இலக்கணைத் தொடர்கள் - 2
கழுத்துப் பற்றிய இலக்கணைத் தொடர்கள்
- கழுத்தறுத்தல் பெரும் துன்பத்த்திற்கு உள்ளாக்குதல். / தீமை செய்தல்
- கழுத்திற் கட்டுதல் வலிந்து பொறுப்பாளியாக்குதல்
- கழுத்துக் கொடுத்தல் தன் வருத்தம் பாராமல் பிறர் காரியத்தை ஏற்று நிற்றல் / வாழ்க்கைப்படுதல்
- கழுத்து முறித்தல் வருத்துதல் / நிர்ப்பந்தித்தல்
- கழுத்தைக் கட்டுதல் விடாது நெருக்குதல்