📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 22 ஜூலை, 2025

தமிழும் ஆங்கிலமும் – கல்வியின் இரு கண்கள்! | Thamilsh Shudar

 தமிழும் ஆங்கிலமும் – கல்வியின் இரு கண்கள்!

தாய்மொழி மரபு | ஆங்கிலம் உலகத்தோடு இணைப்பு – இரண்டுக்கும் இடம் வேண்டும்!

இன்றைய உலகில் ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி என்ற நிலையைப் பெற்றிருக்கிறது. தொழில், அறிவியல், மருத்துவம், கணினி போன்ற அனைத்து துறைகளிலும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் மிகுந்தது. அதனால், ஆங்கிலம் கற்றல் என்பது காலத்தால் விதிக்கப்படும் அவசியம். ஆனால், இதன் பொருட்டு தாய்மொழியாம் தமிழை புறக்கணிப்பது என்பது தாய்ப்பாலை மறப்பதற்குச் சமமான பிழை என்பதை உணர்வது அவசியகும். 


🎓 சர்வதேச பாடசாலைகள் – தமிழ்மொழிக்கு இடமில்லையா?

சில சர்வதேச பாடசாலைகள் அல்லது பிரபல தனியார் பாடசாலைகளில், தமிழ்மொழி பேசும் மாணவர்களுக்கு கூட தண்டனை வழங்கப்படுவது கவலையை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும்.  “Speak in English only” என்ற அறிவிப்புகள், மாணவர்களின் தாய்மொழிப் பாவனைக்கு தடையாகவே அமைகின்றன.

  • தமிழைப் பேசினால் குறைந்த புள்ளிகள்

  • பெற்றோர்களுக்கு புகார்

  • ஆசிரியர்களுக்கே தமிழில் பேசுவதற்குத் தயக்கம்

இந்த சூழ்நிலைகள், மாணவர்களை தாய்மொழி மீதான பற்று மற்றும் அடையாள உணர்வை இழக்கச் செய்கின்றன.


🌍 ஆங்கிலத்தின் முக்கியத்துவம்

ஆங்கிலத்தை சிறப்பாகக் கற்றுக்கொள்வது, மாணவரின் எதிர்கால வெற்றிக்குத் திறவுகோலாக இருக்க முடியும் என்பது மறக்க முடியாத உண்மையாகும். 

  • உலகளாவிய வேலை வாய்ப்புகள்

  • உயர்கல்வி வாய்ப்புகள்

  • வலைதள, மென்பொருள், தொழில்நுட்ப அறிவு வளர்ச்சி

ஆனால், இதற்காகத் தன்னேரிலாத் தமிழை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை!


🪔 தமிழ்மொழியின் உன்னதம் – அடையாளத்தின் அடித்தளம்!

தமிழ்மொழி என்பது வெறும் வழக்குமொழி அல்ல – அது ஒரு கலாச்சார அடையாளம்.

  • சங்க இலக்கியம் முதல் இன்றைய படைப்புகள் வரை, தமிழில் உலகை சென்றடையும் வண்ணமே உள்ளன. 

  • தாய்மொழியில் கல்வி பெற்ற குழந்தைகள், சிந்தனையும் படைப்பாற்றலும் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • தாய்மொழி வழி கற்றல் மூலமாக மனநலம், பற்று, சுயமரியாதை போன்றவை வளர்கின்றன.


🧠 இரு மொழியும் தேவை – ஒருமொழியும் தவிர்க்கக் கூடாது!

தாய்மொழியான தமிழையும், உலக மொழியான ஆங்கிலத்தையும் சம அளவில் வளர்த்தெடுத்தால்தான் மாணவரின் முழுமையான வளர்ச்சி ஏற்பட முடியும்.

தமிழ் பேசும் சூழலை பாடசாலைகள் ஊக்குவிக்க வேண்டும்.
ஆங்கிலம் சிறப்பாக கற்றுக்கொள்ளும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும்
✅ ஆசிரியர்கள், பெற்றோர், பாடசாலை நிர்வாகம் ஒன்றிணைந்து இவ்விரு மொழிகளுக்குமிடையே சமநிலை பேண வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக