📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 25 ஜனவரி, 2025

இணைமொழிகள் எத்தனை வகைப்படும்?

ஓசைநயம் பற்றியும் பொருட் செறிவுடையனவாகவும் அமைந்து இரு சொற்கள் இணைந்து வருவன அது இணைமொழி எனப்படும். பல சொற்களில் விளக்க வேண்டிய ஒரு பொருளை ஓரிரு சொற்களில் இலகுவாக விளக்க உதவும்.

இணைமொழிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

  • ஒத்த கருத்துள்ள இணைமொழிகள்
        உதாரணம்     = சீரும் சிறப்பும்
                                    = ஏழை எளியவர்

  • எதிர்க்கருத்துள்ள இணைமொழிகள்
        உதாரணம்     = ஏற்ற இறக்கம்
                                    = இன்பதுன்பம்

  • ஓசைநயம் மிக்க இணைமொழிகள்
        உதாரணம்        = திட்டவட்டமாக
                                        = சின்னாபின்னம்


இணைமொழிகளும் பொருள்களும்
  1. அருமை பெருமை - மிகச் சிறப்பு
  2. அங்கும் இங்கும் - எல்லா இடத்திலும் (அலைச்சல்)
  3. அல்லும் பகலும் - இரவும் பகலும்
  4. அக்கம் பக்கம் - அருகருகே
  5. அமளி துமளி -  பேராரவாரம்
  6. அரைகுறை - பூரணமற்றது
  7. அகடவிகடம் - தந்திரம்
  8. அகமும் முகமும் - உள்ளும் புறமும்
  9. அடக்க ஒடுக்கம் - பணிவு
  10. அடிபிடி - சண்டை
  11. அடி முடி - மேலும் கீழும்
  12. அடிப்பும் அணைப்பும் - கோபமும் பாசமும்
  13. அடுப்பும் தடுப்புமாய் - எப்போதும் ஏதோ செய்து கொண்டிருத்தல்
  14. அடுகிடை படுகிடை - எந்நேரமும் ஓரிடத்தில் தங்குதல்
  15. அண்ட பிண்டம்  - எல்லாப் பொருள்களும்
  16. அண்டை அயல் - அயலவர்கள்
  17. அந்தியும் சந்தியும் - காலையும் மாலையும்
  18. அமளி துமளி - பிரச்சினை / சண்டை
  19. அரு உரு - காண்பதற்கரிய
  20. அரைகுறை - முழுமை பெறாமை
  21. அல்லும் பகலும் - இரவும் பகலும்
  22. அல்லை தொல்லை - பிரச்சினை
  23. அல்லோல கல்லோலம் - சிதறுண்டு / அலங்கோலம்
  24. அலைந்து குலைந்து - கஷ்டப்படுத்தி / சீரழித்து
  25. அழித்தொழித்து - முற்றாக அழித்து
  26. அழுங்கி புழுங்கி - பொறாமை
  27. அழுத்தம் திருத்தமாய் - உறுதியாக / பூரண திருத்தமாக
  28. அழுது தொழுது - இரத்தல்
  29. அள்ளாடி தள்ளாடி - உறுதியின்மை
  30. அற்றார்க்கும் அயலார்க்கும் - எல்லோருக்கும்
  31. அற்ப சொற்பம் - மிகக்கொஞ்சம்
  32. அறமும் மறமும் - தர்மமும் அதர்மமும்
  33. அறக்கப் பறக்க - மிக அவசரம்
  34. அன்பும் அருளும்  - மிகுந்த கருணை
  35. இரவும் பகலும் - நாள் முழுவதும்
(தொடரும்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக