உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
ஆண்டு நிறைவு விழாக்கள் எனும்போது எங்கள் எல்லோருக்கும் வௌ்ளிவிழா, பொன்விழா, வைர விழா, அமுத விழா, நூற்றாண்டு விழா
என்பன நன்கு தெரியும். ஆனால் இவற்றுக்கு அதிகமாக நம் தாய்மொழியில் பல்வேறு ஆண்டு நிறைவுகளிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கு நம் முன்னோர் பெயர்களும் சூட்டியிருக்கிறார்கள். அவற்றைத்தான் இன்று நாம் பார்க்கின்றோம்.நீங்கள் படித்து, எழுதி முடித்ததும் இந்தத் தளத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவிடுங்கள்.
இதோ ஆண்டுகளும் ஆண்டு நிறைவு விழாக்களும்
1 ஆண்டு – காகித விழா2 ஆண்டு – பருத்தி விழா
3 ஆண்டு – தோல் விழா
4 ஆண்டு – மலர் மற்றும் பழ விழா
5 ஆண்டு – மர விழா
6 ஆண்டு – சர்க்கரை / கற்கண்டு / இனிப்பு விழா
7 ஆண்டு – கம்பளி / செம்பு விழா
8 ஆண்டு – வெண்கல விழா
9 ஆண்டு – மண் கலச விழா
10 ஆண்டு – தகரம் / அலுமினிய விழா
11 ஆண்டு – எஃகு விழா
12 ஆண்டு – லினன் விழா
13 ஆண்டு – பின்னல் விழா
14 ஆண்டு – தந்த விழா
15 ஆண்டு – படிக விழா
20 ஆண்டு – பீங்கான் விழா
25 ஆண்டு – வெள்ளி விழா
30 ஆண்டு – முத்து விழா
40 ஆண்டு – மாணிக்க விழா
50 ஆண்டு – பொன் விழா
60 ஆண்டு – வைர விழா
75 ஆண்டு – பவள விழா
80 ஆண்டு - அமுத விழா
100 ஆண்டு – நூற்றாண்டு விழா
---------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக