1) கீழ்வரும் பாடல் பகுதியை வாசித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
கண்ணிரண்டும்
கூர்மை
காதிரண்டும்
கேண்மை
பெண்ணினத்தின்
சாயல்
தெரியுதுந்தன்
வடிவில்
எட்டி ஓடும் மானே
என்னிடம் நீ வந்தால்
புட்டிப் பாலும்
தந்து
போற்றி உன்னை
வளர்ப்பேன்
1) இந்தப் பாடல்
அடிகளில் எந்தப் பிராணியைப் பற்றி வர்ணித்துப் பாடப்படுகிறது?
...........................................
2) இப் பிராணியில்
யாருடை சாயல் தெரிவதாகக் கூறப்படுகிறது?
..........................................
3) பாடலில்
வந்துள்ள தன்மை ஒருமை எதிர்கால வினைச் சொல்லைத் தெரிந்து எழுதுக.
........................................
4) பெண்ணினத்தின்
என்பதைப் பிரித்து எழுதுக.
.......................................
5) இங்கு
பார்வையின் சிறப்புப் பற்றிக் கூறப்பயன்படுத்தப்பட்டுள்ள சொல் யாது?
......................................
6) ‘செவி’ என்பதைக் குறிக்கும் ஒத்த சொல்லைத்
தெரிந்து எழுதுக.
...................................
7) தன்னிடம்
வந்தால் எப்பொருளைத் தந்து வளர்ப்பதாகப் பாடலில் கூறப்பட்டுள்ளது?
........................................
2) பின்வரும்
பழமொழிகளுக்குரிய கருத்தினை எழுதுக.
1) யானைக்கும் அடி சறுக்கும்.
...........................................................................................................
2) இளமையிற் கல்வி சிலையில் எழுத்து
...........................................................................................................
3) பின்வரும்
வாக்கியங்களில் பொருத்தமான இடங்களில் நிறுத்தற் குறிகளை இடுக.
1) வீரனே உங்களில் யார் அதிக பலசாலி
2) நீர்த் தடாகத்துள் தாமரை அல்லி
நீலோற்பலம் என்பன மலர்ந்துள்ளன
3) கைகளை நன்கு கழுவி விட்டு வாருங்கள்
என்று அம்மா கூறினார்
பின்வரும் வாக்கியங்களில்
உள்ள எழுத்துப் பிழைகளைத் திருத்தி எழுதுக.
4) சிறுவர்கள்
விளையாட்டுத் திடலுக்குச் சென்றார்கள்
.................................................................................................................
5) தோமஸ் அல்வா
எடிசன் ஒரு சிறந்த விஞ்ஞானி ஆவார்.
...................................................................................................................
சொற்களை
ஒழுங்குபடுத்தி கருத்துள்ள வாக்கியமாக்குக.
6) நிழலைத் / ஆண்டு
/ மரங்கள் / தருகின்றன / முழுவதும்
7) நன்றாக /
எந்தச் / ஆராய்ந்து / செய்ய / வேண்டும் / செயலையும்
8) பாடல் அடிகளை
வாசித்து வினாவுக்கு விடை எழுதுக.
கடலில் துள்ளும் மீனினைப் பார்
கப்பல் அசையும் அலையைப் பார்
மீனினைப் பிடிக்கும் வலையைப் பார்
மூழ்கிக் கிடக்கும் முத்தைப் பார்
1) இங்கு மூழ்கிக் கிடப்பது எது?
...............................................
2) மீன் பிடிக்கப் பயன்படுவது எது?
.........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக