமிழில் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுவதே சிறப்பானது. ஒலி வேறுபாட்டுச் சொற்களுக்கு ஏற்ப, அவற்றின் பொருள்களும் வேறுபடும் என்பதை மாணவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும்.
இங்கு ஒவ்வொரு வினாவிலும் மூன்று சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
வியாழன், 27 மார்ச், 2025
ஆங்கிலப் பழமொழிகளுக்கு நிகரான தமிழ்ப் பழமொழிகள் கற்போமா?
செவ்வாய், 18 மார்ச், 2025
உவமைத் தொடர்கள் அகர வரிசையில்
நன்கு தெரிந்த ஒரு பொருளின் இயல்பை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளின் இயல்பை விளக்குவது உவமையணி. அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடர் ஆகும். இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன.
- அத்தி பூத்தாற்போல் - எப்போதாவது
- அச்சில்லா தேர்போல் - ஒன்றும் செய்ய முடியாத நிலை
- அனலில் இட்டமெழுகுபோல் - துன்பத்தால் மனம் உருகுதல்
- அணை கடந்த வெள்ளம் போல - கட்டுக் கடங்காதபோது
- ஆனை வாய் அகப்பட்ட கரும்பு போல் - ஒன்றும் செய்ய முடியாத நிலை
- ஆழ்கடல் முத்துப் போல - பெறுமதி மிக்கது
சனி, 15 மார்ச், 2025
பழமொழிகளும் அவற்றின் பொருள்களும் அகர வரிசையில்
- அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு - ஒற்றுமையே பலம்.
- அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம் - உத்தம நட்பு
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு - எல்லை மீறினால் எதுவும் தீமை பயக்கும்.
- அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் - விடா முயற்சி பலன் தரும்.
- அழுத பிள்ளை பால் குடிக்கும் - முயற்சி செய்தவர் பயன் பெறுவர்
- அணை கடந்த வௌ்ளம் அழுதாலும் வராது - நடந்து முடிந்த செயலை நினைப்பதில் பலனில்லை.
ஞாயிறு, 2 மார்ச், 2025
தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகள்
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். இவற்றில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவையாவன
அ - எட்டு
ஆ - பசு
இ - அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி
ஈ - கொடு, பறக்கும் பூச்சி
உ - சிவன்
ஊ - தசை, இறைச்சி
சனி, 1 மார்ச், 2025
சிந்திக்கத்தக்க அருமந்த பழமொழிகள்
1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. கரந்தப் பால் காம்பில் ஏறாது.
8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை.
9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
செவ்வாய், 11 பிப்ரவரி, 2025
மரபுப் பெயர்கள்
சனி, 25 ஜனவரி, 2025
இணைமொழிகள் எத்தனை வகைப்படும்?
- ஒத்த கருத்துள்ள இணைமொழிகள்
சனி, 18 ஜனவரி, 2025
உவமைத் தொடர்கள் | அவற்றின் பொருள்கள் | உதாரணங்கள்
நன்கு தெரிந்த பொருளை நினைவுறுத்தி, தெரியாத ஒரு பொருளை விளக்குவது உவமையணியாகும். அத்தகைய உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத்தொடர் ஆகும்.
இவ்வுவமைத் தொடர்கள் வாக்கியங்களில் அழகும், கருத்துகளை ஆணித்தரமாக விளக்குவதற்கும் உதவுகின்றன.
திங்கள், 13 ஜனவரி, 2025
ஓரெழுத்து ஒருமொழி பற்றித் தெரிந்துகொள்வோம்
வெள்ளி, 3 ஜனவரி, 2025
ஆண்டு நிறைவு விழாக்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்
உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
ஆண்டு நிறைவு விழாக்கள் எனும்போது எங்கள் எல்லோருக்கும் வௌ்ளிவிழா, பொன்விழா, வைர விழா, அமுத விழா, நூற்றாண்டு விழா