📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

சகல போட்டிப் பரீட்சைகளுக்குமான GK | பொது அறிவு வினாக்கள்


  1. NVQ (என்வீக்யூ) என்பதனை உலகிற்கு அறிமுகம் செய்த நாடு - அவுஸ்திரேலியா
  2. அதிகமான பல்கலைக்கழகங்களைக் கொண்ட நாடு - இந்தியா
  3. அதிக பாடசாலைகள் காணப்படும் நாடு  - இந்தியா
  4. அடிப்படை உரிமைகளை உலகிற்கு அறிமுகம் செய்த நாடு - அமெரிக்கா
  5. இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட பட்டக் கல்வியியல் கல்லூரி - மாவலி தேசிய கல்வியியல் கல்லூரி
  6. இலங்கையில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம் - சிலோன் பல்கலைக்கழகம் (ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1921
  7. இலங்கையில் தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற ஆண்டு - 1977
  8. பொதுச்சாதாரண தரப் பரீட்சை உயர்தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 2000
  9. சுரக்‌ஷா கல்விக் காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 2017
  10. சர்வதேச பாடசாலைகள் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1980
  11. இலங்கையில் ஆசிரியர் சேவை முதன்முதல் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1994
  12. தேசிய கல்வி ஆணைக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு - 1991
  13. சுதேச மொழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1956
  14. விசேட கல்வி ஆணைக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு - 1943
  15. இலங்கையில் கல்விச் சேவை ஆணைக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு - 1978
  16. பல்கலைக்கழக பிரயோகத்திற்காக நியமப்புள்ளி (Z Score) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 2004
  17. பாடசாலை மட்டக் கணிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1999
  18. பாடசாலைக் கல்வியமைச்சு உருவாக்கப்பட்ட ஆண்டு - 2001
  19. ஒன்றிணைந்த கலைத்திட்டம் அறிமுகமான ஆண்டு - 1972
  20. இலவசக் கல்வித் திட்டம் அறிமுகமான ஆண்டு - 1945
  21. இலங்கைத் தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற ஆண்டு - 1977
  22. முதலாவது ரீ20 உலகக் கிண்ணத்தை வென்ற அணி - இந்திய அணி (இப்போட்டியில் கலந்து கொண்ட நாடுகள் - இந்தியா, பாகிஸ்தான்)
  23. இலங்கை அணி ரீ20 கிண்ணத்தை வென்ற ஆண்டு - 2014 (இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையில் இந்தப் போட்டி நடைபெற்றது.)
  24. ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்திய பந்து வீச்சாளர் - ஷாகிப் அல் ஹஸன் (பங்களாதேஷ்)
  25. ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அதி வேகமாக சதம் அடித்த வீரர் - கிறிஸ் கெய்ஸ் - மேற்கிந்தியா (47 பந்துகளில். )
  26. ரி20 கிண்ண வரலாற்றில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் - இந்தியாவைச் சேர்ந்த விராட் கோலி
  27. ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் 'ஹட் ட்ரிக்' (Hat Trick) வீழ்த்திய முதல் வீரர் - பிரட் லீ (இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். அவுஸ்திரேலியா  - பங்களாதேஷுக்கிடையிலான போட்டியில்)
  28. ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 6 பந்துகளில் 6 ஓட்டங்களைப் பெற்ற வீரர் - யுவராஜ் சிங் (இந்தியா 2007)
  29. இலங்கையில் 78 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு - 2026
  30. உலக சதுப்பு நிலத்தினம் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் திகதி - பெப்ரவரி 2
  31. அண்மையில்(2026) உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகிய நாடு - அமெரிக்கா
  32. 2025ம் ஆண்டின் புள்ளிவிபரவியல் தரவுகளின் படி. இலங்கைத் தேயிலையினை அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடு - ஈராக்
  33. செயற்கை நுண்ணறிவினை ஒழுங்குபடுத்தும் வகையில் உலகின் முதல் விரிவான சட்டத் தொகுப்பினை உருவாக்கியுள்ள ஆசிய நாடு - தென்கொரியா
  34. அண்மையில். இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டவரின் பெயர் - ஏரிக் மேயர் (Eric Meyer)
  35. 2025ம் ஆண்டு கல்வி அமைச்சின் புள்ளிவிபரவியல் தரவுகளின் படி, அதிகூடிய மற்றும் அதிகுறைந்த அரச பாடசாலைகளினை உள்ளடக்கிய மாவட்டங்கள் - குருநாகல், கிளிநொச்சி
  36. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பெயர் - ரொபேட் கேப்ரியல் (Robert Gabriel)
  37. தெற்காசியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள நாடு - இந்தியா, புதுடெல்லி
  38. உலகவாழ் கத்தோலிக்க மக்களின் பெரும் தலைவரான போப் 14ம் லியோவாகப் பதவியேற்ற பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட நாடு - துருக்கி
  39. உலகப் பொருளாதாரமன்ற வருடாந்த மாநாடு நடைபெற்ற இடம் - சுவிஸ்லாந்து
  40. உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையிலான போரினை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு. அமெரிக்கா தலைமையிலான சமாதானப் பேச்சுவார்தை நடைபெற்ற இடம் - ஐக்கிய அரபு அமீரகம்
  41. ஒரு நாளைக்கு பாடசாலை நடாத்தப்படும் மணித்தியாலங்களின் எண்ணிக்கை - 9
  42. காலனித்துவ காலத்தின் போது பிரிட்டனினால் கையகப்படுத்தப்பட்ட சாகோஸ் தீவுகளினை மீண்டும் திருப்பி ஒப்படைக்க பிரிட்டன் முடிவுசெய்த நாடு - மொரிஷியஸ்
  43. நெருங்கடியான காலகட்டத்தில் இலங்கையில் இருந்து பணியாற்றி, அண்மையில், இலங்கையில் இருந்து விடைபெற்றுச் சென்ற இலங்கைக்கான முன்னால் அமெரிக்க தூதரின் பெயர் - ஜூலி ஜே. ஷாங் (Julie J.Chung)
  44. அண்மையில், காஸா அமைதி வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட உலக வங்கியின் தலைவரின் பெயர் - அஜய் பங்கா (Ajay Banga)
  45. நோபால் பரிசுபெற்ற இளம்பெண் - மலாலா யூஸுப் சையி
  46. நோபால் பரிசு பெற்ற முதல் பெண் - மேரி கியூரி
  47. மாணவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகம் வழங்கும் திட்டம் அறிமுகமான ஆண்டு - 1980
  48. இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் - ஜவர் ஜென்னிங்ஸ்
  49. இஸ்ரேல் என்பது நாடாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1948
  50. காற்பந்து உலகக் கோப்பையை வென்ற முதல் நாடு - உருகுவே (1930)
  51. கிரேக்கர்கள் இலங்கைக்கு வழங்கிய பெயர் - தப்பிரபேன்
  52. இலங்கைத் தேசிய கொடியில் பச்சை நிறம் குறிப்பது - முஸ்லிம்களை
  53. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு 2025 இல் வழங்கப்பட்ட அதியுயர் விருது - மித்ர விபூசண
  54. 2026 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு விழா நடைபெறவுள்ள நாடு -  ஜப்பான்
  55. இலங்கையில் சிறந்த விளையாட்டுப் பயிற்சிக்காக வழங்கப்படும் அதியுயர் விருது - துரோணாச்சாரியார் விருது
  56. உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்படும் நாள் - செப்டம்பர் 08 (யுனெஸ்கோ 1966)
  57. மாணவர் மையக் கல்வியை அறிமுகப்படுத்தியவர் - ஜோன் டுயி
  58. 'அனைவருக்கும் கல்வி' எனும் கொள்கையை அறிமுகப்படுத்தி மாநாடு இடம்பெற்ற நாடு - தாய்லாந்து (1990)
  59. 2001 இல் புளுமின் கொள்கையில் ஆண்டர்சன் மற்றும் கிராத்வோல் இளால் அறிமுகப்படுத்திய மாற்றம் - படைப்பாற்றல்
  60. ஒருவர் சமூகத்தினூடாக பெற்றுக் கொள்ளும் கல்வி அழைக்கப்படும் முறை - முறையில் கல்வி / முறைசாராக் கல்வி
  61. உள்ளடக்கல் கல்வி என்பது - அனைத்து மாணவர்களையும் ஒரு வகுப்பறையில் வைத்துக் கற்பித்தல்
  62. பல்வகையான (8 முறை) நுணணறிவுக் கொள்கையை அறிமுகம் செய்தவர் - ஹொவார்ட் கார்ட்னர்
  63. இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது பெண் ஜனாதிபதி - சந்திரிக்கா பண்டாரநாயக்க குமராதுங்க (1994)
  64. இலங்கையில் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாபதி - ரி.பி. விஜேதுங்க (1993)
  65. இலங்கையின் அதியுயர் அதிகாரம் மிக்க நீதிமன்றம் - மீயுயர் நீதிமன்றம் (சுப்ரீம் கோட்)
  66. இலங்கையில் நடைமுறையிலுள்ள உயரிய சட்டம் - அரசியலமைப்புச் சட்டம் (1978 ஆம் ஆண்டு யாப்பு - 22 ம் சீர்திருத்தங்கள்)
  67. இலங்கையில் டித்வா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் - பதுளை
  68. இலங்கையின் உயரமான நீர்வீழ்ச்சி - பம்பரகந்த
  69. பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவர் - பிரித்தானிய மன்னன் மூன்றாம் சார்ள்ஸ்
  70. உலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8
  71. உலகின் மிகப்பெரிய சமுத்திரம் - பசுபிக் சமுத்திரம்
  72. இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கின்ற நீரிணை  - பாக்கு நீரிணை
  73. இலங்கையில் தொலைக்கல்வியை வழங்கும் நிறுவனம் - திறந்த பல்கலைக்கழகம்
  74. இலங்கையில் தொழில்நுட்பவியல் பட்டத்தினை வழங்கும் தேசிய கல்வியியற் கல்லூரி - குளியாப்பிட்டிய தேசிய கல்வியியற் கல்லூரி
  75. தேசிய கல்வியியற் கல்லூரியினால் வழங்கப்படும் சான்றிதழ் - கற்பித்தலில் தேசிய டிப்ளோமா (என்டீடி)
  76. ஆசிரியர் சேவையினுள் உள்வாங்கப்பட்ட பின்னர் வழங்கப்படும் பயிற்சி - ஆசிரியர் முன்சேவைப் பயிற்சி
  77. 2026 இல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தம் - மொடியுல் பேஸ்ட் ஐ அடிப்படையாகக் கொண்டது.
  78. PGDE முறையை அறிமுகப்படுத்தியவர் - பேராசிரியர் டி.எல். கிரீன்
  79. இலங்கையில் கட்டாயக் கல்வி முறைமையை அறிமுகப்படுத்திய கல்விச் சீர்திருத்தம் - கன்னங்கரா கல்விச் சீர்திருத்தம் (1945).
  80. கல்வி உலகில் உள்ள எல்லாக்குழந்தைகளுக்கும் அளிக்கப்படல் வேண்டும் எனக் கூறியவர் - ஜான் அபெக்ஸ் கொமேனியஸ் (John Amos Comenius).
  81. கல்வியின் துணைக் கொண்டு சமவுடைமைவாத தொழிலாளர் உருவாக்கப்பட வேண்டும் எனக் கூறியவர் - கார்ல் மார்க்ஸ் (Karl Marx).
  82. கல்வி என்பது அழுத்தங்களினின்றும் விடுபட்ட இயற்கையான வளர்ச்சி எனக் கூறிய தத்துவ அறிஞர் - ஜோன் ஜாக் ரூசோ (Jean-Jacques Rousseau).
  83.  NVQ என்பதால் விளங்கக் கூடியது - தேசிய தொழில்சார் தகைமை (National Vocational Qualification)
  84. சர்வதேச எழுத்தாளர் தினம் கொண்டாடப்படும் நாள் - மார்ச் 3
  85. சகலருக்கும் கல்வி மீதான உலகப்பரகடனம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1990 (ஜொம்டியன் பிரகடனம்).
  86. கொழும்பு றோயல் கல்லூரி ஆரம்ப காலத்தில்  - கொழும்பு அகாடமி (Colombo Academy) என்றுஅழைக்கப்பட்டது.
  87. இலங்கையில் தேசிய பாடசாலை உருவாக்கப்பட்ட வருடம் - 1985
  88. இலங்கையின் முதலாவது ஒழுங்கான கல்விச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு - 1939 (1939 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க கல்விச் கட்டளைச் சட்டம்).
  89. கிரேக்க அரசுகளில் சிறந்த கல்விமுறை காணப்பட்ட இரண்டு நகரங்களாவன - ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா.
  90. வித்தியாலங்கார பிரிவெனாவின் ஸ்தாபகர் - வண. ரத்மலானே ஸ்ரீ தர்மாலோக தேரோ.
  91. இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான அரச பாடசாலைகளை கொண்ட மாவட்டம் - குருநாகல் மாவட்டம்.
  92. இலங்கையில் பாடசாலை மாணவர் ஒருவர் முறைசார் பாடசாலை கல்வியில் ஈடுபடவேண்டிய மொத்த வருடங்களின் எண்ணிக்கை - 13 வருடங்கள் (தரம் 1 முதல் 13 வரை).
  93. உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவது - அக்டோபர் 5 இல்.
  94. சார்க் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் - புதுடில்லி, இந்தியா.
  95. க.பொ.த உயர்தரப்பரீட்சைப் பாடத்துறைகளுள் 2013 ம் ஆண்டில் சேர்க்கப்பட்ட பாடத்துறை - தொழில்நுட்பப் பாடத்துறை (Technology Stream).
  96. ஹரிபொட்டர் நூலின் ஆசிரியர் - ஜே. கே. ரௌலிங் (J.K. Rowling).
  97. க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பாடத்துறைகளில் அதிகளவு மாணவர்கள் கற்கும் பாடத்துறை - கலைப் பாடத்துறை (Arts Stream)
  98. இலங்கையில் சமயம், கலாசாரம் என்பன தொடர்பாக மறுமலர்ச்சியை ஏற்படுத்த செயற்பட்ட மறுமலர்ச்சியாளர்கள் - அநகாரிக தர்மபால, ஆறுமுக நாவலர், கர்னல் ஹென்றி ஸ்டீல் ஓல்கட் போன்றவர்கள்.
  99. மகாவம்சத்தின் முதல் பாகத்தை எழுதிய மகாநாம தேரர் வகித்து வந்த கல்வி நிறுவனம் - அனுராதபுர மகாவிகாரை.
  100. 2026 ஆம் ஆண்டுக் கல்வி சீர்திருத்தத்தின் பிரதான குறிக்கோள் - தரமான, சமத்துவமான மற்றும் திறன்சார்ந்த கல்வியை உறுதிப்படுத்துதல்.
  101. புதிய கற்றல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறை - திறன்சார்ந்த கல்விமுறை.
  102. ஆரம்பக்கல்வியில் வலியுறுத்தப்பட்ட அடிப்படைத் திறன்கள்- மொழித்திறன் மற்றும் எண்ணறிதல் திறன்.
  103. தகவல் தொழில்நுட்பம் கல்வியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட முறையாவது - மின்னியல் வகுப்பறைகள் மற்றும் இணையவழிக் கற்றல் வளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  104. ஆசிரியர் தொழில்முறை முன்னேற்றத்தில் செய்யப்பட்ட மாற்றம் - தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டு பயிற்சிகள் கட்டாயப்படுத்தப்பட்டன.
  105. மாணவர் மதிப்பீட்டு முறையில் செய்யப்பட்ட முக்கிய மாற்றம் - தேர்வுமைய முறையிலிருந்து தொடர்ச்சியான மதிப்பீட்டு முறைக்கு மாற்றம்.
  106. பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்ட புதிய பாடவகை - வாழ்வுத்திறன் மற்றும் குடியுரிமைக் கல்வி.
  107. தொழிற்கல்வி மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை- பாடசாலை மட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி விரிவுபடுத்தப்பட்டது.
  108. மொழிக் கல்வியில் செய்யப்பட்ட மேம்பாடாவது - இருமொழிக் கல்வி வலுப்படுத்தப்பட்டது.
  109. சுற்றுச்சூழல் கல்வி தொடர்பாக செய்யப்பட்ட மாற்றம் - நிலைத்த முன்னேற்றக் கருத்துக்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன.
  110. மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் நற்பண்பு வளர்ச்சிக்கான திட்டம் - பண்பாட்டுத் திறன் மற்றும் ஒழுக்கவியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
  111. கிராமப்புறப் பாடசாலைகளுக்கான முன்னுரிமை நடவடிக்கை - அடிப்படை உட்கட்டமைப்பு மற்றும் இணையவசதி மேம்படுத்தப்பட்டது.
  112. ஆசிரியர் நியமன முறையில் செய்யப்பட்ட மாற்றம் - திறந்த போட்டித் தேர்வு மற்றும் தகுதிசார்ந்த நியமனம்.
  113. பாடநூல் வழங்கல் முறையில் ஏற்பட்ட மாற்றம் - அச்சு நூல்களுடன் மின்னூல்கள் வழங்கப்பட்டன.
  114. மாணவர்களின் மனநல பாதுகாப்பிற்கான ஏற்பாடு - பாடசாலை ஆலோசனைச் சேவை விரிவுபடுத்தப்பட்டது.
  115. மதிப்பெண் வழங்கும் முறையில் அறிமுகமான மாற்றம் - தரஅடிப்படையிலான மதிப்பீட்டு முறை.
  116. உட்சேர்க்கைக் கல்வியில் (Inclusive Education) செய்யப்பட்ட முன்னேற்றம் - விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தனிப்பட்ட கற்றல் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.
  117. பாடசாலை நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் - பாடசாலை மேம்பாட்டு குழுக்கள் வலுப்படுத்தப்பட்டன.
  118. பெற்றோர் பங்கேற்பை உயர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கை - பெற்றோர்–ஆசிரியர் ஒத்துழைப்பு அமைப்புகள் செயற்படுத்தப்பட்டன.
  119. கல்வி சீர்திருத்தத்தின் நீண்டகால நோக்கம் - உலகளாவிய போட்டித்திறன் கொண்ட குடிமக்களை உருவாக்குதல்.
மேலும் தேடித் தெரிந்த GK வினாக்களும் விடைகளும் சுடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days