📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 26 ஜனவரி, 2026

தமிழ் மூலம் சிங்களம்

நமது பாரதியார் அன்றொருநாள் இப்படிக் கூறினார்:

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.”

அதன்படி, தனது பெயரை பாரதிதாசன் என்று வைத்துக் கொண்ட கவிஞர் கனக சுப்புரத்தினம் அவர்கள், தமிழ் வாசகர்களுக்காக 'தமிழிலிலாப் பிறமொழி நூல் அனைத்தும் நல்ல தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்.' என்று குறிப்பிட்டார்.

இந்நிலையை தொடர்ந்தே, நாமும் இன்று இலங்கையின் அரசோச்சப்படும் மொழியான சிங்களத்தை தமிழ்மூலம் கற்றுக்கொள்வோம்.

அன்புயர் இந்தியத் தோழமைகளே! நீங்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலோ அல்லது வேறு காரணங்களுக்காக வந்தாலோ சிங்கள மொழி உங்களுக்குக் கைகொடுக்கும்.

நான் சிங்கள – தமிழ் மொழியியலாளராக, உங்கள் பயிற்சிக்காக “தமிழ் மூலம் சிங்களம்” எனும் பகுதியை இற்றைப்படுத்தி வருகிறேன்.

உங்கள் ஆதரவையும், இந்த முயற்சியை உங்களைச் சார்ந்தவர்களுக்கும் அறிமுகப்படுத்தவும் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days