மரபு என்பது நம் முன்னோர் ஒரு பொருளை எச்சொல்லால் வழங்கினரோ அவ்வாறே வழங்குவது ஆகும். உதாரணமாக, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருவதாகும். அவ்வாறு வழங்கப்படுகின்ற சொற்கள் மரபுச் சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இங்கு அனைத்து வகையான மரபுச் சொற்களும் இற்றைப்படுத்தப்படும். தொடர்ந்து பயணித்து, தமிழ் கற்றுக் கொள்வோம்.
தொனிகளுக்குரிய மரபுப் பெயர்கள்
- அணில் - கீச்சிடும்
- ஆடு - கத்தும்
- பாம்பு - சீறும்
- அணில் - கீச்சிடும்
- புறா - குறுகுறுக்கும்
- தேவாங்கு - அழும்
- கிளி - பேசும்
- ஓநாய் - ஊளையிடும்
- பூனை - சீறும்
- சிங்கம் - கர்ச்சிக்கும்
- பசு - கத்தும் / கதறும்
- கழுதை - கத்தும்
- பன்றி - உறுமும்
- காகம் - கரையும்
- கோழி - கொக்கரிக்கும்
- நாய் - குரைக்கும்
- புல - உறுமும்
- யானை - பிளிறும்
- ஆந்தை - அலறும்
- கரடி - கத்தும் / உறுமும்
- குயில் - கூவும்
- மயில் - அகவும்
- புறா - குறுகுறுக்கும்
- பல்லி - சொல்லும்
- குரங்கு - அலப்பும்
- தவளை - கத்தும்
- குதிரை - கனைக்கும்
- குருவி - கீச்சிடும்
- தேனீ - ரீங்காரமிடும்
- வானம்பாடி - பாடும்
- நரி - ஊளையிடும்
- ஓநாய் - ஊளையிடும்
- எருது - முக்காரமிடும்
- எருமை - எக்காளமிடும்
- எலி - கீச்சிடும்
- வண்டு - இரையும்
- சேவல் - கூவும்
- மீன் - குஞ்சு
- வேம்பு - கன்று
- எலுமிச்சை - கன்று
- காகம் - குஞ்சு
- தவளை - குஞ்சு / பேத்தை
- அணில் - குஞ்சு / பிள்ளை
- ஆமை - குஞ்சு
- நாய் - குட்டி
- புலி - குட்டி
- குதிரை - குட்டி
- பூனை - குட்டி
- யானை - குட்டி / கன்று / போதகம்
- எருமை - கன்று
- பன்றி - குட்டி, பறழ்
- கிளி - பிள்ளை / குஞ்சு
- ஆடு - குட்டி
- பாம்பு - குட்டி
- சிங்கம் - குட்டி / குருளை
- கோழி - குஞ்சு
- பனை - வடலி
- வாழை - குட்டி
- பலா - கன்று
- மா - கன்று
- தென்னை - கன்று / பிள்ளை
- புகையிலை - நாற்று
- வேம்பு - கன்று
- கத்தரி - கன்று
- மான் - குட்டி
- மிளகாய் - நாற்று / கன்று
- கீரி - பிள்ளை
- பசு - கன்று
- குரங்கு - குட்டி / பறள்
- மூங்கில் - கன்று
- கரடி - குட்டி
- கமுகு (பாக்கு) - கன்று / பிள்ளை
- நாணல் - நாற்று
- முயல் - குட்டி / பிள்ளை
ஆண் - பெண் மரபுப் பெயர்கள்
- ஆடு - கடா = மறி
- மாடு - ஏறு / காளை / எருது = நாகு / பசு
- கோழி - சேவல் = பேடு / பெட்டை
- நாய் - கடுவன் = பெட்டை
- யானை - களிறு = பிடி
- குரங்கு - கடுவன் = மந்தி
- பூனை - கடுவன் = பெட்டை
- மான் - கலை = பினை
- குதிரை - குண்டு = வடவை / பெட்டை
- மயில் - போத்து = அலகு
- பன்றி - களிறு = பிணை
- புலி - போத்து = பிணா
- நரி - ஓரி = பாட்டி
- நண்டு - அலவன் = பெட்டை / பெடை
- சிங்கம் - ஏறு = பெட்டை
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக