ஐயம் - 1
க், ச், த், ப் எனும் 4 மெய்களும் உடநிலை மெய்மயக்கமாக மாத்திரமே வரும் என்பது நியதியல்லவா? அவ்வாறெனில் தசாப்தம் எனும் சொல்லில் ப் எனும் மெய்யுடன் பிற மெய் வந்துள்ளமைக்கான விளக்கம் தர முடியுமா?
தௌிவு
ஆம். (ர், ழ் தவிர்ந்த ஏனைய பதினாறு மெய்களில்) க், ச், த், ப் எனும் நான்கு மெய்களும் தம்மோடு தாம் மாத்திரம் மயங்கும் என்கிறது இலக்கண
நூல்கள். ஆயினும், வடமொழிச் சொற்கள் போன்ற பிறமொழிச் சொற்களின்போது அவ்விதி இன்று மீறப்பட்டு வருவதைக் காணலாம். உதாரணத்திற்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள தசாப்தம் எனும் சொல்லை எடுத்துக் கொள்ளலாம். (ப்+த்) மேலும் சில - முக்தி (க்+த்) , இத்யாதி (த்+ய்), சப்தம் (ப்+த்), அக்னி (க்+ன்), ஆத்மா (த்+ம்), சப்தம் (ப்+த்), அக்பர் (க்+ப்), அப்கர் (ப்+க்), அத்வைதம் (த்+வ்) ....சுருங்கக்கூறின், தற்கால வழக்கில் *க், த், ப் எனும் மூன்று மெய்களும் (நானறிந்த வகையில்) தம்மோடு தாமும் பிறமெய்களோடும் மயங்கும்.-கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக