📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 29 ஜூன், 2026

ஈழத்து இலக்கியத்திற்கு வழிகாட்டிய இலக்கியக் கலாநிதி

ஈழத்து இலக்கியத்திற்கு வழிகாட்டிய இலக்கியக் கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் 127வது பிறந்ததினம் இன்று. அதனை முன்னிட்டு இந்தக் கட்டுரை பிரசுரமாகின்றது. 

பண்டிதமணி இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுவில் என்ற ஊரில் தருமர் என அழைக்கப்பட்ட சின்னத்தம்பி மற்றும் தனங்களப்பு முருகர் மகள் வள்ளியம்மை ஆகியோருக்குப் பிறந்தார். மட்டுவில் சந்திரமௌலீச பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். மூன்றாவது வயதிலேயே தாயாரை இழந்தவர்,

13வது வயதில் தந்தையாருடன் தனங்கிளப்புக்கு இடம்பெயர்ந்தார்.

தமிழறிஞர்களான சாவகச்சேரி பொன்னையா உபாத்தியாயர், சாவகச்சேரி பொன்னம்பலப் புலவர், சாவகச்சேரி பொன்னப்பாபிள்ளை ஆகியோரிடத்தில் தமிழ் கற்ற கணபதிப்பிள்ளை 1917 இல் நாவலர் பாடசாலையில் சேர்ந்து சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர், வித்தகம் ச. கந்தையாபிள்ளை, வித்துவான் ச.சுப்பையாபிள்ளை, சுவாமி விபுலாநந்தர் போன்ற பேரறிஞர்களிடம் கல்வி கற்றார். இதன் மூலம் யாழ்ப்பாணக் கல்விப்பாரம்பரியத்தின் முதுசொம் ஆன நாவலர் பரம்பரையின் தொடர்ச்சியில் இடம்பிடித்தார்.

1926 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்விற் சித்தி பெற்றுப் பண்டிதர் பட்டம் பெற்றார். கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய பயிற்சி பெற்ற பண்டிதமணியை 1929 இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவாசிரியக் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1951-இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேசுவரா கல்லூரியில் இடம்பெற்ற தமிழ் விழாவில் பண்டிதமணி தமிழ் என்ற பொருளில் ஆற்றிய உரை தமிழக அறிஞர்கள் உள்ளிட்ட பலராலும் பாராட்டப்பட்டது. அந்த உரையே அவருக்குப் பண்டிதமணி என்ற பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தது. இவருக்கு 1978ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ‘இலக்கியக் கலாநிதி’ பட்டம் வழங்கிக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

பண்டிதமணி கணபதிப்பிள்ளை 1986 மார்ச் 13 வியாழக்கிழமை அன்று தின்னவேலியில் உள்ள அவரது இல்லத்தில் தனது 86-வது அகவையில் காலமானார். 1999 ஆம் ஆண்டில் இலங்கை அரசு பண்டிதமணிக்கு முத்திரை வெளியிட்டுக் கௌரவித்தது

இவரின் நூல்கள்:

  1. கண்ணகி தோத்திரம்
  2. கதிர்காம வேலவன் பவனி வருகிறான்
  3. இலக்கிய வழி
  4. சைவ நற்சிந்தனைகள்
  5. பாரத நவமணிகள்
  6. கந்த புராண கலாசாரம்
  7. கந்த புராண போதனை
  8. சிவராத்திரியில் சிந்திக்கத் தக்கவைகள்
  9. இருவர் யாத்திரிகர்
  10. சமயக் கட்டுரைகள்
  11. இலக்கிய வழி
  12. கம்பராமாயணக் காட்சிகள்
  13. கந்தபுராணம் தட்சகாண்டம் உரை
  14. நாவலர்
  15. சிந்தனைச் செல்வம்
  16. நாவலரும் கோயிலும்
  17. சிந்தனைக் களஞ்சியம்
  18. கோயில்
  19. ஆறுமுக நாவலர்
  20. அன்பினைந்திணை
  21. அத்வைத சிந்தனை
  22. செந்தமிழ்க் களஞ்சியம்
  23. ஒளவை குறள் (மூலமும் தெளிவுரையும்)
  24. பத்தினி வழிபாடு

நன்றி - தமிழி | தமிழி அமைப்பு | Thamizhi | thamizhi organization

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days