
சிந்து -- தமிழி இருமொழி முத்திரை
தமிழ் எழுத்து வரலாற்றுச் சான்றாகும்.
கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகைஅகல்
இரு விசும்பின் ஊன்றும் சூளை,
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!
கலம் செய் கோவே! நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே! இருள் கவ்வுவது போல புகையை எழுப்பி நீ இவனுக்கு ஈமத்தாழி செய்யத் தொடங்கி இருக்கிறாயே, இவன் புகழுக்கு ஏற்ற அளவில் தாழி செய்யவேண்டுமென்றால் இந்த நிலம் அளவுக்கு சக்கரம் செய்து, மலையளவு மண்ணை வைத்தல்லவா செய்ய வேண்டும். அதனை பெரிய தாழியை, ஈமத்தாழி செய்யும் கோமகனே ! என்கிறது இந்தப்பாடல் .
இந்தப்பாடல் புறநானூறில் புலவர் அவனை ஐயூர் முடவனார் என்பவரால் பாடப்பட்டது . அக்கால பாடலை நினைவு கூர்ந்தவாறு கீழ்காணும் ஆனைக்கோட்டை முத்திரையை ஆராய்கையில்
ஆனைக்கோட்டை முத்திரையின் இரு வரிசை எழுத்துகளையும் தனித் தனியே பிரித்து ஆராய்வதன் மூலம் அவற்றின் உண்மை வடிவத் தன்மை யினை அறியலாம் .
1 . மேல் வரிசையில் உள்ள சிந்து எழுத்து . இடமிருந்து : முதல் வடிவம் அம்பு பூட்டிய வில் போலுள்ளது . இதன் மேல்பகுதி முத்திரை விளிம் பில் மறைந்துள்ளது . சிந்து எழுத்து இடமிருந்து எழுதப்படுகிறது . தமிழி எழுத்து வலமிருந்து எழுதப்படுகிறது . இது முத்திரை ஆகவே , மாறுபட்டுக் காணப்படுகிறது . பதிக்கப்பட்டதும் எழுத்துகள் அவ்வவற்றின் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் . உலோக முத்திரை தேய்ந்து போனதால் வில் வடிவம் அறைகுறையாக உள்ளது . உருப்பெருக்கிப் பார்க்கும்போது சற்றுத் தெளிவாக உள்ளது .
1. D என்ற வில் வடிவம் = ம் மெய்யெழுத்து . அதன் அம்புபோலுள்ள ஒற்றைக் கோடு l அகர எழுத்தின் உயிர்க்குறியீடு ( Diacritical mark ) ஆகும் . ஆகவே , அம்பு பூட்டிய வில் வடிவம் ம் + அ = ம என்பதாகும் .
2 . இரண்டாவது வடிவம் திரிசூலம் போலுள்ளது . இந்த எழுத்து சிந்துக்கு முந்திய உயிர்மெய்யன் ( Syllabary) எழுத்து முறையிலிருந்து மரபு முறை யாக வந்த = ய என்ற உயிர்மெய் எழுத்து . ஆகவே , இவ்வடிவம் = ய .
3 . இந்த மூன்றாவது எழுத்து மேலே கூறிய இரண்டாவது வடிவமான Y என்ற வடிவம் அதன் மேல் உள்ள V வடிவின் வலப்பக்கக் கிளை யில் இருந்து அடிப்பக்கத்தை ஒட்டி மேலெழு கிறது . இவ் எழுத்து ன ஆகும் . Y = ன் . வலப்பக்கக் கிளையில் உள்ள கோடு ஒற்றைக் கோடு l அகர உயிர்க்குறியீடு ஆகும் . இதன்படி =
ன் + அ = ன என்றாகும் .
4 . கீழ் வரிசை --
இனி , சிந்து எழுத்தையும் , தமிழி எழுத்தையும் வரிசை முறைப்படி அமைத்துப் படித்துப் காட்டலாம் :
சிந்து இடமிருந்து : ம -- ய -- ன
வாசிப்பு = மயன
கோவேத்
= மயன
= கோவேத்து
= மயன = மயன் + அ = மயனது
= கோவேத் > கோவேத்து
இதனை ஒற்று இரட்டித்துப் படிக்க வேண்டும் . தமிழியில் இம்முறை வழக்கில் இருந்ததை அறிவோம் . எகிப்திய அல் - கடிம் துறைமுக நகரில் அகழ்ந்து ஆராயப்பட்ட கொல்லன் பட்டறையில் கிடைத்த பானையோட்டில் உள்ள எழுத்து களில் : கணன் -- சாதன்
என எழுதி
= கண்ணன் -- சாத்தன்
என்று ஒற்று இரட்டித்துப் படிக்கும் முறை இருந்தது தெரிகிறது . அதே முறையில் இங்கும் ஒற்று இரட்டித்துப் படிக்க வேண்டும் . இதன்படி , கோவேத் = கோவேத்து ஆகும்
மயன் என்பது இயக்கர் குலத் தொழில் வினைஞன் என்று நமக்குத் தெரியும் . அவர்கள் தமிழினத்தின் மட்பாண்ட , உலோகத் தொழில் தொடர்பான வினைஞர்கள் . முதலில் இவர்கள் மட்பாண்டத் தொழில் வினைஞர்களாக இருந்து , அதன் வழிச் செம்பு முதலிய உலோகங் களைக் கண்டுபிடித்து நாகரிகம் தோன்றுவதற்கும் , பலுசிஸ்தானிய மெகர்கர் , சிந்து நகர நாகரிகம் தோன்றுவதற்கும் காரணமாயினர் . அதுபோல தெற்கிலும் தமிழகத்திலும் இலங்கையிலும் உயரிய நாகரிகங் களை உருவாக்கினர் . இவர்கள் இயக்கர் எனப்பட்டனர் .
இயமன் , குவிரன் , மயன் ஆகியோர் இயக்கர் குலத்து முன்னோரே . மேலும் , சிந்து எழுத்தில் மயன் என்ற இன -- குல முன்னோன் பல்வேறு முத்திரைகளில் குறிப்பிடப் பெற்று இருப்பதைக் காண்கிறோம் . ஈழம் -- இலங்கையைப் பொறுத்தவரை மயன் என்பான் இராவணன் மனைவி மண்டோதரியின் தந்தையாகக் குறிப் பிடப் பெறுகிறான் . இராவணன் நமது இலங்கைக்கு உரியவன் என்ப தில் ஐயம் இருப்பினும் , இராமாயண காவியத் திரள் கதைகள் படிப்படியாக காலந்தோறும் ஆங்காங்கு நிலவிய மரபுவழிக் குறிப்புகளின் திரட்டே எனலாம் . ஆகவே , இலங்கையில் காணும் இயக்கர் இனத் தொடர்புகள் தமிழிந்தியத் தொல்வரலாற்றின் தொடர்ச்சியே ஆகும் .
ஆகவே , ஈழத்தில் கிடைத்த இந்த முத்திரை மிகக்கவனத்துடன் ஆராய வேண்டிய ஒன்றே . இரண்டாவது வரியின் உள்ள கோவேத்து என்பது கோவேந்தன் என்பதையோ , வேட் கோவர் ஆகிய மட்பாண்ட வினைஞ ரையோ , யாரைக் குறித்தாலும் அவர் மயனுடன் தொடர்புடையோரே . இது குறித்து என்னிடம் நிறைய தரவுகள் இருப்பினும் இங்கு மேலும் ஆராய விரும்பவில்லை . இந்த முத்திரை உணர்த்தும் செய்திகள் வருமாறு :
1 ) சிந்து எழுத்து வடிவங்கள் யாவும் தூய்மையான சிந்து நாகரிக எழுத்து வடிவங்களே . சிந்து நாகரிக எழுத்து களுடன் 100 / 100 பொருந்துவதுடன் சிந்து எழுத்தாகப் படிக்கவும் இயலுகி றது . இவற்றை வெறும் மட்பாண்டக் கீறல் குறிகள் ( graffiti marks ) என்பது சிந்து நாகரிக எழுத்து வடிவங்களே .
பொதுவாக தமிழ் நாட்டிலும் , இலங்கையிலும் பெருங் கற்காலம் -- இரும்புப் பண்பாட்டின் காலம் கிமு 1300 அளவில் தொடங்கு கிறது . இதற்குப் பிந்திய -- டாக்டர் இராஜன் கூறுவதுபோல -- தமிழி எழுத்தின் காலத்தினை கிமு 1000 வரையி லும் கொண்டு செல்லலாம் .
வேள் நாகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக