📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
மொழியறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழியறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 ஜூலை, 2025

இலக்கணைத் தொடர்கள் (மரபுத் தொடர்கள்) | THAMILSH SHUDAR

இலக்கணைத் தொடர்கள்

அடி பற்றிய இலக்கணைத் தொடர்கள்

  • அடிக்கீழ்ப்படுத்துதல் வென்று தன் ஆணைக்கு உள்ளாக்குதல்
  • அடிகோலுதல் ஆயத்தம் செய்தல்
  • அடிசாய்தல் அடியில் நிழல் சாய்தல், உச்சிக் கதிரவன் மேற்கு நோக்கிச் சாய்தல்
  • அடி திரும்புதல் பொழுது சாய்தல்
  • அடி தொடுதல் பிறர் பாதம் தொட்டு சபதம் செய்தல்
  • அடி நகர்தல் இடம்விட்டுப் பெயர்தல்

திங்கள், 14 ஜூலை, 2025

மெல்ல கற்கும் மாணவர்கள் – அவர்களின் இயல்புகளும் கையாளும் நுட்பங்களும்

மெல்ல கற்கும் மாணவர்கள் – அவர்களின் இயல்புகளும் கையாளும் நுட்பங்களும்

இக்கட்டுரை முதலில் கலைமகன் பைரூஸ் அவர்களின் கலைமகன் ஆக்கங்கள் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. இது ஆசிரியர்கள், பெற்றோர்கள், விசேட தேவைக் குழந்தைகள் ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பெரிதும் பயன்படும் வகையில் எழுதப்பட்டது.

மெல்ல கற்கும் மாணவர்கள் என்றால் என்ன? அவர்களின் இயல்புகள் என்ன? அவர்களை எப்படி அடையாளம் காணலாம்? அவர்களுக்கு ஏற்ற கல்வி முறைகள் எவை? என்பதை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.