இற்றைக்கு 56 ஆண்டுகட்கு முன்னர், சென்னை26, வடபழனி அச்சகத்தின் மூலம் அச்சிடப்பட்ட நூல் ‘உலகத் தமிழ் மாநாடு மலர்’ - சென்னை 1968. பல்வேறு சிறப்புப் பெருந்தலைப்புகளைத் தாங்கி, உப தலைப்புகளையும் தாங்கி வெளிவந்த நூல் அது.
கொழும்பு - புகையிரத நிலையத்திற்குக் கீழாக அமைந்துள்ள நடைபாதைப் புத்தகக் கடையில் 2000 ஆம் ஆண்டு வாங்கியது. வாங்கும்போது சாதாரண நிலையில் இருந்தது. இன்று தாள்கள் ஒவ்வொன்றாக உடைந்து கொண்டு
வருவதனால், அந்நூலில் உள்ள அனைத்தையும் எனக்குத் தட்டச்சிடுவதற்கு மிகவும் சிரமம் என்பதால் கட்டுரைகளை மாத்திரம் தட்டச்சிட்டு, தமிழ் மீது பற்றுக் கொண்டோர் கற்றுக்கொள்ள ஆவன செய்வதற்கு எண்ணியுள்ளேன்.‘தமிழ்ச்சுடர்’
நீண்டு, எல்லோரிடமும் செல்ல வேண்டும் என்பதே எனது அவா என்பதால், சான்றோர் - தமிழ்
ஆர்வலர்கள் விரும்பினால் உங்களால் இயன்ற பண உதவிகளை வழங்குவதனூடாக
இற்றைப்படுத்துவதற்கு, தமிழில் உள்ள பழம்பெரும் நூல்களிலுள்ள அருமந்த கட்டுரைகளைத்
தருவதற்கு ஏதுவாக இருக்கும்.
உங்கள் ஆலோசனைகளையும்
எதிர்பார்த்து,
-தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்
--------------------
இற்றைப்படுத்தியவை -
-------------------------------------
1. நுழைவாயில் - எம்.ஜீ. ராமச்சந்திரன்
2. கவிதைகள் இரண்டு - பாவேந்தர் பாரதிதாசன் / கவிக்கோ அப்துல் ரகுமான்
3. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக