📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 25 ஜூன், 2025

எதிர்ப்பாற் சொற்கள்

எதிர்ப்பாற் சொற்கள் சகல வகுப்புகளுக்குமான -  பொதுப் ரீட்சைகளுக்குமான வினாக்களாக வருகின்றமை குறிப்பிடத்தக்கதுஇங்கு இற்றைப்படுத்தப்படுகின்ற எதிர்ப்பாற் சொற்களின் PDF’ கோப்பும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது

ஒரு பால் குறிக்கும்  சொல்லுக்கு எதிரான பால் எதிர்ப்பாற்  சொல் எனப்படும். இது இரண்டு வகைப்படும்.

1. உயர்திணை எதிர்ப்பாற் சொல்

2. அஃறிணை எதிர்ப்பாற் சொல்

1.  அப்பன் அம்மை

2.       அப்பா - அம்மா

3.       அரசன் அரசி

4.       அழகன்  - அழகி

5.       அடியான் அடியாள்

6.       அண்ணன் அக்கா

7.       அரக்கன் அரக்கி

8.       அன்னை தந்தை

9.       அவன் அவள்

10.   ஆண்டான் ஆண்டாள்

11.   ஆயன் ஆய்ச்சி

12.   ஆசிரியன் ஆசிரியை

13.   ஆடவன் பெண்டு

14.   ஆடவர் பெண்டிர்

15.   இளவரசன் இளவரசி

16.   இளைஞன் யுவதி

17.   இடையன் இடைச்சி

18.   இந்திரன் இந்திராணி

19.   இயக்கன் இயக்கி

20.   இறைவன் இறைவி

21.   ஈசுவரன் - ஈசுவரி

22.   உத்தமன் உத்தமி

23.   உழவன் உழத்தி

24.   எசமான் எசமானி / எசமாட்டி

25.   எயினன் எயிற்றி

26.   ஒருவன் ஒருத்தி

27.   கணவன் மனைவி

28.   கள்வன் கள்வி

29.   காவற்காரன் காவற்காரி

30.   காதலன் காதலி

31.   கிழவன் கிழவி

32.   குமரன் குமரி

33.   குயவன் குயத்தி

34.   குருடன் குருடி

35.   குரு குருபத்தினி

36.   குறவன் குறத்தி

37.   கூலிக்காரன் கூலிக்காரி

38.   கொழுநன் மனைவி

39.   சங்கரன் சங்கரி

40.   சகன் சகி

41.   சகோதரன் சகோதரி

42.   சிற்றப்பன் சின்னம்மை

43.   சிறுவன் சிறுமி

44.   சிநேகிதன் சிநேகிதி

45.   சீமான் சீமாட்டி

46.   சீலவான் சீலவதி

47.   சுந்தரன் சுந்தரி

48.   செல்வன் செல்வி

49.   செம்படவன் செம்படுவிச்சி

50.   சேவகன் சேவகி

51.   ஞானவான் ஞானவதி

52.   தச்சன் தச்சிச்சி

53.   தந்தை தாய்

54.   தபுதாரன் விதவை

55.   தம்பி தங்கை

56.   தமிழன் தமிழச்சி

57.   தலைவன் தலைவி

58.   தனவான் தனவதி

59.   தனயன் தனயை

60.   தட்டான் தட்டாத்தி

61.   தாசன் தாசி

62.   தாத்தா பாட்டி

63.   திருடன் திருடி

64.   திருவாளன் திருவாட்டி

65.   தூயவன் தூயவள்

66.   தேவராளன் தேவராட்டி

67.   தேவன் தேவி

68.   தோழன் தோழி

69.   தையற்காரன் - தையற்காரி

70.   நடிகன் நடிகை

71.   நம்பி நங்கை

72.   நல்லவன் நல்லவள்

73.   நாட்டியக்காரன் நாட்டியக்காரி

74.   நாயகன் நாயகி

75.   நிபுணன் நிபுணை

76.   பணக்காரன் பணக்காரி

77.   பாட்டன் பாட்டி

78.   பாடகன் பாடகி

79.   பாக்கியவான் பாக்கியவதி

80.   பாங்கன் பாங்கி

81.   பாணன் பாடினி, விறலி

82.   பாதகன் பாதகி

83.   பாலகன் பாலகி

84.   பிரான் பிராட்டி

85.   பிரியன் பிரியை

86.   பிதா மாதா

87.   பிக்கு பிக்குனி

88.   புண்ணியவான் புண்ணியவதி

89.   புத்திரன் புத்திரி

90.   புதல்வன் புதல்வி

91.   மறவன் - மறத்தி

92.   மருமகன் மருமகள்

93.   மடையன் மடைச்சி

94.   மித்திரன் -- மித்திரி

95.   மைத்துனன் மைத்துனி

96.   மூத்தவன் மூத்தவள்

97.   வண்ணான் வண்ணாத்தி

98.   வீரன் வீராங்கனை

99.   வேடன் வேடுவிச்சி

100. வேலைக்காரன் வேலைக்காரி


        -தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்


    


-


-jj



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக