📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

இந்த வினா(விடை)ப்பத்திரத்தின் மாணவனுக்கு யார் பொறுப்புச் சொல்ல வேண்டும்?

தாய்ப்பால் சரியாகக் கொடுக்கப்படவில்லை போலும்…”

இந்த வினாப்பத்திரத்தைக் வாசித்தவுடனே என் உள்ளத்தில் எழுந்த வலி —
அதே உணர்வு உங்களிடமும் எழும் என நம்புகிறேன்.

எதிர்பாராத விதமாக ஒரு ஐந்தாம் தர மாணவனின் தாய்மொழி வினா(விடை)ப்பத்திரம் என் கரங்களில் கிட்டியது.


அதுவும் மூன்றாம் தவணை பரீட்சை.

பெற்றுள்ள மொத்த புள்ளி: 4
அதிலும் மாணவனின் மீது பரிதாபப்பட்ட ஆசிரியர் வழங்கியிருக்கும் கூடுதல் புள்ளி: 1

அதாவது,
ஒரு குழந்தையின் கல்விப் பயணத்தில் —
அவன் புரிந்துகொண்டன யாவை?
அவனுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டதா?
அவன் வழிநடத்தப்பட்டானா?

கடை மாணாக்கன் என அவன் ஒதுக்கப்பட்டானா?

 என்ற கேள்விகள் எல்லாம் நம்மை நோக்கி நிற்கின்றன.

இவன் விசேட தேவையுடையவன் அல்ல.
ஆனால் இத்தகைய நிலை ஏன்?

🔹 பெற்றோர் பொறுப்பா?
🔹 ஆசிரியர் பொறுப்பா?
🔹 கல்வி முறைமையின் குறைபாடா?
🔹 அல்லது சமூகத்தின் அலட்சியமா?

ஒரு குழந்தை தாய்மொழியிலேயே இவ்வாறு தடுமாறினால் —
அது ஒரு தனிப்பட்ட தோல்வி அல்ல;
அது ஒரு அமைப்பு சார்ந்த எச்சரிக்கை மணி.

இந்த மாணவனின் வினா(விடை)ப்பத்திரத்தின் படங்கள் இங்கே....





உங்கள் சிந்தனையுள்ள, காத்திரமான பதில்களை எழுதுங்கள்.

சூடு சோரணை வரட்டும் —
ஆனால் மரியாதையுடன், தீர்வு நோக்கிய உரையாடலாக இருக்கட்டும்.

👉 தமிழ்ச்சுடர் - கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days