ஒரே கருத்தைத் தரும் பல சொற்கள் ஒரு பொருள் பன்மொழி அல்லது ஒரு பொருள் குறிக்கும் பல சொல் எனப்படுகின்றது.
செய்யுள், உரைநடை இலக்கியங்களில் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
சொற்களுக்கான பொருள்கள்
1. ஒளி - சுடர், வெளிச்சம், விளக்கு, சோதி, பிரகாசம்
2.
இகழ்தல் - எள்ளுதல், ஏசுதல், நையாண்டி செய்தல், நிந்தித்தல், பழித்தல்
3. சொல் - பதம், கிளவி, மொழி, வாக்கு
4. சாதல் - இறத்தல், இறைபதம் அடைதல், மரணித்தல், மடிதல், பொன்றல்
5.
சிங்கம் - அரி, சீயம், கேசரி, அரிமா, ஏறு, ஆளி
6. சோலை - கா, பொழில், தோட்டம், தண்டலை
7. ஞானம் - கந்தழ், அறிவு, மதி, புத்தி, வித்தை
8.
தடாகம் - குளம், பொய்கை, கேணி, புட்கரணி, கயம்
9. பெண் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தையல், காரிகை, பாவை
10. வாசனை - சுகந்தம், மணம், நாற்றம், கந்தம், விரை
----------------------
தரம் 9 | தமிழ்மொழியும் இலக்கியமும் | கலைமகன்
பைரூஸ் | ஒரு சொல் பன்மொழி | பக்கம் 7
வேறுபட்ட சொற்களைத் தெரிவு செய்தல்
1. பகைவர், ஏதிலார், எதிரிகள், தெவ்வர், தீயவர் (கெட்டவர்)
2. பூ, மலர், படம், புஷ்பம், வீ
3. அந்திப்பொழுது, மாலை, வைகறை (அதிகாலை), சாயங்காலம்,
முன்னிரவு
4. போர்,
யுத்தம், சரம் (அம்பு) சண்டை, அமர்
5. உவரி, கடல், சாகரம், ஆர்ப்பு (சத்தம்) , புணரி
6. மேகம், சுரும்பு (ஆண் வண்டு), கொண்டல், கார், முகில்
7. கயவர், கீழோர், பாமரர் (கல்லாதவர்), தீயோர், சிறியோர்
8. வயல், பழனம், செறு, தழை (இலையோடு கூடிய சிறிய கொப்பு), கழனி
தரம் 9 | தமிழ்மொழியும் இலக்கியமும் | கலைமகன்
பைரூஸ் | ஒரு சொல் பன்மொழி | பக்கம் 7
----------------------
---------------------------------------------------------------
- அன்பு :- நேசம், பரிவு, இரக்கம், பிரியம், ஆர்வம்
- ஆனந்தம் :- மகிழ்ச்சி, களிப்பு, உவகை
- ஆபரணம் :- அணி, ஆரம், நகை, பணி
- அழகு :- வனப்பு, எழில், சுந்தரம், வடிவு, கோலம், சிங்காரம், வண்ணம், நிறம்
- அரசன் :- மன்னன், வேந்தன், கோன், புரவலன், நிருபன், கோ
- அகிம்சை :- துன்புறுத்தாமை, இன்னல் செய்யாமை
- அறிவுரை :- புத்திமதி, நல்லுரை, உபதேசம்
- அறிவு :- உணர்வு, ஞானம், மதி விவேகம், புத்தி
- அடி - பாதம், தாள், கால்
- அளி :- சாளிகை, மதுகரம், சுரும்பு, வண்டு
- இரவு :- இராத்திரி, கங்குல், நிசி, இருட்டு
- உணவு :- ஊண், ஆகாரம், அடிசில், உண்டி
- உண்மை :- மெய், சத்தியம், வாய்மை
- உதிரம் :- செந்நீர், குருதி, இரத்தம்
- ஊழியம் :- தொண்டு, பணி, சேவை, வேலை
- ஊதியம் :- சம்பளம், கூலி, இலாபம், ஆதாயம்
- எருது :- விடை, இடபம், ஏறு, படு
- ஒளி :- வெளிச்சம், சுடர், கதிர், பிரகாசம்
- குழந்தை :- மகவு, குழவி, சேய், சிசு, பிள்ளை, மழலை
- கணவன் :- கொழுநன், தலைவன், பதி, நாயகன்
- காற்று :- வளி, மாருதம், தென்றல், ஊதை, பவனம்
- கேடு :- நாசம், அழிவு, சேதம், சிதைவு
- தரித்தல் - அணிதல், சூடுதல், புனைதல், அலங்கரித்தல்
- ஆதி :- முதல்,ஆரம்பம்,தொடக்கம்
- ஆழி :- வேலை, சாகரம், அளக்கர், கடல்
- குடித்தல்- அருந்துதல், பருகுதல், சுவைத்தல்
- ஞானம்- அறிவு, ஆற்றல், விவேகம், புத்தி, வித்தை
- ஒலி- ஓசை, அரவம், தொனி, சத்தம்
- உடல் - சரீரம், உடம்பு, மெய், மேனி
- அபாயம்- ஆபத்து, இடர், இடையூறு
- காடு - அடவி, கானகம், வனம், ஆரணியம்
- இனம்- உறவு, சுற்றம், கிளை,ஒக்கல்,பரிசனம்
- சோலை- உபவனம், கா, தண்டலை, நந்தவனம், பூங்கா, பொழில்
- கல்வி- கலை, வித்தை, படிப்பு
- ஆசிரியர்- ஆசான், உபாத்தியாயன், குரவர், தேசிகர்
- நீதி- தர்மம், நடு, நியாயம், நெறி
- நூல்- ஏடு, பனுவல், புத்தகம், பொத்தகம்
- குற்றம்- தவறு, பிழை, களங்கம், தப்பு, மாசு, காடு
- தடாகம்- ஏரி, குளம், பொய்கை, வாவி, கயம்
- அத்திப் பொழுது- சாய்பொழுது, சாயங்காலம், மாலை, செக்கல்
- உதயம்- வைகறை, காலைப்பொழுது, புலர், விடியல், தோற்றம்
- குதிரை- அசுவம், பரி, புரவி, அயம்
- தாமரை - கமலம், முளரி, அம்புயம்
- நித்திரை- உறக்கம், துயில், அனந்தல், சயனம்
- வயல்- பழனம், செய்,கழனி,புலனம்
- மேகம்- கொண்டல்,கார்,முகில்
- வண்டு- அறி, சுரும்பு, மதுகரம்
- வறுமை :- தரித்திரம், இலம்பாடு, மிடி, நல்குரவு
- வாசனை- சுகந்தம், நாற்றம், விரை, மணம்
- தொழில்- ஊழியம், பணி, வேலை
- சத்தியம்- ஆணை, சபதம், சூழ், பிரமாணம், உண்மை
- சிங்கம்- அரி, ஆழி, கேசரி, கோளரி, சீயம்
- சொல்- கிழவி, கூற்று, மொழி, வாக்கு
- தேன்- மது, நறவு, தேறல், கள்
- குழந்தை- சிசு, சேய், பிள்ளை, குழவி
- வண்ணம்- சாயல், நிறம், வர்ணம்
- வயல் :- புலம், பழனம், கழனி, செய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக