ஐயம் -2
ஆவாகனம் என்ற சொல்லுக்கு பிழையான விளக்கமே இதுவரைக் காலமும் கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பரீட்சை வினாத்தாள்களிலும் பிழையான விடைகளே வழங்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக யாரேனும் மிகச் சிறந்த விளக்கத்தினை வழங்க முடியுமாயின் வழங்கலாம்.
தௌிவு
-----------
‘ஆவாகனம் என்பது இந்து சமய கடவுளுக்கு செய்யும் உபசார முறைகளில் ஒன்றாகும். இப்பூசை முறையானது தசோபசாரம் எனும் பத்துவகையான உபசார முறைகளிலும், சோடசோபசாரம் எனும் பதினாறு வகையான உபசார முறைகளிலும் அடங்குவதாகும்.
இறைவனின் மூல மந்திரத்தினை உச்சரித்து பூசையின் பொழுது இறைவனை எழுந்தருளும் படி அழைப்பதாகும்.’ என சைவ சமய சிந்தாமணி எனும் நூலில் கா. அருணாசல தேசிகமணி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
ஆவாகனம், தாபனம், சந்நிதானம், சந்திரோதனம், அவகுண்டனம், தேனுமுத்திரை, பாத்தியம் , ஆசமனியம், அருக்கியம், புட்பதானம் என்பனவே ‘தசோபசாரம்’ என்பதாகும்.
அருணந்தி சிவாச்சாரியாரும் ஆவாகனமும்
அருணந்தி சிவாச்சாரியார் தனக்கிருந்த வயிற்று வலியை, தாம் மாணாக்கருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது மட்டும், ‘இறைவா, நீ எழுந்தருளி என் வலியைக் காரும்!’ எனக்கூறி மந்திரித்து, அங்கவஸ்திரத்தில் (பிடித்து) வைத்துவிடுவார். பின்னர் பாடம் சொன்ன பிறகு அந்த அங்கவஸ்திரத்தில் வைத்துவிடுவார் (கதை)
அருணந்தி சிவாச்சாரியார், மந்திரித்தவுடன் (ஆவாகனம் செய்தவுடன்) அவரது வலி அங்கவஸ்திரத்தில் போய் நின்றுவிடும் என்று அவர் நினைத்தார் போலும்.
சுருங்கக் கூறின், ஏதேனும் ஒருபொருளின் மீது இறைவன் வருகைக்காக மந்திரித்தல்.
- கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக