📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 28 ஜனவரி, 2025

பழந்தமிழரும் இரும்பும்

இலக்கியச் சான்றுகள் :-

இற்றைக்கு 5200 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் இரும்பினைப் பயன்படுத்தியிருப்பதும், தமிழர்களே இரும்பினை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள் என்ற செய்தி வந்திருப்பதும் தெரிந்ததே! இந்த இரும்புப் பயன்பாடு பற்றிச் சங்க இலக்கியங்கள் என்ன சொல்லுகின்றன என இப் பதிவில் பார்ப்போம். பழந்தமிழர் இரும்புத் தாதுக்களைச் சேகரித்துச் சிறிய களிமண் உலையில் தோல் துருத்தியின் உதவியால் இரும்பை உருக்கி வந்திருப்பதைச் சங்க இலக்கியங்களின் வழியாக அறியமுடிகின்றது. உலைக்கலன்கள் இருந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் கொடுமணலில் கிடைத்தள்ளன (முதலாவது படம் காண்க). இத்தகைய இரும்பு உலைகள் சூடான நிலையில் காணப்படுவதைப் பின்வரும் பாடல்வரிகள் காட்டுகின்றன.

`இரும்புசெய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த
தோய்மடற் சின்னீர் போல `
: நற்றிணை 133 :9-10

தலைவியின் காமநோய் சிறிது தணிவதற்கு உவமையாக `உலைக்கலனில் கொதிக்கும் இரும்பின் மீது நீர் தெளிக்கும் போது சூடு குறைவது` உவமையாகக் கூறப்படுகின்றது. மக்கள் அக் காலப் பகுதியில் நன்கு அறிந்திருந்த ஒன்றினையே புலவர்கள் உவமையாகக் கூறுவர், அவ்வாறாயின் உலைக்கலன்கள் அன்று பழந்தமிழரால் நன்கு அறியப்பட்டிருந்தது என்பதுதானே பொருள்.

அகநானூறு 202 ஆவது பாடலிலும் (அகம் 202: 5-7), அகநானூறு 72 ஆவது பாடலிலும் (அகம் 72: 3-6) உலைக்களத்தில் தீப்பொறிகள் பறக்கும் செய்திகள் சொல்லப்படுகின்றன.
இரும்பு உருக்கும் இடம் `உலைக்களம்` எனவும் , உருக்கப்பட்ட இரும்பில் இருந்து கருவிகள் செய்யப்படும் இடம் ‘கொற்றுறை’ எனவும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

`பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்`
: புறநானூறு 95: 4-5
இரும்பு உருக்கும் தொழிலுக்குக் குறடு , துருத்தி ஆகிய கருவிகள் பயன்படுத்தப்பட்டமையினைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. துருத்தியும் உலையும் இணையும் இடமானது, அதாவது துருத்தியின் குழாய் முனையானது `குருகு` எனப்படுகின்றது. குருகு எனப்படும் துருத்தியின் குழாய் முனையினை `உலைமூக்கு` எனவும் சொல்வர். இத்தகைய குருகு பற்றிய செய்தி அகநானூற்றுப் பாடலில் உண்டு.

`நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி`
அகநானூறு 202 : 5-6

இரும்பின் மூலம் என்னென்ன கருவிகள் செய்யப்பட்டன? வேல், வில், அம்பு, வாள் போன்ற போருக்கான ஆய்தங்களும் அரிவாள், மண்வெட்டி போன்ற உழவுத் தொழிலுக்கான கருவிகளும் செய்யப்பட்ட செய்திகளைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அதற்கான தொல்லியல் சான்றுகளை இரண்டாவது மூன்றாவது படங்களில் காண்க {சிவகளை, ஆதிச்சநல்லூர் தொல்லியல் சான்றுகள்}.

இரும்பு துருப்பிடிக்காமல் நெய் பூசிக் காக்கும் முறையினை புறநானூறு 95 ஆவது பாடலில் { காழ்திருத்திநெய் யணிந்து} காணலாம்.
இரும்பிலிருந்து எஃகு ( Steel ) செய்யப்படுவது தெரிந்ததே! எஃகு பற்றிய செய்தி நற்றிணையில் வருகின்றது.
`நெய் பட்டன்ன நோன்காழ் எஃகின்`
: நற்றிணை 324-5
இவ்வாறு எண்ணற்ற இரும்புப் பயன்பாடு பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன, அவன்றினை இன்று வெளியான தொல்லியல் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன.

இலங்கநாதன் குகநாதன்

----------------------------------------------------------------------------

இரும்பின் பயன்பாடு தெரியாத சிந்து சமவெளி நாகரிகத்தை விட... அதே காலகட்டத்தில் வாழ்ந்த இரும்புக்கருவிகள் பயன்படுத்திய தமிழர் நாகரிகம் பல நூற்றாண்டுகள் முன்னோடி நாகரிகம் என்று நிரூபணம் ஆகியுள்ளது.

சிந்து சமவெளி நாகரிகம் செப்பு கருவிகளை மட்டுமே பயன்படுத்தியது. செப்பை உருக்கி கருவிகள் செய்ய 1085°c வெப்பம் தேவை. ஆனால்... இரும்பை உருக்கி கருவிகள் செய்ய 1538°c வெப்பம் தேவை. இதன்மூலம்... தொழில்நுட்பத்தில் முன்னோடியாக கருதப்பட்டு வந்த சிந்துசமவெளி நாகரிகத்தை விடவும்... தொழில்நுட்பத்தில்... தமிழர் நாகரிகம் மிகவும் முன்னேறிய... அதி நவீன முன்னோடி நாகரிகம் என்பது நிரூபிக்கப்பட்டு... இந்தியாவின் #TheNewIronAge என்கிற #புதியஇரும்புக்காலம் நம் தமிழ்நாட்டில் இருந்து துவங்கியது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரையில்..
எகிப்தியர்தான் உலகில் முதன் முதலில் இரும்பை பயன்படுத்தியவர்கள் என்ற வரலாறு மாற்றப்பட்டு... அண்டோலியர்தான் உலகில் முதன் முதலில் இரும்பை உருக்கி கருவிகள் செய்தவர்கள் என்கிற வரலாறும் மாற்றப்பட்டு...

தமிழர்கள்தான் இவ்வுலகில் முதன்முதலில் இரும்பை உருக்கி கருவிகள் செய்தனர் என்கிற புதிய வரலாறு உருவாகியுள்ளது..!
ஆதலால்...
இனிமேல் இந்திய பள்ளிகளில்.... வரலாறு பாடநூற்களில்... தனது முதல் பாடமாக தமிழ் நாகரிகம் பற்றி கற்பித்து விட்டு அதன் பிறகே... சிந்து சமவெளி நாகரிகம் பற்றி கற்பிக்க வேண்டும். இவ்வருடம்... அனைத்து இந்திய வரலாற்று பாடநூல்கள் மட்டுமின்றி... அனைத்துலக பாடநூல்களும்.... "எகிப்திய, சுமேரிய, சிந்துசமவெளி" என்பதை மாற்றி... தமிழக, எகிப்திய, சுமேரிய, சிந்துசமவெளி நாகரிகங்கள்" என நாகரிக வரிசையை புதுப்பிக்க வேண்டியுள்ளது..!

----------------------------------------------------------------------------



--------------------------------------------------
#இரும்பை கண்டுபிடித்தவர் யார் என கேட்டால் விடையாக Henry Bessmer, Engaland - 1856 என்று தானே சொல்வோம் இதுவரை...

இனி அப்படி சொல்வோமா?

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழி, எலும்பு கூடுகள், இரும்பு மற்றும் பித்தளை பொருட்கள், கலைப்பொருட்கள், ஆயுதங்கள், தங்க ஆபரணங்கள் போன்றவை கிறித்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை.

அதில் ஒரு பொருளின் அகவை கி.மு.905, மற்றொரு பொருளின் அகவை கி.மு.791 என்றும் தெரியவந்துள்ளது. அதாவது கி.மு 10 – ஆம் நூற்றாண்டு மற்றும் கி.மு.8 – ஆம் நூற்றாண்டு என்கிறது (CARBON -14. TEST) ஆய்வறிக்கை.

கி.மு. 8 - ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழன் நாகரீகத்தோடு வாழ்ந்திருகின்றான். உலோக பொருட்களையெல்லாம் கையாண்டு இருக்கின்றான். அதிலும் குறிப்பாக ‘இரும்பு’ அவன் வாழ்வியலோடு ஒன்றர கலந்திருக்கிறது என்பதெல்லாம் நமக்கு வியப்பான செய்திகள்.

‘இரும்பு வடித்தன்ன கருங்கைக் கொல்லன்(கம்மாளர் சமூகம்)
‘இரும்பு வடித்தன்ன மடியா மென்தோல் கருங்கை வினைஞர் காதலம் சிறாஅர்.’ - என
பழந்தமிழர்களுக்கும் இரும்புக்குமான உறவை எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் பறைச்சாற்றுகிறது.

‘அதியமான் நெடுமான் அஞ்சி’
அவரது தலைநகர் - தகடூர்.

இரும்பை வெட்டியெடுத்து அதை தகடாக்கும் தொழில் செய்யும் ஊர் என்பதால் அதற்கு தகடூர் என்று பெயர். இரும்பு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அதியமான், கடல் கடந்து பல்வேறு தேசங்களில் தனது இரும்பு வணிகத்தை நிலை நாட்டினார். அதிலொன்று துருக்கி நாடு. உருக்கி என்பது தான் துருக்கி என்று விளங்கியிருக்க கூடும். அந்த துருக்கியில் இன்றும் அதியமான் பெயரில் நகரம் இருக்கிறது.

ஆனால், பதினெட்டாம் நூற்றாண்டின் பாதியில் வந்த அந்த வெள்ளக்காரன்தான் இரும்பை கண்டுப்பிடித்தான் என்று திரித்து எழுதப்படுகிறது வரலாறு. ஆதிச்சநல்லூர் வரலாறு மட்டுமல்ல ; ஆதிதமிழர்களின் வரலாறுகளிலும் இந்த திரிபுவாத கும்பலில் கைங்கர்யம் நிறைய உண்டெனும் புரிதல் ப்ரியனுக்கு உண்டு.

தாழி பானை ஓடுகளில் காணப்படும் எழுத்துக் கீறல்களெல்லாம் விட்டுத்தள்ளுங்கள், இந்த தாளிப்பனைகள் பெற்றெடுத்த ஓலைச்சுவடிகளில் உழுத எழுத்தாணி ஒன்றுபோதுமே, தமிழர் இருப்பின் வரலாற்றுக்கு சாட்சியாக, இரும்பின் வரலாற்றுக்கு சாட்சியாக.
ரிக் வேதத்தின் உண்மையான பெயரே உருக்கு வேதம் என்பது தான். அதாவது உலோகங்களை உருக்கும் தொழில் நுட்ப ரகசியம் தான்.

ஆதிச்சநல்லூர் என்கிற
ஆதி ‘எச்ச’ நல்லூர் மட்டுமல்ல;

அதையும் தாண்டி, நமது கவனத்தை திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை மீதும் வைத்தாக வேண்டியது வரலாற்றின் தேவையாகும்.

பலநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த
பழைய கற்காலக் கல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அங்குதான்.....

- வீர நாச்சியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக