- வயோதிபம் அடைந்து இறக்காமல் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் மரணம் நிகழுதல் - அகால மரணம்
- வௌிப்படைப் பொருளில் புகழ்ந்தும் மறை பொருளில் இகழ்ந்தும் கூறுவது - அங்கதம்
- அறிஞர்கள் பலர் கூடிய சபை நடுவே புதிதாக உருவாக்கப்பட்ட நூலை அல்லது கலை நிகழ்வை படித்தோ அல்லது நிகழ்த்திக் காட்டியோ சபையினரை ஏற்றுக் கொள்ளச் செய்தல் - அரங்கேற்றம்
- பிறர் தம்மை இன்னாரென்று அறியாதவாறு மாறுவேடம் பூண்டு மக்கள் மத்தியில் வாழ்தல் - அஞ்ஞாதவாசம்
- ஒரே சந்தர்ப்பத்தில் எட்டு விடயங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன் - அட்டாவதானி
- மாலையிலோ அல்லது இரவிலோ கூடும் சந்தை - அல்லங்காடி
- ஆணும் பெண்ணும் அல்லாத தன்மை - அலி
- ஒரு நூலின் இறுதியில் சேர்க்கப்படும் பகுதி - அனுபந்தம்
- கணவனை இழந்த பெண் - கைம்பெண் / அமங்கலி / விதவை
- குறித்த ஒரு நாளில் நீதிமன்றத்திற்கு சமுகமளிக்கும்படி நீதிபதியால் ஒருவருக்கு விடுக்கப்படும் அதிகாரபூர்வமான கட்டளை - அழைப்பாணை
- கோட்டையைச் சுற்றி அமைந்த நீர்நிலை - அகழி
- உணவுகளை ஆக்கும் இடம் - அட்டில்
- ஒருவர் அல்லது ஒரு பொருள் தானே தன் கதையைச் சொல்லுதல் - சுயசரிதை
- மற்றவர்களைப் பற்றி அக்கறை இல்லாதவன் - சுயநலவாதி
- மனைவியை இழந்தவன் - தபுதாரன்
பகுதி 1இன் இணைப்பு
---------------------------------------------------------------------------------------------------------------
Tamil grammar | Thodar mozhikku Oru Mozhi | Thodar molikku oru moli | Thamilsh Shudar
---------------------------------------------------------------------------------------------------------------
Generating Download Link...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக