📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வெள்ளி, 27 டிசம்பர், 2024

சேர்த்தெழுதுதல்.


1. அடி + சுவடு = 

2.  ஆறு + மலை =

3. ஐந்து + ஐந்து = 

4. ஐந்து + புலம் =

5. ஒன்று + ஊர் =

6. ஒன்று + ஒன்று =

7. கப்பல் + கூலி =

8. கயிறு + கட்டில் =

9. கருமை + பலகை =

10. கல் + குகை =

11. கல் + கோயில் =

12. கல் + தூண் =

13. காடு + அரசன் =

14. காவி + உடை =

15. குருவி + கூடு =

16. தமிழ் + சொல் =

17. தெங்கு + காய் =

18. தெற்கு + திசை =

19. தே + இலை =

20. தே + நீர் =

21. தேன் + குழல் =

22. தேன் + நீர் =

23. தேன் + மொழி =

24. நன்மை + செய்தி =

25. நான்கு + நூறு =

26. நெல் + வயல் = 

27. பச்சை + இலை =

28. பல் + பொடி =

29. பனை + காய் =

30. புது + பானை =

31. பூ + கொடி =

32. பொன் + தகடு =

33. மண் + கலம் =

34. மண் + குடம் =

35. மரம் + வேர் =

36. மரம் + கொம்பு =

37. மலர் + செண்டு =

38. மலை + அரசன் =

39. மலை + உச்சி =

40. மனம் + மாற்றம் =

41. முள் + செடி =

42. முன்பு + நூறு =

43. மூன்று + நூறு =

44. வடக்கு + மேற்கு =

45. வான் + ஒலி =

46. வெண்டி + செடி =

47. வெம்மை + நீர் = 


விடைகள்

----------------

அடிச்சுவடி, ஆற்றுமலை, ஐவைந்து, ஐம்புலம், ஓரூர், ஒவ்வொன்று, கப்பற்கூலி, கயிற்றுக்கட்டில், கரும்பலகை, கற்குகை, கற்கோயில், கற்றூண், காட்டரசன், காவியுடை, குருவிக்கூடு, தமிழ்ச்சொல், தேங்காய், தென்றிசை, தேயிலை, தேநீர், தேங்குழல், தேனீர், தேன்மொழி, நற்செய்தி, நானூறு, நெல்வயல், பச்சிலை, பற்பொடி, பனங்காய், புதுப்பானை, பூங்கொடி, பொற்றகடு, மட்கலம், மட்குடம், மரவேர், மரக்ெகாம்பு, மலர்ச்செண்டு, மலையரசன், மலையுச்சி, மனமாற்றம், முட்செடி, முன்னூறு, முந்நூறு, மும்மூன்று, வடமேற்கு, வானொலி, வெண்டிச்செடி, வெந்நீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக