📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
தரம் 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தரம் 4 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஜூன், 2025

எது வாழ்க்கை? - தரம் 4 தமிழ் வினாப்பத்திரம்

 தரம் 4 மாணவர்களுக்கு உசாத்துணையாக, தமிழ்ச்சுடரில் மாதிரி வினாப்பத்திரம் ஒன்று இற்றைப்படுத்தப்படுகின்றது. 

ஆசிரியர் எம்.எப். றியாஸ் மொஹமட் அவர்களால் தயாரிக்கப்பட்ட வினாப்பத்திரம் இது. 

மாணவர்கள் இதனைத் தரவிறக்கி, தங்களின் பெறுபேற்றுக்கு உரம் சேர்க்கலாம். 

ஆசிரியருக்கு நன்றி!

- தமிழ்ச்சுடர்


சனி, 3 மே, 2025

தரம் 4 - 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாக்கள் - தமிழ்

 பின்வரும் பந்தியை வாசிக்கவும்.

1.       மிக அதிகமான பரப்பளவில் மணல் மற்றும் மணற் குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம் ஆகும். இது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமான பகுதியாகும். இந்தப் பகுதிகளில் மணல், புழுதிப் புயல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக மணற்குன்றுகள் உருவாகின்றன.

பாலைவனங்கள் ஆண்டுக்கு இருநூற்றைம்பது மில்லி மீற்றருக்குக் குறைவாக மழையைப் பெறுகின்றன. அதிக வறட்சியைத் தாங்கி

வியாழன், 24 ஏப்ரல், 2025

தரம் 4 - தரம் 5 | சரியான சொல்லைத் தெரிந்து கோடிடுதல்

     தமிழில் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுவதே சிறப்பானது. ஒலி வேறுபாட்டுச் சொற்களுக்கு ஏற்ப, அவற்றின் பொருள்களும் வேறுபடும் என்பதை மாணவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும். 

    இங்கு ஒவ்வொரு வினாவிலும் மூன்று சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

புதன், 2 ஏப்ரல், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

      பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    நாங்கள் அனைவரும் இரவு நேரம் நிலவின் ஔியில் குதூகலித்துக் கொண்டிருந்தோம். அவ்வேளையில் வானத்தில் வௌவால் கூட்டம் பறந்து சென்றது. அவற்றைப் பார்ப்பதற்கு வியப்பாக இருந்தது. வானத்தில் விண்மீன்கள் தகதகவென மின்னின. தவளைகள் கத்தும் சத்தம் காதைத் துளைத்தது. இரவில் பூத்த மலர்கள் கமகமவென நறுமணம் வீசின.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.

சனி, 29 மார்ச், 2025

புலமைப் பரிசில் பரீட்சை - பகுதி 2 வினாக்கள்

 1) கீழ்வரும் பாடல் பகுதியை வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

கண்ணிரண்டும் கூர்மை

காதிரண்டும் கேண்மை

பெண்ணினத்தின் சாயல்

தெரியுதுந்தன் வடிவில்

 

எட்டி ஓடும் மானே

என்னிடம் நீ வந்தால்

திங்கள், 3 மார்ச், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

     பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    கிராமம், நகரம், பூங்கா, மரம், செடி, கொடி என எங்கு வேண்டுமானாலும் கூடு கட்டி வாழும். சிட்டுக் குருவிகள் சிறு சிறு கூட்டங்களாக வசிக்கும். ஆண் குருவிகளுக்கு சாம்பல் நிறத்தில் சிறிய கொண்டை இருக்கும். பெண் குருவிகளுக்கு கொண்டை இருக்காது. சிட்டுக் குருவிகளின் ஆயுட் காலம் சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். தங்களுக்குள் சிறிய சத்தங்கள், இடைவிடாத கீச்சுக் குரல்கள் மூலம் மற்றைய குருவிகளைத் தொடர்பு கொள்கின்றன.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.

சனி, 1 மார்ச், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

    பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    காலிக் கோட்டையானது போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்ட மிகப் பழைமையான கோட்டையாகும். இது பார்ப்பதற்கு ஈடு இணையற்று கம்பீரமாகக் காட்சி அளித்தது. நாங்கள் கடகடவென அதன் நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்தோம். அங்கே புராதன ஆயுதங்கள் காணப்பட்டன. அவற்றைப் பார்வையிட்டபடியே கோட்டையின் மேற்பகுதிக்கு வந்தோம். ஆகா! மதிலின் மேல் முட்டி மோதி கடலலைகள் சூரிய ஔிபட்டு குன்றின் மேலிட்ட தீபம் போல் காட்சி அளித்தன. காலி நகரின் அழகு எம்மை மெய் மறந்து பரவசப்படுத்தியது.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

Grade 4 and 5 English | ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் 2

 

Common Flowers

  1. rose - ரோசா
  2. sunflower - சூரிய காந்தி
  3. shoe-flower - சப்பாத்திப் பூ
  4. carnation - காணேசன்
  5. temple flower - விகாரைப்பூ
  6. jasmine - மல்லிகை
  7. lotus - தாமரை
  8. blue sky flower  - நீலோற்பலம் / நீல அல்லிப்பூ

சனி, 15 பிப்ரவரி, 2025

​பொன்பூச்சொரியும் பாடலும் பொருளும்

'பொன்பூச் சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும்

நன் பூதலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரவை

வீசு புகழ் நல்லூரான் வில்லவராயன் கனக

வாசலிடைக் கொன்றை மரம்.'

மேலுள்ள செய்யுள் நல்லூர் சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பட்ட பாடலாகும். இந்தப் பாடல் எழுந்தமைக்கான காரணமும் உள்ளதை நாம்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

Grade 4 and 5 English | ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் 1

Objects in the Classroom

  1. Chair  - கதிரை
  2. cupboard - அலுமாரி
  3. desk - மாணவர் மேசை
  4. blackboard - கரும்பலகை
  5. chalk - வெண்கட்டி
  6. bags - பைகள்
  7. books - புத்தகங்கள்
  8. bottles - போத்தல்கள் (குவளைகள்)
  9. register - மாணவர் பதிவுப்புத்தகம்
  10. record book - பதிவுப்புத்தகம்
  11. table - மேசை
  12. table cloth - மேசைப்புடைவை
  13. broom - தும்புத்தடி

வியாழன், 16 ஜனவரி, 2025

உயிர்க்குறிகள்

தமிழ் மொழியிலுள்ள உயிர்க்குறிகள் பற்றி தரம் 4, தரம் 5 மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள  வேண்டும். புலமைப் பரிசில் பரீட்சையில் உயிர்க்குறிகள் பற்றிய வினாக்களும் இடம்பெறுகின்றன. 

இங்கு உயிர்க்குறிகள் தொடர்பான அட்டவணை இற்றைப்படுத்தப்படுகின்றது. 

வெள்ளி, 27 டிசம்பர், 2024

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

பயிற்சி - 1


ஓரிடத்தில் இருந்திடாமல்

ஓடி ஓடிக்  கேட்டிடலாம்

பாடகரைப் பார்த்திடாமல்

பாட்டுக்களைக் கேட்டிடலாம்