இலக்கணைத் தொடர்கள்
அடி பற்றிய இலக்கணைத் தொடர்கள்
- அடிக்கீழ்ப்படுத்துதல் வென்று தன் ஆணைக்கு உள்ளாக்குதல்
- அடிகோலுதல் ஆயத்தம் செய்தல்
- அடிசாய்தல் அடியில் நிழல் சாய்தல், உச்சிக் கதிரவன் மேற்கு நோக்கிச் சாய்தல்
- அடி திரும்புதல் பொழுது சாய்தல்
- அடி தொடுதல் பிறர் பாதம் தொட்டு சபதம் செய்தல்
- அடி நகர்தல் இடம்விட்டுப் பெயர்தல்