வாசிப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மிகவும் தேவையான நூல்களை அவரவர் சிந்தித்து தேர்ந்தெடுத்து வாசிப்பது அவசியம். பிறர் நூல் வாங்குகிறார்கள் என்று நாம் வாங்குவது பின்னடைவு.
அது தமது நிகழ் கால வாழ்வியலுக்கும் எதிர்கால வெற்றிக்கும் பயன் தருவதை கருத்தில் கொள்ள வேண்டும். அது எந்த துறை சார்ந்த நூலாகவும் இருக்கலாம்.
முக்கியப் பிரிவுகளில் அவசியமாக வாசிக்க வேண்டிய நூல், தனது துறைசார் ஆர்வத்திற்குத் தேவையான நூல் என்று கருத்தில் கொண்டு வாசிப்பது சரியாகும். ஒருவர் எல்லா நூல்களையும் வாசிக்க வேண்டும் என்ற தேவை இல்லை.
விழிப்புணர்வைத் தரும் நன்னூற்கள் அனைத்தும் பல்வேறு பிரிவுகளில் வெளிவருகின்றது. வாசிப்பதிலும் சிந்திப்பதிலும் முதன்மைப்படுத்த வேண்டிய நூல்களை மூத்தவர்கள் இளையவர்களுக்கு வழிகாட்டுவது இன்றைய அவசியத் தேவை. அரசியல் தேவையும் கூட!
-அபூஷேக் முஹம்மத்.
-----------------------------------
உங்களது ஆக்கங்களையும் kalaimahanfairooz@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக