இலக்கணைத் தொடர்கள் (மரபுத் தொடர்கள்) | THAMILSH SHUDAR
இலக்கணைத் தொடர்கள்
அடி பற்றிய இலக்கணைத் தொடர்கள்
-
அடிக்கீழ்ப்படுத்துதல்
வென்று தன் ஆணைக்கு உள்ளாக்குதல்
-
அடிகோலுதல்
ஆயத்தம் செய்தல்
-
அடிசாய்தல்
அடியில் நிழல் சாய்தல், உச்சிக் கதிரவன் மேற்கு நோக்கிச் சாய்தல்
-
அடி திரும்புதல்
பொழுது சாய்தல்
-
அடி தொடுதல்
பிறர் பாதம் தொட்டு சபதம் செய்தல்
-
அடி நகர்தல்
இடம்விட்டுப் பெயர்தல்
-
அடிப்படுதல்
பழைமையாக வருதல்
-
அடிப்படுத்துதல்
கீழ்ப்படுத்துதல்
-
அடி பிடித்தல்
தொடருதல்
-
அடி பிழைத்தல்
நெறி தவறி நடத்தல்
-
அடி பிறக்கிடுதல்
பின் வாங்குதல் / தோற்றோடுதல்
-
அடியிடுதல்
தொடங்குதல்
-
அடயுறை
பாத காணிக்கை
-
அடியுறைதல் / அடியிலேயுறைதல்
வழிபடுதல் / அடி நிழலில் நிற்றல் / ஒருவருடைய பாதுகாப்பிற்குள்ளாதல்
-
அடியொற்றுதல்
பின்பற்றுதல்
கண் பற்றிய இலக்கணைத் தொடர்கள்
- கண்கலத்தல்ஒருவரை ஒருவர் பார்த்தல் / எதிர்ப்படுதல்
- கண் களவு கொள்ளுதல்தான் பிறரைப் பார்ப்பதை அவன் காணாதவாறு , தான் அவனைப் பார்த்தல்
- கண் கனலுதல்கோபத்தால் கண்கள் சிவத்தல்
- கண் காட்டிவிடுதல்கண் சாடையால் ஏவிவிடுதல்
- கண் கெடப் பேசுதல்கண்டொன்று சொல்லுதல்
- கண் சாத்துதல்அன்போடு பார்த்தல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக