1. பின்வரும்
பந்தியை வாசித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.
குமார் மாலைநேர வகுப்புக்கு தனது தாயாருடன் சென்றான். அப்போது பாதையோரத்தில் சிறிய பூனைக் குட்டியொன்று கத்தியபடி இருந்தது. பாசத்துடன் அப்பூனைக்குட்டியைத் தூக்கி எடுத்தான். அவன் ‘அம்மா இந்தப் பூனைக்குட்டி பாவம் வீட்டுக்குக் கொண்டு போவோமா?’ என்று கேட்டான். அம்மாவும் சரியெனக் கூறியதால் அவன் மகிழ்ச்சியடைந்தான்.
I. பந்தியில் வந்துள்ள காலப் பெயர் ஒன்றை எழுதுக.
II. பந்தியில் வந்துள்ள பெயரடைமொழிச் சொல்லொன்றை எழுதுக. III. ‘புண்ணியம்’ எனும் சொல்லின் எதிர்ப்பதத்தினை எழுதுக.
IV. பாதையோரத்தில் எனும் சொல்லைப் பிரித்து எழுதுக.
V. உயர்திணை, பெண்பால், பெயர்ச்சொல் ஒன்றை எழுதுக.
2. பின்வரும் ஒவ்வொரு வாக்கியத்தினதும் வெற்றிடத்திற்குப் பொருத்தமா பயனிலையை அடைப்பிலிருந்து தெரிவுசெய்து அதன் கீழ்க் கோடிடுக.
I. தம்பியும் தங்கையும் கடைக்குப் (போனார்கள் / போனோம்)
II. கண்களிலிருந்து கண்ணீர் (கசிந்தன / கசிந்தது)
III. தன்னுடைய கதைப் புத்தகத்தைக் காணவில்லை என்று அமுதா (அழுதாள் / அழுதது)
-தொடரும்
தொ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக