📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
ஐயமும் தௌிவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐயமும் தௌிவும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஜூன், 2025

“Sir” என்ற சொல்லின் உண்மை வரலாறும் தவறான கருத்துகளும்

“Sir” என்ற சொல்லின் உண்மை வரலாறும் தவறான கருத்துகளும்

✍️ எழுதியவர்: கலைமகன் பைரூஸ்
“தமிழின் வாயிலாக உலகை வாசிப்போம்” – தமிழ்ச்சுடர்

🔹 “Sir” என்ற சொல்லின் உண்மை வரலாறு

“Sir” என்பது இன்றைய ஆங்கிலத்தில் மரியாதையாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இதன் வேர்ச்சொல் பழைய பிரஞ்சு மொழியில் இருந்து வந்தது.

Old French “sire” → Lord, King, Honoured Person

  • “Sire” என்பது அரசர், மாண்புமிகு நபர் என்பதைக் குறிக்கும்.
  • Middle English-இல் “sir” ஆக மாறியது.
  • அரண்மனையின் வீரர்களுக்கு (knights) வழங்கப்பட்ட பட்டம்.

உதாரணம்: Sir Isaac Newton, Sir Arthur Conan Doyle

🔸 தவறான நம்பிக்கை – “Sir = Slave I Remain”?

இது இணையத்தில் பரவி வரும் தவறான விளக்கம். “Sir” என்ற வார்த்தை “Slave I Remain” என்ற சுருக்கம் அல்ல.

இது வரலாற்று ஆதாரம் ஏதும் இல்லாத பிந்தைய புனைபெயர் (backronym) மட்டுமே.

வியாழன், 5 ஜூன், 2025

Swami Vipulananda எனும் பெயரை தமிழில் எழுதுவதில் சர்ச்சையா?

 

A.1.விபுலாநந்தா கல்லூரி.

2.விபுலானந்தா கல்லூரி.

3.விபுலாநந்தாக் கல்லூரி.

4.விபுலானந்தாக் கல்லூரி.


B.1.விக்கினேஸ்வரா கல்லூரி.

2.விக்னேஸ்வரா கல்லூரி.

3.விக்கினேஸ்வராக் கல்லூரி.

4.விக்னேஸ்வராக் கல்லூரி.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

உதவினான் என்பது தன்வினையா? பிறவினையா? தௌிவுறுத்தவும்.

தமிழாசிரியர்கள் குழுமத்தில் கேட்கப்பட்ட வினாவே. 'உதவினான் என்பது தன்வினையா? பிறவினையா?' என்பது. இதற்கான தௌிவினை மதிப்பிற்குரிய றபீக் மொஹடீன் ஆசிரியர் வழங்கியிருந்தார்.

ஆசிரியரின் கருத்துக்கள் இங்கு இற்றைப்படுத்தப்படுகின்றது. 

செவ்வாய், 28 ஜனவரி, 2025

தேங்காயெண்ணெய் என்பது சரிதானா?

தேங்காயெண்ணெய் என்பது பிழைதானே... என்றாலும்...?

தேங்காய் + எண்ணெய் = தேங்காயெண்யெண் என்று பலரும், நான்கூட இன்றுவரை சொல்லிவருவதே வழக்கமாக உள்ளது. என்றாலும் இவ்வாறு சொல்வதில் பிழையுள்ளது என்று ஆழ்மனதில் பல காலங்களாக வந்துபோகிறது. என்றாலும், ‘ஊரோடு ஒத்துவாழ்’ என்றாங்கு  தேங்காயெண்ணெய் என்றே சொல்லி வருகிறோம். 

திங்கள், 6 ஜனவரி, 2025

அடுக்களை என்பது எப்பிரதேசத்திற்குரிய சொல்லாகும்?

அடுக்களை என்பது குறித்ததொரு பிரதேசத்திற்குரிய சொல்லன்று. அடுக்களை தூய தமிழ்ச்சொல்லாகும். மடைப்பள்ளி ( இந்து சமயக் கோயிலில் சமையல் செய்யும் இடம்) , சமையலறை போன்ற பொருள்களையுடைத்தாய் அடுக்களை பயன்படுத்தப்பட்டுள்ளன. 

மணிமேகலையில், 'புகையுடைத் தாதலா லெனல் பொருந்தேது / வகையமை யடுக்களை போற்றிட் டாந்தம்' என்று வந்துள்ளது. இதற்கு சமையலறை என்று பொருள். 

தற்காலத்தில் அடுக்களை எனும் சொல் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றது. (கண்டி - தெல்தோட்டையில் எனது வாப்பும்மா சமையலறையை அடுக்கள (மரூஉ) எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.)

-கலைமகன் பைரூஸ்





புதன், 1 ஜனவரி, 2025

'பொங்கல்' என்பது பொருட்பெயர் என்று கற்பிக்கிறார்கள்.. சரிதானா?

 

ஐயம்

---------

'பொங்கல்' என்பது பொருட்பெயர் என்று சொல்லித் தந்தார்கள். என்றாலும், எனக்குள் சந்தேகம் எழுகிறது. தௌிவுபடுத்துங்கள்...

தௌிவு

-----------

தமிழ்மொழி பெயர்ச் சொற்களை ஆறு வகையாகப் பிரித்து நோக்குகின்றது.

சனி, 28 டிசம்பர், 2024

'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' எனும் அடி இடம்பெறும் இலக்கியம் எது?

 

ஐயம் - 3

'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' எனும் அடி இடம்பெறும் இலக்கியம் எது? அந்த அடிகளை இயற்றியவர் யார்? அந்த அடி இடம்பெறும் கவிதையின் தலைப்பு யாது?

தௌிவு

-----------

'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' எனும் அடி இடம்பெறும் இலக்கியம் 'பாரதியார் கவிதைகள்' ஆகும். அந்த அடி கொண்ட செய்யுளை இயற்றியவர் பாரதியார் ஆவார். 

பாரதியாரின் தேசிய கீதங்களில் ஒன்றான 'பாரத சமுதாயம்' எனும் தலைப்பிலான கவிதையிலேயே இவ்வடி இடம்பெற்றுள்ளதைக்

வெள்ளி, 27 டிசம்பர், 2024

'ஆவாகனம்' என்றால் என்ன? விளக்குக.

ஐயம் -2

ஆவாகனம் என்ற சொல்லுக்கு பிழையான விளக்கமே இதுவரைக் காலமும் கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பரீட்சை வினாத்தாள்களிலும் பிழையான விடைகளே  வழங்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக யாரேனும் மிகச் சிறந்த விளக்கத்தினை வழங்க முடியுமாயின் வழங்கலாம்.

தௌிவு

-----------

 ‘ஆவாகனம் என்பது இந்து சமய கடவுளுக்கு செய்யும் உபசார முறைகளில் ஒன்றாகும். இப்பூசை முறையானது தசோபசாரம் எனும் பத்துவகையான உபசார முறைகளிலும், சோடசோபசாரம் எனும் பதினாறு வகையான உபசார முறைகளிலும் அடங்குவதாகும்.

தசாப்தம் எனும் சொல்லில் ப் எனும் மெய்யுடன் பிற மெய் வந்துள்ளமைக்கான விளக்கம்


ஐயம்  - 1

க், ச், த், ப் எனும் 4 மெய்களும் உடநிலை மெய்மயக்கமாக மாத்திரமே வரும் என்பது நியதியல்லவா? அவ்வாறெனில் தசாப்தம் எனும் சொல்லில் ப் எனும் மெய்யுடன் பிற மெய் வந்துள்ளமைக்கான விளக்கம் தர முடியுமா?

தௌிவு

ஆம். (ர், ழ் தவிர்ந்த ஏனைய பதினாறு மெய்களில்) க், ச், த், ப் எனும் நான்கு மெய்களும் தம்மோடு தாம் மாத்திரம் மயங்கும் என்கிறது இலக்கண