இலக்கணத்தில் போலி என்பது என்ன?
ஒரு சொல்லில் ஓர் எழுத்து இருக்க வேண்டிய இடத்தில், வேறு ஓர் எழுத்து வந்தாலும் அச்சொல் பொருள் மாறாமல் இருப்பது “போலி” எனப்படும்.
“போல இருத்தல்” என்பதிலிருந்து இச்சொல்
உருவானதாக மொழியியலாளர்கள் குறிப்பிடுவர்.போலியின் வகைகள்
போலி முக்கியமாக மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது:
① முதற்போலி
சொல்லின் முதல் எழுத்து மாறினாலும் பொருள் மாறாதிருப்பது.
- மஞ்சு – மைஞ்சு
- மயல் – மையல்
- மயன் - மையன்
- ஐயர் - அய்யர்
- பசல் - பைசல்
- நயம் - ஞயம்
- நாயிறு - ஞாயிறு
- ஔவை - அவ்வை
② இடைப்போலி
சொல்லின் இடையில் வரும் எழுத்து மாறினாலும் பொருள் மாறாதிருப்பது.
- அமச்சு – அமைச்சு
- அரயர் – அரையர்
- இலஞ்சி - இலைஞ்சி
- நெயவு - நெசவு
- குசவன் - குயவன்
③ கடைப்போலி (இறுதிப்போலி)
சொல்லின் இறுதி எழுத்து மாறினாலும் பொருள் மாறாதிருப்பது.
- அறம் – அறன்
- பந்தல் – பந்தர்
- புறம் - புறன்
- மதில் - மதிள்
- செதில் - செதிள்
- மனது - மனசு
- வயது - வயசு
- முகம் - முகன்
- நலம் - நலன்
- நிலன் -நிலன்
- குடல் - குடர்
- கூதல் - கூதர்
- பந்தல் - பந்தர்
- சாம்பல் - சாம்பர்
மேற்சொன்ன மூன்று வகையும் அல்லாது, பிறிதொரு வகையும் உள்ளதைக் காணலாம். அதுதான்
முற்றுப்போலி
ஒரு சொல்லில் உள்ள அனைத்து எழுத்துகளும் மாறினாலும் பொருள் மாறாமல் இருப்பது.
- ஐந்து – அஞ்சு
முன்பின் தொக்கப் போலி என்றால் என்ன?
முன் இருக்க வேண்டிய சொல் பின்னும், பின் இருக்க வேண்டிய சொல் முன்னும் இடம் மாறிவந்து பொருள் கெடாதவாறு இருப்பதே முன்பின் தொக்கப் போலி என்று அழைக்கிறோம்.
உதாரணம்
இலக்கண வழக்கு - இலக்கணப் போலி
-------------------------------------
தசை - சதை
இல்முன் - முன்றில்
கால்வாய் - வாய்க்கால்
மரம்நுனி - நுனி மரம்
நகர்ப்புறம் - புறநகர்
வாயில் - இல்வாய்
புறங்கடை - கடைப்புறம்
– தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்
தொடர்மொழிக்கு ஒருமொழி பற்றி அறிந்துகொள்ள....இந்த இணைப்பில் அழுத்தவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days