📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

பாரதிதாசனின் 'புத்தகசாலை' விரிவான விளக்கம்.... | கலைமகன் பைரூஸ் | THAMILSH SHUDAR

📚 பாரதிதாசனின் 'புத்தகசாலை' விரிவான விளக்கம்

மாணாக்கர்களுக்கும், தமிழன்புள்ளோர் மனதுக்கும் நெருக்கமாக இருப்பது போன்ற முறையில், பாரதிதாசனின் 'புத்தகசாலை' என்னும் கவிதையை இங்கு விரிவாக நம் பார்வைக்கு எடுத்துரைக்கப்போகிகிறேன்.

தமிழ்மொழி சார்ந்த ஆக்க இலக்கியங்களை எனது பாணியில் – எனது சிந்தனைகளை கலந்தழகு செய்து வழங்கி தமிழுக்கு அணிசெய்து வருவேன். தொடருங்கள், தமிழின் ஒளிக்கதிர்கள் உங்கள் உள்ளத்தில் பரவட்டும்!

- தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்


📝 முதலில் கவிதையைப் பார்ப்போம்…

தனித்தமைந்த வீட்டிற் புத்தகமும் நானும்
சையோகம் புரிந்ததொரு வேளைதன்னில்,
இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;
இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள் உண்டேன்!

சனி, 2 ஆகஸ்ட், 2025

பாரதிதாசனின் 'தமிழும் நானும்' கவிதை விளக்கம் | கலைமகன் பைரூஸ்

🖋️ தமிழும் நானும் – பாரதிதாசன்: உயிரின் தமிழ்க் கவிதை

– தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்

🔶 பாரதிதாசன் – தமிழுக்காகத் தீபமேற்றிய கவிஞர்

20ஆம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவர் பாரதிதாசன். அவரது இயற்பெயர் கண்ணப்பன் சுப்புரத்தினம் (K. Subburathinam). 1891 ஏப்ரல் 29 அன்று பாண்டிச்சேரி (தற்போது புதுச்சேரி)யில் பிறந்த இவர், பாரதியாரின் சிந்தனைகளால் தீவிரமாக ஈர்க்கப்பட்டு, "பாரதியின் தாசன்" என்ற உணர்வில் “பாரதிதாசன்” எனப் புகழ் பெற்றார்.

🔹 பாரதிதாசன் = பாரதிக்கு தாசன்

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

தரம் 2 தமிழ் விசேட செயற்றிட்டம் | தமிழ்ச்சுடர்

     தரம் 2 மாணவர்களுக்காக நீர்கொழும்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் 2021 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட, தமிழ்மொழி சார்ந்த விசேட செயற்றிட்டம் இது.

    மாணவர்கள் கூடுதலான பயிற்சிகள் செய்து, தங்களைத் தரப்படுத்திக் கொள்ள இச்செயற்றிட்டம் (வினாப்பத்திரங்கள்) உதவும் என்பதில் சந்தேகமில்லை. 

   தரவிறக்குவதற்கு இங்கு சொடுக்கவும். 

தரம் 10 - 11 தமிழ் இலக்கியத் தொகுப்புக்கான பாடக் காணொளிகள் | THAMILSH SHUDAR

     தரம் 10 - 11 மாணாக்கருக்கான தமிழ் இலக்கியத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள பாட அலகுகளுக்கான காணொளிகளை கீழ்வரும் இணைப்புகளினூடாகக் காண முடியும். 

    இந்த தமிழ்ச்சுடர் யூரியுப் தளத்திற்குச் சென்று, அந்தக் காணௌிகளைப் பார்ப்பதோடு, தளத்தை 'ஸப்ஸ்கிரைப்' செய்வதற்கும் மறக்க வேண்டாம். 

பாடங்கள்

----------------

புதன், 30 ஜூலை, 2025

தரம் 3 தமிழ் வினாப்பத்திரம் | கணிப்பீடு

Thamilsh Shudar இனால் கடந்த கால வினாப்பத்திரங்கள் (தமிழ்மொழி | தமிழ் இலக்கிய நயம்) வெளியிடப்படவுள்ளது. இன்று தரம் 3 வகுப்பிற்கான தமிழ்மொழி | மாகாணக் கல்வித் திணைக்களம் - கிழக்கு மாகாணம் .
மாணவர்களின் ஆற்றலை இற்றைப்படுத்துவதற்கும், மேலதிக பயிற்சிகளைச் செய்வதற்கும் இது உசாத்துணையாக இருக்கும். 

வினாப்பத்திரத்தைத் தரவிறக்குவதற்கு 

www.thamilshshudar.com

செவ்வாய், 29 ஜூலை, 2025

இந்த நிலை மாறுமா? Hafiz Issadeen

வழக்கமாக தனது பிள்ளைகளின் கல்வி விவகாரங்கள் தொடர்பாக என்னிடம் ஆலோசனை கேட்கும் ஓர் இளம் தாய், எனக்கு அழைப்பு எடுத்திருந்தார். 

"ஸல்மா இப்போ நாலாம் வகுப்பு படிக்கிறா. அடுத்த வருஷம் ஸ்கொலர்ஷிப் பரீட்சை எழுத வேணுமே. ஆனால் அவ ஸ்கூல் விட்டு வந்து சாப்பிட்டதும் தூங்கப் பார்க்கிறா. டியூஷன்  வகுப்புக்குப் போக முடியாது என அடம் பிடிக்கிறா. இது தினமும் பெரிய பிரச்சினையாக இருக்கிறது" என்றார் அந்தப் பெண்.  

"அவ சின்னப் பிள்ளை. அவக்கு ஓய்வும் வேண்டுமே. அவ நன்றாக படிக்கிறா தானே. ஏன் இப்படி வற்புறுத்தி இந்த நேரத்தில் டியூஷன் வகுப்புக்கு அனுப்புறீங்க?" என்று கேட்டேன்.

வெள்ளி, 25 ஜூலை, 2025

இன்றைய சொல் – Today's Word

Word: Compassion

Meaning (தமிழில்): இரக்கம்

Example: Show compassion to the poor.

உதாரணம்: ஏழைகளுக்கு இரக்கம் காட்ட வேண்டும்.

தமிழ் ஆண்டுகள் | Thamilsh Shudar

ஆண்டுகளும் அவற்றின் சிறப்புப் பெயர்களும்

ஆண்டுகளும் அவற்றின் சிறப்புப் பெயர்களும்

ஆண்டு விழா பெயர்
முதல் ஆண்டுகாகித விழா
இரண்டாம் ஆண்டுபருத்தி விழா
மூன்றாம் ஆண்டுதோல் விழா
நான்காம் ஆண்டுமலர், பழ விழா
ஐந்தாம் ஆண்டுமர விழா
ஆறாம் ஆண்டுசர்க்கரை, கற்கண்டு விழா
ஏழாம் ஆண்டுகம்பளி, செம்பு விழா
எட்டாம் ஆண்டுவெண்கல விழா
ஒன்பதாம் ஆண்டுமண்கலச விழா
பத்தாம் ஆண்டுதகரம், அலுமினியம் விழா
பதினோறாம் ஆண்டுஇரும்பு விழா
பன்னிரண்டாம் ஆண்டுலினன் விழா
பதிமூன்றாம் ஆண்டுமின்னல் விழா
பதினான்காம் ஆண்டுதந்த விழா
பதினைந்தாம் ஆண்டுபடிக விழா

வியாழன், 24 ஜூலை, 2025

வருகிறது விடைப்பொதிகை | Tamil Knowledge Quiz

விடைப்பொதிகை | Tamil Knowledge Quiz

விடைப்பொதிகை – தமிழ் அறிவு வினா விடைகள்

இங்கு தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம், வரலாறு, மற்றும் தமிழரின் உலகளாவிய விஷயங்களைத் தொடுவதற்கான அறிவுப் புதிர்கள் தொகுக்கப்படுகின்றன. தினமும் புதுப்பிக்கப்படும்!

1. ‘பட்டினத்தார்’ என்று அறியப்பட்ட சித்தர் யார்?
வீரமாமுனிவர்
2. ‘திருக்குறள்’ எத்தனை குறள்களை கொண்டது?
1330
3. சங்க காலத்தில் பரிபாடல் என்ன வகை இலக்கியம்?
பத்துப்பாட்டு வகையைச் சேர்ந்தது.

தொடர்ந்து புதுப்பிக்கப்படும்... மேலும் பகுதியுடன் விரைவில் சந்திப்போம்!


- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்

பரீட்சார்த்தப் பதிவு

Quiz with Click for Answer

தமிழறிவு வினா – விடை

1. தமிழில் முதல் நூல் எது?
தொல்காப்பியம்
2. திருக்குறளை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
3. 'ஐம்பெரும் காவியங்கள்' என்றால் என்ன?
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி

இலக்கணைத் தொடர்கள் (மரபுத் தொடர்கள்) - 2 | THAMILSH SHUDAR

இலக்கணைத் தொடர்கள் - 2

கழுத்துப் பற்றிய இலக்கணைத் தொடர்கள்

  • கழுத்தறுத்தல் பெரும் துன்பத்த்திற்கு உள்ளாக்குதல். / தீமை செய்தல்
  • கழுத்திற் கட்டுதல் வலிந்து பொறுப்பாளியாக்குதல்
  • கழுத்துக் கொடுத்தல் தன் வருத்தம் பாராமல் பிறர் காரியத்தை ஏற்று நிற்றல் / வாழ்க்கைப்படுதல்
  • கழுத்து முறித்தல் வருத்துதல் / நிர்ப்பந்தித்தல்
  • கழுத்தைக் கட்டுதல் விடாது நெருக்குதல்

செவ்வாய், 22 ஜூலை, 2025

தமிழும் ஆங்கிலமும் – கல்வியின் இரு கண்கள்! | Thamilsh Shudar

 தமிழும் ஆங்கிலமும் – கல்வியின் இரு கண்கள்!

தாய்மொழி மரபு | ஆங்கிலம் உலகத்தோடு இணைப்பு – இரண்டுக்கும் இடம் வேண்டும்!

இன்றைய உலகில் ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி என்ற நிலையைப் பெற்றிருக்கிறது. தொழில், அறிவியல், மருத்துவம், கணினி போன்ற அனைத்து துறைகளிலும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் மிகுந்தது. அதனால், ஆங்கிலம் கற்றல் என்பது காலத்தால் விதிக்கப்படும் அவசியம். ஆனால், இதன் பொருட்டு தாய்மொழியாம் தமிழை புறக்கணிப்பது என்பது தாய்ப்பாலை மறப்பதற்குச் சமமான பிழை என்பதை உணர்வது அவசியகும். 


🎓 சர்வதேச பாடசாலைகள் – தமிழ்மொழிக்கு இடமில்லையா?

சில சர்வதேச பாடசாலைகள் அல்லது பிரபல தனியார் பாடசாலைகளில், தமிழ்மொழி பேசும் மாணவர்களுக்கு கூட தண்டனை வழங்கப்படுவது கவலையை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும்.  “Speak in English only” என்ற அறிவிப்புகள், மாணவர்களின் தாய்மொழிப் பாவனைக்கு தடையாகவே அமைகின்றன.

திங்கள், 21 ஜூலை, 2025

துண்டுவிழும் தொகை, மிகை ஊதியம், குறை நிரப்பு, மிகைச் செலவு என்பன யாவை? | THAMILSH SHUDAR

1. குறைநிரப்பு பிரேரணை (Supplementary Budget) என்பது, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில், எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் ஏற்படும் போது அல்லது புதிய செலவினங்கள் தேவைப்படும்போது, அவற்றை ஈடுசெய்ய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணை ஆகும்.

2. மிகை ஊதியம் என்பது ஒரு ஊழியருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை விட அதிகமாக வழங்கப்படும் தொகை அல்லது சலுகையைக் குறிக்கும். இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும் அல்லது ஒரு சிறப்பு நிகழ்வின் காரணமாக வழங்கப்படும். உதாரணமாக, ஒரு மேலதிக வேலை நேரம் அல்லது சிறப்பு செயல்திறனுக்காக வழங்கப்படும் ஊதியம் மிகை ஊதியமாகக் கருதப்படலாம்.

ஞாயிறு, 20 ஜூலை, 2025

பரீட்சைக் காலமும் பெற்றோர் – பிள்ளைகளும்

📘 தமிழ்ச்சுடர்

பரீட்சைக் காலமும் பெற்றோர் – பிள்ளைகளும்

✍️ கலைமகன் பைரூஸ் (Kalaimahan Fairooz)

பரீட்சை என்பது கல்வியறிவு மட்டுமல்ல; அது மனநிலை, உற்சாகம், குடும்பம் ஆகிய அனைத்தையும் அனைத்தோடும் இணைந்தது. நேரம். மாணவ–மாணவிகள் கடுமையாக உழைக்கும் பருவம் இது. ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் நல்வாழ்க்கைக்கான ஆசையின் பேரில் குழந்தைகளின் மன அழுத்தத்தை தெரியாமலே அதிகரித்து விடுகிறார்கள்.

வெள்ளி, 18 ஜூலை, 2025

தரம் 7 - தமிழ் - இரண்டாம் தவணைப் பரீட்சை - THAMILSH SHUDAR

 Thamilsh Shudar இனால் இன்றிலிருந்து கடந்த கால வினாப்பத்திரங்கள் (தமிழ்மொழி | தமிழ் இலக்கிய நயம்) வெளியிடப்படவுள்ளது. இன்று தரம் 7 வகுப்பிற்கான தமிழ்மொழி | மேல் மாகாணம் | 2018 வௌியிடப்பட்டுள்ளது.

வியாழன், 17 ஜூலை, 2025

புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை

 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்:

புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல்

2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும் பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன.

புதன், 16 ஜூலை, 2025

ஜப்பானிய ஹைக்கூவும் தமிழ் ஹைக்கூக்களும் | THAMILSH SHUDAR

📖 ஜப்பானிய ஹைக்கூவும் தமிழ் ஹைக்கூக்களும்

– தமிழ்ச்சுடருக்காக ✍️ கலைமகன் பைரூஸ்

கவிதை என்பது சுருங்கி ஒளிரும் உணர்வு. அந்த சுருக்கத்திலே – ஒரு பருவம், ஒரு துளி, ஒரு வாசனை, ஒரு மனநிலை – பிரமாதமாக வெளிப்படலாம். இத்தகையக் கவிதை வடிவம்தான் ஹைக்கூ.

🌸 ஜப்பானிய ஹைக்கூ – ஒரு தருணத்தின் கவிதை

Haiku (俳句) என்பது ஜப்பானிய குறுங்கவிதை வடிவமாகும். இது குறுகியதாயினும், அதில் உள்ள உணர்ச்சி மிகுந்த ஆழம் யாரையும் ஆச்சரியப்பட வைக்கும்.

செவ்வாய், 15 ஜூலை, 2025

'தெற்கில் உதித்த சூரியன்' M H M எம்.எச்.எம். ஷம்ஸ் | THAMILSH SHUDAR

 இலங்கை கல்வி வௌியீட்டுத் திணைக்களத்தினால் தரம் 10 - 11 மாணாக்கருக்காக வௌியிடப்பட்டுள்ள, தமிழ் இலக்கிய நயம் பாடப்புத்தகத்தின் 85 ஆம் பக்கத்தில் பன்முக எழுத்தாளர் திரு. எம்.எச்.எம். ஷம்ஸ் பற்றிய படம்  கொடுக்கப்பட்டு, அவர் பற்றியும் குறிப்புகள் எழுதுமாறு கேட்கப்பட்டுள்ளது. 
அவர் பற்றி மாணாக்கரும், ஆசிரியர் பெருந்தகைகளும் அறிந்துகொள்ளுமுகமாக 'தமிழ்மணி அஷ்ரப் ஷிஹாப்தீனின் கட்டுரை இங்கு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. 

- தமிழ்ச்சுடர்.கொம்

'தெற்கில் உதித்த சூரியன்'

மர்ஹூம் எம்.எச்.எம். ஷம்ஸ் மறைந்து 12 வருடங்கள் தாண்டிய பின்னர் சமூகத்தில் அவரது இழப்பு ஏற்படுத்திய இடைவெளியின் விசாலம் உணர்ந்து 'தெற்கில் உதித்த சூரியன்' என்று இப்பத்திக்குத் தலைப்பிட்டிருக்கிறேன். 15.07.2002 அன்று இவ்வுலகை நீத்த அவர்கள் பற்றி அன்னாரது பத்திரிகைத் தோழரான சிதம்பரப் பிள்ளை சிவகுமார் ஆற்றிய நினைவுரையை 'யாத்ரா' பத்தாவது இதழில் பிரசுரித்து அதற்குத் 'தெற்கில் மறைந்த சூரியன்' என்று தலைப்பிட்டிருந்தேன்.


20 வருடங்களுக்கு முன்னர் அவர் தொகுத்து வைத்திருந்த அவரது சிறுகதைத் தொகுதி 'வளவையின் மடியிலே' என்ற மகுடத்தில் கடந்த 2.11.2014 அன்று அவரது புத்திரரான பத்திரிகையாளர் பாஹிமின் முயற்சியால் வெளியிட்டு

இலக்கணைத் தொடர்கள் (மரபுத் தொடர்கள்) | THAMILSH SHUDAR

இலக்கணைத் தொடர்கள்

அடி பற்றிய இலக்கணைத் தொடர்கள்

  • அடிக்கீழ்ப்படுத்துதல் வென்று தன் ஆணைக்கு உள்ளாக்குதல்
  • அடிகோலுதல் ஆயத்தம் செய்தல்
  • அடிசாய்தல் அடியில் நிழல் சாய்தல், உச்சிக் கதிரவன் மேற்கு நோக்கிச் சாய்தல்
  • அடி திரும்புதல் பொழுது சாய்தல்
  • அடி தொடுதல் பிறர் பாதம் தொட்டு சபதம் செய்தல்
  • அடி நகர்தல் இடம்விட்டுப் பெயர்தல்

தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்கள் | THAMILSH SHUDAR