📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 15 மார்ச், 2025

பழமொழிகளும் அவற்றின் பொருள்களும் அகர வரிசையில்

  1.  அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு - ஒற்றுமையே பலம்.
  2. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறியலாம் - உத்தம நட்பு
  3. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு - எல்லை மீறினால் எதுவும் தீமை பயக்கும்.
  4. அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் - விடா முயற்சி பலன் தரும்.
  5. அழுத பிள்ளை பால் குடிக்கும் - முயற்சி செய்தவர் பயன் பெறுவர்
  6. அணை கடந்த வௌ்ளம் அழுதாலும் வராது - நடந்து முடிந்த செயலை நினைப்பதில் பலனில்லை.
  7. அறையில் ஆடியன்றோ அம்பலத்தில் ஆட வேண்டும் - எதனையும் முன் அனுபவத்துடன் செய்ய வேண்டும்.
  8. அடாது செய்பவன் படாது படுவான் - கேடு செய்பவர் பலனை அனுபவிப்பர்.
  9. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி - முன்மாதிரி
  10. அஞ்சினவன் கண்ணுக்கு கண்டதெல்லாம் பேய் - பயந்தவனை எல்லாம் பயமுறுத்தும்
  11. ஆனைக்கொரு காலம் பூனைக்கொரு காலம் - காலம் மாறி மாறி வரும்.
  12. ஆனைக்கும் அடி சறுக்கும் - பெரியோரும் சில வேளைகளில் தவறிழைக்கலாம்.
  13. ஆற்றிலே போட்டாலும் அளவறிந்து போடு - எதையும் அளவோடு செய்தல் வேண்டும்.
  14. ஆழமறியாது காலை விடாதே - எதனையும் ஆராய்ந்து செய்தல் வேண்டும்.
  15. ஆழ அமுக்கினாலும் நாழி முகவாது - கொள்ளக் கூடிய அளவே கொள்ளும்.
  16. ஆடையில்லா மனிதன் அரை மனிதன் - உடையின் சிறப்பு
  17. ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம் - கோபம் சிந்தனைக்கு இடையூறாக இருக்கும்.
  18. ஆறின கஞ்சி பழங்கஞ்சி - காலத்தின் மகிமை
  19. ஆட மாட்டாதவள் அரங்கு பிழை என்றாளாம் - விடயப் புலமையின்றி வேறொன்றைக் கூறக் கூடாது.
  20. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை - திருப்திப்படாத மனம்
  21. இரக்கப் போனாலும் சிறக்கப் போ - வறுமையிலும் செம்மையாக வாழ வேண்டும்.
  22. இளமையில் கல்வி சிலையில் எழுத்து - இள வயதுக் கல்வி நிலைத்திருக்கும்.
  23. இறைத்த கிணறே ஊறும். இறையாத கிணறே நாறும் - தருமத்தின் மகிமை
  24. இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை - தருமம் செய்வதன் சிறப்பு
  25. ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும் - பணத்தின் வலிமை
  26. உப்பிட்டவரை உள்ளளவும் நினை - நன்றி மறவாமை
  27. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே - சுவையில்லாத உணவினால் பயன் கிடையாது.
  28. உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும் - பயன்படுத்தப்படாத பொருள் பயனற்றுப் போகும்.
  29. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? - தகுதிக்கு மேல் எதையும் பெற முடியாது.
  30. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் - பகை அழிவைத் தரும்.
  31. எடுக்கிறது பிச்சை. ஏறுவது பல்லக்கு - வீண் பெருமை
  32. எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே - கிடைக்காத ஒன்றிற்காக ஏங்குதல்.
  33. எலி வளையானாலும் தனி வளை வேண்டும் - சிறிய பொருளானாலும் சொந்தமாக இருக்க வேண்டும்.
  34. எறும்பூரக் கற் குழியும் - தொடர் முயற்சியின் பலன்
  35. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது - வெறும் புத்தகப் படிப்பின் பயன் / பயனற்ற கல்வி
  36. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? - இளமையில் எதனையும் செய்ய வேண்டும்.
  37. ஐயர் வருமட்டும் அமாவாசை காத்திருக்குமா? - காலம் நில்லாதது.
  38. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - ஒற்றுமை
  39. ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தாற் சரி - எப்படியானாலும் காரியம் முடிய வேண்டும்.
  40. ஒரு கை தட்டினால் ஓசை வருமா? - கூட்டு முயற்சியின் தேவைப்பாடு
(தொடரும்)


பின்வரும் பழமொழிகளைப் பூர்த்தி செய்க.

  1. ....................................... ......................................... ............................... அம்மியும் நகரும்.
  2. அன்பான ..................................... .................................................... அறியலாம்.
  3. அஞ்சினவன் கண்ணுக்கு ............................................. ....................................................
  4. ................................. .............................. ................................ தலை முழுகு.
  5. அணை ........................................ வௌ்ளம் .................................................. வராது.
  6. ஆனைக்கொரு காலம் ..................................................... ..........................................
  7. ..................................... .......................................... அளவறிந்து போடு.
  8. ஆத்திரக்காரனுக்கு ........................................ மத்திமம்
  9. இறைத்த ..........................................  ......................................... இறையாத கிணறே நாறும்.
  10. ஈட்டி எட்டின .................................. ............................. .......................... பாதாளம் மட்டும் பாயும்.
  11. உயர உயரப் பறந்தாலும் ........................................ ..................................................?
  12. ஊர் இரண்டு பட்டால் ............................................... ...................................................
  13. எலி .......................................... தனி வளை ............................................
  14. .................................................. வளையாதது ........................................... வளையுமா?
  15.  ................................................. ........................... ஓசை உண்டாகுமா?
  16. காக்கைக்கும் தன்குஞ்சு ........................... .......................................................
  17. ஐந்து பணத்துக்குக் .................................. ................................. ஆறு கடக்கப் பாயவும் வேண்டும்.
  18. கிணற்றுத் ....................................... ........................................ வழக்கமேன்?
  19. குற்றம் ........................................... சுற்றம் ..................................................
  20. குப்பையில் ................................. குன்றிமணி ...........................................


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக