அளபெடை
செய்யுளொன்றில் ஓசை குறையும் போது அந்த இடத்திலுள்ள எழுத்தோடு அதன் இணை எழுத்தையும் சேர்த்து ஓசையை நிறைவு செய்வர். இதற்கு அளபெடை என்று பெயர். அளபெடை இரு வகைப்படும்.
அ. உயிரளபெடை
ஆ. ஒற்றளபெடை
1.உயிரளபெடை
**************
உயிரெழுத்தைத் கொண்டு ஓசையை நிறைவு செய்தால் அது உயிரளபெடை யாகும்.
- செய்யுளிசையளபெடை (அ)
- இன்னிசையளபெடை (உ)
- சொல்லியைளபெடை (இ)
என இது 3 வகைப்படும்.
செய்யுளிசையளபெடை (அ)
------------------------------------------
செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்ய சொல்லின் முதல், இடை, இறுதியில் உயிர்நெடில் எழுத்துக்கள் அளபெடுத்து வருவது செய்யுளிசையளபெடை என்பதாகும். இதன் வேறுபெயர் இசை நிறையளபெடை.
உதாரணம் - தொழாஅர்
- உழாஅர்
- நல்லபடாஅ
- ஆதூம்(ஆஅதூம்)
- ஓஓதல்
- நடுவொரீஇ
- தூஉம், தொழுஉம், தரூஉம், வெரூஉம்
சொல்லிசையளபெடை (இ)
-------------------------------------
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் பெயர்ச் சொல்லை வினையெச்சசொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்து வருவதே சொல்லிசையளபெடை என்பதாகும்.
உதாரணம் -
- குடிதழீஇ
- அடிதழீஇ
- உரனசைஇ
இன்னிசையளபெடை (உ)
-----------------------------------
செய்யுளில் ஓசை குறையாத போதும் செவிக்கு இனிய ஓசை தரும் பொருட்டு உயிர்குறில் நெடிலாகி மேலும் அளபெடுத்து வருவது இன்னிசையளபெடை ஆகும்
உதாரணம்
- உண்பதூஉம்
- கொடுப்பதூஉம்
- உடுப்பதூஉம்
2. ஒற்றளபெடை
**************
செய்யுளில் ஓசை குறையும் போது அவ்வோசையை நிறைவு செய்யும் பொருட்டு சொல்லில் மெய்யெழுத்து அளபெடுத்து வருவதே ஒற்றளபெடை என்பதாகும். இதில் ஆய்த எழுத்தும் அளபெடுத்து வரும்.
உதாரணம் -
- கண்ண்கருவினை
- கலங்ங்குநெஞ்சமில்லை
- இலஃஃகுமுத்தின்
- மடங்ங்கலந்த.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக