◆ A Penny saved is a penny gained.
சிறு துளி பெருவெள்ளம்.
◆ A good horse often wants a good Spur.
சுடர் விளக்காயினும், தூண்டுகோல் வேண்டும்.
◆ A lamb at home and lion at chase.
பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
◆ A burnt child dreads fire.
சூடுபட்ட பூனை அடுப்படியை அண்டாது.
◆ A sound mind is a sound body.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
◆ A crying child will get milk.
அழுகின்ற குழந்தைதான் பால் குடிக்கும்.
◆ A little knowledge is dangerous.
அரைகுறை அறிவு ஆபத்தானது.
◆ A bad carpenter quarrels with his tools.
ஆடத்தெரியாதவனுக்கு தெருக்கோணல்.
◆ A tree is known by its fruits.
தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை.
◆ A bold attempt is half success.
அரைகுறை அறிவு ஆபத்தானது.
◆ A young calf knows not fear.
இளங்கன்று பயமறியாது.
◆ A guilty conscience needs to accuser.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
A little stream will drive a light mill.
சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
◆ All are not saints that go to church
வெளுத்தது எல்லாம் பாலாகுமா?
◆ Art is long and life is short.
கல்வி கரையில, கற்பவர் நாள் சில.
◆ A hasty man never wants voe.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
◆ "After death the doctor".
கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்.
◆ A hog is armour but still hog.
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
◆ A black hen lays a while egg.
வெளுத்தது எல்லாம் பாலாகுமா?
◆ Barking dog seldome bite.
குரைக்கிற நாய் கடிக்காது.
◆ Blood is thicker than water.
தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
Bare words buy no barely.
வெறுங்கை முழம் போடுமா?
◆ Birds of the same feather flock together.
இனம் இனத்தோடு சேரும்.
◆ Coming events cast their shadows before
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே.
◆ Covert not lose not.
பேராசை பெரு நஷ்டம்.
◆ Cast no pearls before the swine.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
◆Child is the father of the man.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
◆ Charity begins at home.
தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்.
◆Do not add fuel to the flame.
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாதே.
◆ Distance lends enchantment to the view.
இக்கரைக்கு அக்கரை பச்சை.
◆ Death keeps no calender.
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.
◆ East or west, home is the best.
எலி வளையானாலும் தனி வளை வேண்டும்.
◆ Eagles don't catch Flies
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
◆ Empty vessels make more noise.
குறைகுடம் கூத்தாடும்.
◆ Evil begetith evil.
கெடுவான் கேடு நினைப்பான்.
◆ Every tide has its ebb.
சாண் ஏறினால் முழம் சறுக்கும்.
◆ Eat to live, don't live to eat.
வாழ்வதற்காக உண், உண்பதற்காக வாழாதே.
◆ Every cock will crow upon his own dunghill
வீட்டில் எலி வெளியில் புலி.
◆ Even a demon will pity a woman.
பெண் என்றால் பேயும் இரங்கும்.
◆ Experience is the mother of wisdom.
அனுபவமே அறிவின் பிறப்பிடம்.
◆ Familitarity breeds contempt.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
◆ Face is the index of the mind.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
◆ Failure is the stepping stone to success.
தோல்வியே வெற்றிக்கு முதல் படி.
◆ First deserve, then desire.
முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?
◆ Great homer sometimes nods.
யானைக்கும் அடி சறுக்கும்.
◆ Gold key opens every door.
பணம் பத்தும் செய்யும்.
◆Haste makes waste.
பதறிய காரியம் சிதறும்.
◆Health is Wealth.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
◆ Honest is the best policy.
நேர்மையே சிறந்த கொள்கை.
◆ Hunger breaks dtone walls
பசி வந்தால் பத்தும் பறந்தோடும்.
◆ Idleness is the root cause of all ilness.
எல்லா இன்னல்களுக்கும் சோம்பலே அடிப்படை
◆ If a crab gets fat it will not stay in its hole.
கிளிக்கு இறக்கை முளைத்தால் கூண்டில் இருக்காது.
◆ Kidness cannot by gought.
அருளை வாங்க முடியாது.
◆ Kidness cannot be bought.
அன்பை விலைக்கு வாங்க முடியுமா?
◆ Little drops of water make the mighty ocean.
சிறு துளி பெருவெள்ளம்.
◆Live and let live.
வாழ் அல்லது வாழ விடு.
◆ Look before you Leap
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
◆ Man proposes God disposes.
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.
◆ Money makes many things.
பணம் பத்தும் செய்யும்.
◆Many a slip between the cup and lip.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
◆ Measure is a Treasure
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.
◆Manners makes the Man
ஒழுக்கம் உயர்வு தரும்.
◆ Make hay while sunshines.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
◆ No pain no gain.
உழைப்பின்றி ஊதியமில்லை.
◆ No smoke without fire.
நெருப்பில்லாமல் புகையாது.
◆ Necessity is the mother of invention.
தேவையே கண்டுபிடிப்பின் தாய்.
◆ Necessity has no law.
ஆபத்துக்கு பாவம் இல்லை.
◆ Nip the briar in the bud.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
◆ One flower makes no garland.
தனிமரம் தோப்பாகாது.
◆One lie makes many.
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் காரணமாகும்.
Practice makes one perfect.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
◆ Self help is the best help.
தன் கையே தனக்கு உதவி.
◆ Slow and steady wins the race.
பொறுத்தார் பூமி ஆள்வார்.
◆ Strike while the iron is hot.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
◆Tit for tat.
பழிக்குப் பழி.
◆ Time and Tide wait for none.
ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்காது.
◆ Think before you speak.
பேசும் முன் யோசி.
◆ Take time by the fore lock
காலத்தே கடமையைச் செய்.
◆ Too much of anything is good for nothing.
அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சு.
◆ The pen is mightier than sword.
வாள் முனையினும் பேனா முனையே கூர்மையானது.
◆ The law-maker should not be a law breaker.
வேலியே பயிரை மேயலாமா?
To the good people world appears good.
நல்லோருக்கு உலகம் நல்லதாகவே தோன்றும்.
(மொழித்திறன் விருத்தியில் கற்றவை.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக