📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 3 மே, 2025

தரம் 4 - 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாக்கள் - தமிழ்

 பின்வரும் பந்தியை வாசிக்கவும்.

1.       மிக அதிகமான பரப்பளவில் மணல் மற்றும் மணற் குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம் ஆகும். இது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமான பகுதியாகும். இந்தப் பகுதிகளில் மணல், புழுதிப் புயல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக மணற்குன்றுகள் உருவாகின்றன.

பாலைவனங்கள் ஆண்டுக்கு இருநூற்றைம்பது மில்லி மீற்றருக்குக் குறைவாக மழையைப் பெறுகின்றன. அதிக வறட்சியைத் தாங்கி

வளரும் கள்ளி, பனை போன்ற சில தாவரங்கள் மட்டுமே இங்கு வளர்கின்றன. கங்காரு, எலி, ஆமை, சிலவகைப் பாம்புகள், பல்லிகள், ஒட்டகங்கள்  போன்றவை பாலைவனச் சூழலைச் சமாளித்து உயிர்வாழும் உயிரினிங்கள் ஆகும்.

 

பந்தியைத் துணையாகக் கொண்டு விடை தருக.

                                I.            மணலும் மணல் சார்ந்த இடமுமம் எவ்வாறு அழைக்கப்படும்?

                              II.            அதிக வறட்சியைத் தாங்கி வளரும் பயிரினங்கள் இரண்டு தருக.

                            III.            குட்டியீன்று பாலூட்டும் உயிரினங்கள் இரண்டு தருக.

                            IV.            பந்தியில் வந்துள்ள காலப் பெயர்ச் சொல் யாது?

                              V.            மணல், புழுதிப் புயல்கள் அடிக்கடி ஏற்படுவதால் உருவாகுவது எது?

                            VI.            பந்தியில் வந்துள்ள நீண்டகாலம் உயிர் வாழக்கூடிய உயிரினம் எது?

2. பின்வரும் ஒவ்வொரு வாக்கியத்திலும் எழுவாய், பயனிலை என்பவற்றின் தொடர்பு சரியாயின் (சரி) எனவும், பிழையாயின் (பிழை) எனவும் எதிரே உள்ள அடைப்புக்குள் அடையாளமிடுக.

        I.            அவள் எனது வீட்டிற்கு வருகிறான்  (     )

      II.            நான் காந்தனைப் பார்த்தேன்.   (     )

    III.            கறுப்பு பூனை பால் குடித்தது.  (     )

    IV.            நாம் எதிர்பார்த்தபடியே கலைவிழா நன்றாக நடந்து முடிந்தன. (     )

      V.            பல்லாயிரக் கணக்கான மக்களை ஆழிப்பேரலை விழுங்கு விட்டன.(     )

3. இறந்தகால பன்மை வினைச்சொல்லைத் தெரிவுசெய்து அதன் கீழ்க் கோடிடுக.

      1. மகிழ்ந்தன          2. பிரகாசிக்கின்றன          3. வருவார்கள்

 

4. கீழே தரப்பட்டுள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி, கருத்துள்ள வாக்கியமாக எழுதுக.

பூரிப்பாக / அரச மரம் / நின்றது / வானுறவோங்கித் / பெருத்து / தலைநிமிர்ந்து / அகன்று

 

5. அண்மை என்பதன் எதிர்க்கருத்துச் சொல் யாது? .........................................

 

6. கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு வினாவிலும் சரியாக எழுத்துக் கூட்டப்பட்ட சொல்லைத் தெரிவுசெய்து, அதன் கீழ்க் கோடிடுக.

1. (1) கடக்கரை        (2) கடற்கரை          (3) கடல்கரை

2. (2) கடைமை        (2) கடைம்மை          (3) கடமை

 

7. பின்வரும் வாக்கியத்தை இறந்தகால வாக்கியமாக மாற்றி எழுதுக.

காலையில் மாணவர்கள் புத்தகப்பைகளுடன் பாடசாலைக்குச் செல்கின்றனர்.

 

8. பின்வரும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான பழமொழியை புள்ளிக் கோட்டில் எழுதுக.

\கோபம் சிந்தனைக்கு இடையூறாக அமையும்.

 

9. எழுத்துக்க்களை ஒழுங்குபடுத்தி கருத்துள்ள சொல்லாக எழுதுக.

        I.            க / சா / லா / ர / ம்               .........................................................

      II.            பு / த் / ணு / து / ர் / சி / ச்        .........................................................

    III.            பி / த / ன்  / ம் / /ன / /க் /​கை

    IV.            வ / று / ழ / க் / கா

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக