📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாப்பத்திரம்

  பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    மரங்கள் மனித குலத்திற்குச் செய்துவரும் நன்மைகள் கணக்கில் அடங்காதவை. இவை அசுத்த வாயுவான கரியமில வாயுவை உட்கொண்டு, மனிதர்களுக்குத் தேவையான ஒட்சிசன் வாயுவை வௌியிடுகின்றன. சாலை ஓரங்களில் நிற்கும் மரங்கள் நிழல் கொடுத்துப் பயணத்தை இனிமையாக்குகின்றன. உணவாகும்

பல காய்களையும், கனிகளையும் மரங்கள் அள்ளித் தருகின்றன. பறவைகள் கூடு கட்டி வாழ்வதற்கு வாடகை வாங்காமல் இடம் தந்து உதவுகின்றன. மரங்களின் பட்டைகள், இலைகள், வேர்கள் எனப் பலவும் மருந்துப் பொருட்களாகவும் பயனாகின்றன. எனவே நாம் ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை நட்டுப் பேணிப் பாதுகாப்போம்.

பந்தியைத் துணையாகக் கொண்டு விடை தருக.

1. மரங்கள் உட்கொள்ளும் அசுத்த வாயு யாது?

.......................................................

2. பயணத்தை இனிமையாக்குபவை எவை?

.....................................................

3. மருந்துக்காகப் பயன்படும் மரங்களின் பகுதிகளில் ஒன்றை எழுதுக.

....................................................

4. வீதி என்ற கருத்தைத் தரும் ஒத்த கருத்துடைய சொல்லைப் பந்தியிலிருந்து தெரிவுசெய்து எழுதுக.

.....................................................

5. மரங்களில் வாடகை வாங்காமல் வாழ்பவை எவை?

..............................................................

6. பந்தியில் இடம்பெற்றுள்ள எதிர்கால வினைச்சொல்லை எழுதுக.

----------------------------------------------

02. பின்வரும் வாக்கியத்தின் சொற்களில் உள்ள பிழையான எழுத்துக்களைத் திருத்தி மீண்டும் எழுதுக.

கெந்தி விழையாட்டு பிள்ளைகளின் உடலுக்குப் புத்துனர்ச்சியை அளிக்கிறது.

3. கீழே தரப்பட்டுள்ள சொற்களை ஒழுங்குபடுத்திக் கருத்துள்ள வாக்கியமாக எழுதுக.

    (1) சந்தை / வருகின்றனர் / காய்கறிகளை / நோக்கி / விற்பதற்காகச் / வியாபாரிகள்

----------------------------------------------------------------------------------------------------------------------

    (2) குறியீடுகளைப் / வீதியின் / பார்த்தோம் / மருங்கிலும் / வீதிக் / இரு

----------------------------------------------------------------------------------------------------------------------

04. பின்வரும் ஒவ்வொரு வாக்கியத்திலும் எழுவாய், பயனிலைத் தொடர்பு சரியாயின் (சரி) எனவும், பிழையாயின் (பிழை) எனவும் எதிரேயுள்ள அடைப்புக்குறிக்குள் அடையாளமிடுக.

    (1) பூந்தோட்டத்தில் மல்லிகைப் பூக்கள் மலர்ந்தது ( ..........................)
    
    (2) ஒவ்வொரு புத்தகமும் நல்லது. ( ..........................)

    (3) பசுக்கூட்டம் தோட்டத்தில் புல் மேய்ந்தன. ( ..........................)

    (4) நான் எனது தங்கையுடன் பாடசாலைக்குச் சென்றேன். ( ..........................)

5. பொருத்தமான இடங்களில் நிறுத்தற் குறிகளை இடுக.


    அந்தப் பாறையில் குரங்கு மான் சிங்கம் ஆகியவற்றின் உருவங்கள் கெதுக்கப்பட்டுள்ளன

6. பின்வரும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான பழமொழியைப் புள்ளிக்கோட்டில் எழுதுக.

    ஒருவர் செய்த உதவியை மறத்தல் கூடாது.

    ............................................................................................................................................


7. பின்வரும் இணைமொழிகளில் பொருத்தமானதைத் தெரிவுசெய்து வாக்கியங்களைப் பூரணப்படுத்துக.

ஆற அமர / கண்ணும் கருத்தும் / நகமும் சதையும் / ஓடி ஆடி

    1) வயலில் பெண்கள் .......................................................... வேலை செய்தனர்.

    2) அவர்கள் .......................................................................... போல் வாழ்ந்தார்கள்.


8. பின்வரும் ஒருமை வாக்கியத்தைப் பன்மை வாக்கியமாக மாற்றி எழுதுக.

    நட்சத்திரம் வானில் மின்னியது.

    ............................................................................................................................


9. பின்வரும் தொடர்மொழிக்குரிய ஒருமொழியை எழுதுக.

    மற்றவர்களைப் பற்றி அக்கறை இல்லாதவன் ......................................................

----------------------------------------

தரம் 5 | புலமைப்பரிசில் பரீட்சை | கலைமகன் பைரூஸ் | தமிழ்ச்சுடர் | scholarship examination | tamil | தமிழ் கற்போம் | மொழித்திறன் விருத்திச் செயற்பாடு

----------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக