📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 21 ஜனவரி, 2025

தரம் 5 தமிழ் - பயிற்சி | Grade 5 Scholarship Examination's Tamil

 பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

மிக அதிகமான பரப்பளவில் மணல் மற்றும் மணற் குன்றுகள் நிறைந்த பகுதி பாலைவனம் எனப்படும். உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு பாலைவனமாகும். இது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் கடினமான பகுதியாகும். இந்தப் பகுதிகளில் மணல், புழுதிப் புயல்கள் என்பன அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக மணற்குன்றுகள் உருவாகின்றன. இருப்பினும் பாலை வனத்தில் காணப்படும் சுனைகளால் பச்சைப் பசேலெனக் காணப்படும் பாலைவனப் பசுந்தரைகள் இப்பாலைவனங்களை அழகுபடுத்துகின்றன. பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகங்கள் நீர் அருந்துவதற்கு இந்தச் சுனைகள் பெரிதும் உதவுகின்றன.          

பந்தியைத் துணையாகக் கொண்டு விடை தருக.

1. மணல் மற்றும் மணல் குன்றுகள் நிறைந்த பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?

.......................................................

2. மொத்த நிலப்பரப்பில் பாலைவனங்கள் எத்தனை பங்காக உள்ளன?

.....................................................

3. நீரூற்று என்ற கருத்தைத் தரும் சொல் எது?

....................................................

4. பந்தியில் வந்துள்ள இணைமொழி ஒன்றை எழுதுங்கள்................................................

5. பசுந்தரைகள் என்ற சொல்லைப் பிரித்தெழுதுக. ..............................................................

6. 'குன்று' என்ற சொல்லின் எதிர்க்கருத்துச் சொல்லை எழுதுக. .................................


02. மிகப் பொருத்தமான விடையின் கீழ்க் கீறிடுக.

1. ஒருமை இறந்தகால வினைச் சொல்லைத் தெரிவுசெய்து, அதன் கீழ்க் கோடிடுக.

    1. ஓடுகின்றது        2. இருந்தது        3. பிரகாசிக்கின்றன

2. உயர்திணை இறந்தகால ஒருமை வினைச்சொல்லைத் தெரிவுசெய்து, அதன் கீழே கோடிடுக.

    1.  ஓடினான்            2. சென்றது        3. பிரகாசித்தன

3. உயர்திணை ஒருமை பெண்பால் பெயர்ச்சொல்லைத் தெரிவுசெய்து அதன் கீழே கோடிடுக.

    1. மனிதன்            2. சிறுமி                3. பெண்கள்


03. பொருத்தமான நிறுத்தற் குறிகளை இடுக.

    1. இலங்கையின் பழைமையான நகரங்களுள் அநுராதபுரமும் ஒன்றாகும்

    2. நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள் யாவர்


04. பின்வரும் தனிவாக்கியங்களைத் தொடர் வாக்கியமாக எழுதுக.

    * பூனை பாலைக் குடித்தது.

    * பூனையின் தாகமும் களைப்பும் நீங்கியது.

    ..............................................................................................


05. பின்வரும் பந்தியில் காணப்படும் இடைவௌிகளுக்குப் பொருத்தமான சொற்களைத் தெரிவுசெய்து எழுதுக.

    (பாரதியார் / தன்மை / காப்பியங்கள் / சீவக சிந்தாமணி)

    தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை 1. .......................................... போன்ற இனிய 2. ............................. உள்ளன. இவை மிகவும் பழைமையான படிக்கும்போது உள்ளத்தை உருக்கும் 3. ..................................... உடையவை. தற்காலத்திலேயே 4. ..................................., கவிமணி போன்ற கவிஞர்கள் இனிய எளிய நடையில் பல நூல்களை இயற்றியுள்ளனர். 


06. பின்வரும் பந்தியில் கீறிட்ட இடத்திற்குப் பொருத்தமான விடைகளைத் தெரிவுசெய்து கோடிடுக.

    ஓர் அடர்ந்த காட்டில் (1) .................................... வாழ்ந்து வந்தது. அதனுடன் (2) ............................ நண்பனாக இருந்தது. ஒருநாள் அவை காட்டு வழியே நடந்து செல்லும்போது (3) கண்டன.

    (1) 1. ஆட்டுக்கு                2. ஓர் ஆடு                3. ஆட்டை

    (2) 1. ஒரு நரி                     2. நரியின்                3. நரிகளோடு

    (3) 1. எறும்புகளோடு    2. எறும்புகளால்    3. எறும்புகளைக்


07. பின்வரும் சொற்களைப் பொருத்தமான முறையில் ஒழுங்குபடுத்தி கருத்துள்ள வாக்கியம் அமைக்கவும்.

    (1) வேண்டாம் / போக்கெல்லாம் / மனம் / போன / போக

        ...............................................................................................................

    (2) பாதுகாத்தல் / எமது / நோய் / உடலை / வராமல் / நாம் / வேண்டும்.

        ...............................................................................................................


08. பின்வரும் பழமொழிகளின் கருத்தினை எழுதுக.

        1. சிறுதுளி பெரு வௌ்ளம்

            ....................................................................

        2. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

            .................................................................


09. பின்வரும் வினாக்களுக்கு இடைவௌிகளுக்குப் பொருத்தமான சொற்களைத் தெரிவுசெய்து கோடிடுக.

        1. பிள்ளைகள் ஒன்று சேர்ந்து ............................... (விளையாடினார்கள் / விளையாடின)

        2. அரசன் தஞ்சம் புகுந்த புறாவைக் .................... (காப்பாற்றினார்கள் / காப்பாற்றினான்)


10. தரப்பட்ட சொற்களுக்குப் பொருத்தமான இளமைப் பெயர்களை எழுதுக.

        1. நெல்            ..............................................

        2. தவளை    ...........................................


----------------------------------------

தரம் 5 | புலமைப்பரிசில் பரீட்சை | கலைமகன் பைரூஸ் | தமிழ்ச்சுடர் | scholarship examination | tamil | தமிழ் கற்போம் | மொழித்திறன் விருத்திச் செயற்பாடு

----------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக