📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
ஹாலித் பைரூஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹாலித் பைரூஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஏப்ரல், 2025

பெற்ற மனம் | சிறுகதை - ஹாலித் பைரூஸ்

    சித்திரைப் புத்தாண்டிற்கு பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு மாதம் விடுமுறை கிடைத்த சந்தோசத்தில் புத்தகப்பையைத் தோளில் சுமந்தவாறு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் வந்து நின்ற பேருந்தில் ஏறிய சுமந்திரனுக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. ஒரு இருக்கையில் வயதான முதியவர் ஒருவரும் பக்கத்தே அவரது வயதான மனைவியும் அமர்ந்திருந்தனர். அவ்விரு ஆசனங்களையும் தவிர ஏனைய அனைத்து ஆசனங்களும் வெறிச்சோடிக் கிடந்தன. வழமைக்கு மாறாக இன்று இப்படி இடம் கிடைத்தது பற்றி அவனால் நினைத்துப் பார்க்கவும் இயலவில்லை. வேறு நாட்களில் நின்றுகொண்டுதான்