📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 23 பிப்ரவரி, 2026

தமிழறிவு வினா - விடை 1000+ வினாக்களும் விடைகளும் | தமிழ்மொழித் தின விழா

  1.  சிற்றிலக்கியங்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்? 96 வகை
  2. சிற்றிலக்கியங்கள் மொத்தம் 96 வகை என வகைப்படுத்திய நூல் எது? சதுரகராதி
  3. பரணி என்பது யாது? 'ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி' - அதாவது, போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் புகழ்ந்து பாடுவது.
  4. தமிழின் முதல் பரணி நூல் எது? கலிங்கத்துப் பரணி.
  5. கலிங்கத்துப் பரணி எனும் நூலை எழுதியவர் யார்? செயங்கொண்டார் 
  6. 'வாயில் இலக்கியம்' அல்லது 'சந்து இலக்கியம்' என்று அழைக்கப்படும் இலக்கிய வகை எது? தூது இலக்கியம்
  7. பல்வேறு வகையான பாக்களும், உறுப்புகளும் கலந்து பாடப்படும் நூல் எது? கலம்பகம்
  8. முதன் முதல் எழுந்த கலம்பக நூல் எது? நந்திக் கலகம்பகம் (மூன்றாம் நந்திவர்ம மன்னன் மீது பாடப்பட்டது.)
  9. குற்றால நாதரின் புகழை விஞ்சிப்பாடப்படும் நூல் எது? திருக்குற்றாலக் குறவஞ்சி.
  10. திருக்குற்றாலக் குறவஞ்சி நூலின் ஆசிரியர் யார்? திரிகூட ராசப்பக் கவிராயர்.
  11. 'மருள் நீக்கியார்' எனும் இயற்பெயர் கொண்ட பக்தி இலக்கியப் புலவர் யார்? திருநாவுக்கரசர்
  12. சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் யார்? நம்பியாண்டார் நம்பி (முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர் திருஞான சம்பந்தர்)
  13. வைணவ சமய ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் எது? நாலாயிர திவ்ய பிரபந்தம்
  14. நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்? நாதமுனிகள் (இந்நூல் 'திராவிட வேதம்' என்றும் அழைக்கப்படுகிறது.)
  15. 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' எனப் போற்றப்படும் நூலைப் பாடியவர் யார்? மாணிக்கவாசகர்
  16. தேவாரம் என்பது யார் யாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்? திருநாவுக்கரசன், திருஞானசம்பந்தர், சுந்தரர்
  17. 157 புலவர்களால் பாடப்பட்ட, ஔவையாரால் அதிக பாடல்கள் பாடப்பட்ட நூல் எது? புறநானூறு
  18. புறநானூறு எனும் சங்க நூலை முதன் முதல் பதிப்பித்தவர் யார்? உ.வே. சாமிநாதையர் (1894)
  19. ஆசிய ஜோதி, மருமக்கள் வழி மான்மியம், மலரும் மாலையும், உமர் கையாம் பாடல்கள், நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச செல்வம் எனும் நூல்களின் ஆசிரியர் யார்? 'குழந்தைக் கவிஞர்' கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  20. உலக தாய்மொழித்தினம் ஒவ்வொரு வருடமும் எத்தனையாம் திகதி கொண்டாடப்படுகிறது? பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி
  21. எட்வின் அர்னால்ட் எனும் ஆங்கிலக் கவிஞரால் எழுதப்பட்ட 'லைட் ஒப் ஆசியா' எனும் நூலைத் தழுவி, தமிழில் எழுதப்பட்ட நூல் எது? ஆசிய ஜோதி
  22. 'செந்நாப்போதார்' என்று அழைக்கப்படும் புலவர் யார்? திருவள்ளுவர்
  23. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் எந்த சமயத்தைச் சேர்ந்தவை? சமண சமய சார்புடையவை.
  24. ஐஞ்சிறு காப்பியங்களும் எவை? உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி
  25. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்? இளங்கோவடிகள்
  26. சிலப்பதிகாரத்தில் மொத்தம் எத்தனை பாடல் அடிகள் உள்ளன? 5001
  27. சிலப்பதிகாரத்தில் எத்தனை காதைகள் உள்ளன? 30 காதைகள்
  28. சிலப்பதிகாரத்தில் கையாளப்பட்டுள்ள பாவகை எது? நிலைமண்டில ஆசிரியப்பா
  29. சிலப்பதிகாரத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன? 3
  30. புகார் காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன? 10
  31. வஞ்சிக் காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன? 7
  32. மதுரைக் காண்டத்தில் எத்தனை காதைகள் உள்ளன? 13
  33. தமிழ் மொழியின் முதல் காப்பியம் எது? சிலப்பதிகாரம்
  34. இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுபவை எவை? சிலப்பதிகாரம். மணிமேகலை
  35. ஐம்பெருங் காப்பியங்களில் பௌத்த சமய சார்புடைய நூல்கள் எவை? மணிமேகலை, குண்டலகேசி
  36. சிலப்பதிகாரத்தின் நாயகி (தலைவி) யார்? கண்ணகி
  37. திருக்குறள் எந்த வகை நூல்களில் ஒன்றாகும்? பதினெண் கீழ்க்கணக்கு 
  38. திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை? 133
  39. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? ஜி.யு. போப்
  40. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்? மணக்குடவர்
  41. 'சீறா' என்பது எந்த அறபுச் சொல்லின் திரிபாகும்? சீறத்
  42. சீறாப்புராணத்தை எழுதிய புலவர் யார்? உமறுப்புலவர்
  43. சீறாப்புராணத்தில் எத்தனை காண்டங்கள் உள்ளன? 3
  44. சீறாப்புராணத்தில் எத்தனை படலங்கள் உள்ளன? 92
  45. சீறாப்புராணம் எத்தனை விருத்தப்பாக்களைக் கொண்டுள்ளது? 5027 
  46. சீறாப்புராணத்தின் மூன்று காண்டங்களும் எவை? விலாதத்துக் காண்டம் (24 படலங்கள்), நுபுவ்வத்துக் காண்டம் (21 படலங்கள்), ஹிஜ்ரத்துக் காண்டம் (47 படலங்கள்)
  47. சீறாப்புராணத்திற்குப் பிறகு வந்த, பனூ அஹ்மது மரைக்கார் என்பவரால் பாடப்பட்ட நூலின் பெயர் என்ன? சின்னச் சீறா
  48. சின்னச் சீறா எத்தனை பாடல்களைக் கொண்டமைந்துள்ளது? 2145
  49. உமறுப்புலவர் அவர்களால் பாடப்பட்ட மற்றொரு நூலின் பெயரைக் குறிப்பிடுக. - முதுமொழி மாலை
  50. புத்தரது ஆதி வேதம், புத்தர் சரித்திரப்பா போன்ற நூல்களை எழுதியவர் யார்? அயோத்திதாசப் புலவர்
  51. முதல் ஏழு திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படும்? தேவாரம்
  52. மூவர் முதலிகள் என அழைக்கப்படுவோர் யாவர்? திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
  53. சமயக்குரவர்கள் என அழைக்கப்படுவோர் யாவர்? திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்
  54. பன்னிரு திருமுறைகளையும் பாடியோர் யாவர்? திருஞானசம்பந்தர் (1 -3), திருநாவுக்கரசர் (4-6), சுந்தரர் (7), மாணிக்கவாசகர் (8), திருமாளிகைத் தேவர் முதலிய 9 பேர் (9), திருமூலம் (10), திருஆலவாய் உடையார் முதலிய 12 பேர் (11), சேக்கிழார் (12)
  55. கலித்தொகை எனும் சங்க நூலில் கடவுள் வாழ்த்தைப் பாடியவரும், அந்நூலைத் தொகுத்தவரும் யார்? நல்லந்துவனார்
  56. கலித்தொகை எவ்வாறு சிறப்பித்துப் பேசப்படுகிறது? 'கற்றறிந்தார் ஏத்தும் கலி'
  57. கலித்தொகையில் பாலையைப் பாடிய புலவர் யார்? பெருங்கடுங்கோ
  58. கலித்தொகையில் குறிஞ்சியைப் பாடிய புலவர் யார்? கபிலர்
  59. கலித்தொகையில் முல்லையைப் பாடிய புலவர் யார்? நல்லுருத்திரனார்
  60. கலித்தொகையில் மருதத்தைப் பாடிய புலவர் யார்? மருதனிளநாகனார்
  61. கலித்தொகையில் நெய்தலைப் பாடிய புலவர் யார்? நல்லந்துவனார்
  62. 'நெடுந்தொகை' என்ற பெயர் கொண்ட சங்க இலக்கிய நூல் எது? அகநானூறு
  63. அகநானூறிலுள்ள சிற்றெல்லைகள் எத்தனை? ​பேரெல்லைகள் எத்தனை? 13, 31
  64. தமிழின் முதல் விருத்த காப்பியம் எது? சீவக சிந்தாமணி
  65. தமிழின்முதல் கள ஆய்வு நூல் எது? பெரிய புராணம்
  66. மனோன்மணியம் எனும் நூலின் ஆசிரியர் யார்? சுந்தரம்பிள்ளை
  67. திருக்குறளின் முதல் குறள் எது? “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.”
  68. திருக்குறள் எந்த யாப்பில் அமைந்துள்ளது? குறள் வெண்பா.
  69. திருக்குறளில் அறத்துப்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? 38
  70. தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்? தொல்காப்பியர்
  71. தமிழ் இலக்கண நூல்களில் மிகப் பழமையானது எது? தொல்காப்பியம்
  72. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்? இளங்கோ அடிகள்
  73. மணிமேகலையை இயற்றியவர் யார்? சீத்தலைச் சாத்தனார்
  74. தமிழுக்கு “செம்மொழி” என்ற அங்கீகாரம் கிடைத்த ஆண்டு எது? 2004.
  75. உலகத் தமிழ் மாநாடு முதன்முதலில் நடைபெற்ற இடம் எது? கோலாலம்பூர்
  76. தமிழ் மொழி எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது? திராவிட மொழிக் குடும்பம்.
  77. தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று யாது? உலகின் தொன்மையான தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் உள்ள மொழிகளில் ஒன்றாகும்.
  78. தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது? 3 அதிகாரங்களைக் கொண்டது.
  79. தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்கள் யாவை? எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்.
  80. தமிழ் இலக்கண நூல்களில் முதன்மையானது எது? தொல்காப்பியம்
  81. தொல்காப்பியர் யாரின் மாணவர் எனக் கருதப்படுகிறார்? அகத்தியரின் மாணவர் என மரபு கூறுகிறது.
  82. பொருளதிகாரம் எதைப் பற்றி விளக்குகிறது? அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பற்றிய இலக்கண விதிகளை விளக்குகிறது.
  83. நன்னூலை இயற்றியவர் யார்? பவணந்தி முனிவர்
  84. நன்னூல் எந்த வகை நூல்? இலக்கண நூல்.
  85. நன்னூல் எந்த காலத்தைச் சேர்ந்தது? இடைக்காலத் தமிழ் இலக்கண நூல்.
  86. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார்? இளங்கோ அடிகள்
  87. சிலப்பதிகாரத்தின் தலைவி யார்? கண்ணகி
  88. கண்ணகியின் கணவர் யார்? கோவலன்
  89. சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது? 3 காண்டங்கள்.
  90. அவை யாவை? புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்.
  91. மணிமேகலையின் ஆசிரியர் யார்? (சீத்தலைச்) சாத்தனார்
  92. மணிமேகலை எந்த சமயக் கருத்தை எடுத்துரைக்கிறது? புத்த சமயக் கருத்துகளை.
  93. ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்? ஔவையார்
  94. கொன்றைவேந்தன் நூலின் ஆசிரியர் யார்? ஔவையார்
  95. உலகில் அதிகம் பேசப்படும் திராவிட மொழி எது? தமிழ்.
  96. தமிழ் எந்த நாடுகளில் ஆட்சிமொழியாக உள்ளது? இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் ஆட்சிமொழியாக உள்ளது.
  97. நற்றிணை எத்தனை பாடல்களைக் கொண்டது? 400 பாடல்கள்.
  98. குறுந்தொகை எத்தனை பாடல்களைக் கொண்டது? 400 பாடல்கள்.
  99. கலித்தொகை எந்த யாப்பில் அமைந்துள்ளது? கலிப்பா.
  100. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைப் பாடியவர்கள் யார்? ஆழ்வார்கள்.
  101. திருப்பாவையை இயற்றியவர் யார்? ஆண்டாள்
  102. பெரியபுராணத்தை இயற்றியவர் யார்? சேக்கிழார்
  103.  சேக்கிழாரின் இயற்பெயர் என்ன? அருணந்தி சிவாச்சாரியார்
  104. ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய பகுதி எது? யாழ்ப்பாணம்.
  105. ஈழத்தில் தமிழ் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய சமயம் எது? சைவ சமயம்.
  106. ஈழத்து இலக்கிய மறுமலர்ச்சியின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்? ஆறுமுக நாவலர்.
  107. ஆறுமுக நாவலர் பிறந்த இடம் எது? நல்லூர்.
  108. ஆறுமுக நாவலரின் முக்கிய பணி என்ன? சைவ சமய நூல்களைப் பதிப்பித்தல், தமிழ் கல்வியை வளர்த்தல், உரைநடை வளர்ச்சிக்கு பங்களித்தல்.
  109. ஈழத்தில் அச்சுத்துறை வளர்ச்சிக்கு பங்களித்தவர் யார்? ஆறுமுக நாவலர்.
  110. ஆறுமுக நாவலர் எந்த ஆண்டில் பிறந்தார்? 1822 ஆம் ஆண்டு.
  111. பழந்தமிழ் நூல்களைத் தேடி வெளியிட்ட முன்னோடிகளில் ஒருவர் யார்? சி. வை. தாமோதரம்பிள்ளை.
  112. சி. வை. தாமோதரம்பிள்ளையின் முக்கிய பணி என்ன? ஓலைச்சுவடிகளில் இருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடி அச்சிட்டு வெளியிடுதல்.
  113. 'தண்ணீர்த் தேசம்', 'வைகறை மேகங்கள்', 'தமிழாற்றுப்படை' முதலிய நூல்களின் ஆசிரியர் யார்? கவிஞர் வைரமுத்து
  114. மிக நீண்ட அடி வரையறைகளைக் கொண்ட சங்கத் தொகைநூல் எது? அகநானூறு
  115. கலித்தொகை எத்தனை பாடல்களைக் கொண்டது? 150
  116. வேளான் வேதம் என அழைக்கப்படும் இலக்கியம் யாது? நாலடியார்
  117. நாலடியாரைத் தொகுத்தவர் யார்? பதுமனார்
  118. ஆழ்வார் பாடல்களைத் தொகுத்து அவற்றுக்கு 4000 திவ்விய பிரபந்தம் எனப் பெயரிட்டவர் யார்? ஶ்ரீமத் நாதமுனிகள்
  119. பெரியபுராணத்தின் முதல் நூலாகக் கொள்ளப்படும் நூல் எது? திருத்தொண்டர் தொகை
  120. கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடம் யாது? திருவரங்கம்
  121. 'தமிழ்த்தாத்தா' என அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதையரின் சுயசரிதை நூல் எது? 'என் சரிதம்'
  122. தொல்காப்பியத்திற்கு முதன்முதலில் உரை எழுதியவர் யார்? இளம்பூரணார்
  123. ஈழத்தின் முதலாவது  கோவை இலக்கியமாகக் கருதப்படுவது யாது? கரவன் வேலன் கோவை
  124. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த சங்க காலப்புலவராகக் கருதப்படுபவர் யார்? ஈழத்துப் பூதந்தேவனார்
  125. கண்ணகி வழக்குரை என்ற நூலின் ஆசிரியர் யார்? சகவீரன்
  126. தண்டிகை கனகராயன் பள்ளு எனும் நூலின் பாட்டுடைத் தலைவர் யார்? கனக நாயக முதலியார்
  127. ஈழத்தின் தொடக்ககால சிறுகதைகளுள் ஒன்றான் 'பாற்கஞ்சி' என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? சி. வைத்தியலிங்கம்
  128. பொற்சிலையில் வாடும் புனிதர்கள் எனும் நாவலின் ஆசிரியர் யார்? சி. தெணியன்
  129. இலங்கையின் முதல் தமிழ் நூலாகிய சரசோதிமாலை எந்த மன்னனுடைய அவையில் அரங்கேற்றப்பட்டது? நான்காம் பராக்கிரமபாகு மன்னனின் அவையில்
  130. ஆரியச் சக்கரவத்திகள் காலத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தை அடித்தளமாகக் கொண்டு தோன்றிய இலக்கியம் எது? கண்ணகி வழக்குரை
  131. ஒல்லாந்தர் கால காதல் இலக்கியமாகிய 'வெருகல் சித்திரவேலாயர் காதல்' எனும் நூலின் ஆசிரியர் யார்? வீரக்கோன் முதலியார்.
  132. கடூழியம் என்ற பா நாடகத்தின் ஆசிரியர் யார்? இ. முருகையன்
  133. இனவெழுத்து இல்லாத எழுத்துத் தொகுதி எது? இடையினம்
  134. 'குன்றில் குமரன் கோயில் உண்டு' எனும் தொடரில்  இடம்பெற்றுள்ளது எத்தனையாம் வேற்றுமையாகும்? ஏழாம் வேற்றுமை
  135. 'இரக்கப் போனாலும் சிறக்கப் போ' எனும் தொடரில் 'உம்' இடைச்சொல் உணர்த்தும் பொருள் யாது? எதிர்மறைப்பொருள்
  136. ஏவல் வினையின் இரு வகைகளும் எவை? கடப்பாடு ஏவல், விருப்பு ஏவல்
  137. தலைவன் அல்லது அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் யாது? கோ
  138. சிலிர்த்தது என்ற சொல்லிற்கான வினையடி யாது? சிலிர்
  139. வைதல் என்ற சொல்லிற்கான எதிர்ச்சொல் யாது? வாழ்த்தல்
  140. சசிதரனும் வந்தான். இங்கு 'உம்' இடைச்சொல் என்ன பொருளில் வந்துள்ளது? எச்சம்
  141. 'வாயூறுதல்' எனும் மரபுத் தொடரின் பொருள் யாது? ஆசைப்படுதல்
  142. நீதிபதி உறவினர்களுக்கு கைதிகளைப் பார்ப்பதற்கு அனுமதி வழங்கினார். - இது எவ்வகை வாக்கியம்? கலப்பு வாக்கியம்
  143. திருப்பள்ளி எழுச்சி பாடிய வைணவ ஆழ்வார் யார்? தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
  144. பெரிய புராணத்தின் பாட்டுடைத் தலைவர் யார்? சுந்தரமூர்த்தி நாயனார்
  145. குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படும் இலக்கண நூல் எது? தொன்னூல் விளக்கம்
  146. பொருநராற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன் யார்? கரிகால் பெருவளத்தான்
  147. குண்டலகேசி எனும் பௌத்த காப்பியத்திற்கு எதிராக எழுந்த சமணக் காப்பியம் எது? நீலகேசி
  148. கயல்விழி என்ற வரலாற்று நாவலின் ஆசிரியர் யார்? அகிலன்
  149. தமிழின் முதல் உரை நூலாகக் கொள்ளப்படும் நூல் எது? இறையனார் களவியல் உரை
  150. 'மலரும் மாலையும்' , 'ஆசிய ஜோதி' முதலிய கவிதை நூல்களின் ஆசிரியர் யாா்? கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்.
  151. நேமிநாதன் எனும் இலக்கண நூலின் ஆசிரியர் யார்? குணவீரபண்டிதர்
  152. 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு' எனும் வரிகளைப் பாடிய கவிஞர் யார்? பாரதிதாசன்
  153. கனகி புராணத்தின் ஆசிரியர் யார்? சுப்பையனார்
  154. ஈழத்தில் அடியவர்களின் வரலாற்றைக் கூறும் வகையில் எழுந்த புராணம் ஒன்றினைக் குறிப்பிடுக. வியக்கரபாத புராணம், திருத்தொண்டர் புராணம்
  155. பறாளை விநாயகர் பள்ளு எனும் இலக்கியத்தில் மூத்த பள்ளி எப்பிரதேசத்தைச் சார்ந்தவளாகக் குறிப்பிடப்படுகிறாள்? ஈழமண்டல பள்ளி
  156. இலங்கையில் அதிகமான பிரபந்தங்களை (சிற்றிலக்கியங்களை) பாடிய புலவராக அறியப்படுபவர் யார்? உடுப்பிட்டி சிவசம்புப் புலவர்
  157. ஈழத்தில் நாட்டுக் கூத்துகளுக்கு மறுமலர்ச்சி அளித்த பேராசிரியர் யார்? பேராசிரியர் சு. வித்தியானந்தன். 
  158. வளையாபதி காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்? நவகோடி நாராயணன்
  159. உத்தர வேதம், தெய்வ நூல், வாயுரை வாழ்த்து முதலிய பெயர்களில் புகழப்படும் நூல் எது? திருக்குறள்
  160. தமிழின் முதல் பிள்ளைத் தமிழ் இலக்கியமாகக் குறிப்பிடப்படும் இலக்கியம் எது? குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
  161. நான்மணிக்கடிகை எனும் நூலின் ஆசிரியர் யார்? விளம்பி நாகனார்
  162. காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் எத்தனையாம் திருமுறையில் உள்ளடக்கபட்டுள்ளன? பதினோராம் திருமுறை
  163. பக்தி நனி சொட்ட சொட்டப் பாடிய கவி வலவ! - என்ற வரிகளின் மூலம் புகழப்படுபவர் யார்? சேக்கிழார் (அருண்மொழித் தேவர்)
  164. கவிஞர் கண்ணதாசனுடைய இயற்பெயர் என்ன? முத்தையா
  165. மகாபாரதத்தில் கௌரவர்களின் தந்தையாகக் குறிப்பிடப்படுபவர் யார்? திருதராட்டிரன்
  166. நளவெண்பாவின் மூன்று காண்டங்களும் எவை? சுயம்வர காண்டம், கலி தொடர் காண்டம், கலி நீங்கு காண்டம்.
  167. சிதம்பர செய்யுட்கோவை, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், சிதம்பர மும்மணிக்கோவை முதலிய நூல்களின் ஆசிரியர் யார்? குமரகுருபரர்
  168. புலியூர் அந்தாதி எனும் இலக்கியத்தின் ஆசிரியர் யார்? மாதகல் மயில்வாகனப் புலவர்
  169. ஒல்லாந்தர் காலத்தில் விரத புராணங்களின் தோற்றத்திற்கு வித்திட்ட ஈழத்துப் புலவர் யார்? வரத பண்டிதர்
  170. மார்டிங் விக்கிரமசிங்க அவர்களுடைய 'கம்பெரலிய' என்ற நாவல் தமிழில் 'கிராமியப் பிறழ்வு' என மொழிபெயர்க்கப்பட்டது. இதனை மொழி பெயர்த்தவர் யார்?  ​பேராசிரியர் ம.மு. உவைஸ்
  171. 1940 களில் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சிக்காக ஈழத்தில் ஆரம்பிக்கப்பட்ட சஞ்சிகையின் பெயர் யாது? மறுமலர்ச்சி
  172. சடங்கு செவ்வானம், நீண்ட பயணம் முதலிய நாவல்களின் ஆசிரியர் யார்? செ. கணேசலிங்கம்
  173. ஈழத்தின் முதல் தமிழ்ப் பத்திரிகையாகிய 'உதய தாரகை' எந்த ஆண்டு வௌியிடப்பட்டது? 1841
  174. சந்தியோகுமையர் அம்மானை என அழைக்கப்படும் அம்மானை இலக்கியம் எது? அர்ச்யாகப்பர் அம்மானை
  175. ஆறுமுக நாவலரால் ஆரம்பிக்கப்பட்ட அச்சு இயந்திர சாலையின் பெயர் யாது? வித்தியானுபாலன யந்திரசாலை
  176. பாவலர் சரித்திர  தீபகம் எனும் நூலின் ஆசிரியர் யார்? ஆர்னல்ட் சதாசிவம்
  177. தூரத்துப் பச்சை என்ற நாவலின் ஆசிரியர் யார்? கோகிலம் சுப்பையா
  178. கிராமத்துக் கனவுகள் எனும் நாவலின் ஆசிரியர் யார்? எம்.எச்.எம். ஷம்ஸ்
  179. 'மரத்திற்கு நீர் ஊற்றினார்' இதில் வந்துள்ள வேற்றுமை உருபு தரும் பொருள் யாது? கொடைப் பொருள்
  180. 'பாரதியைப் படித்தான்' என்பதை எவ்வகை ஆகு பெயர்? கருத்தாவாகு பெயர்.
  181. ஒரு பொருளை இயற்கையில் உள்ளவாறே அழகுபடக் கூறும் அணி யாது? தன்மை  நவிற்சி அணி
  182. 12 உயிர்களும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும் மெய்யெழுத்துக்கள் எவை? க, ச, த, ப
  183. னர ணகரங்களை அடுத்துவரும் வகரத்தின் முன்னும் குறைந்து ஒலிக்கும் மகரம் எத்தனை மாத்திரை அளவைக் கொண்டது? கால் மாத்திரை
  184. பகுபத உறுப்புகளான பகுதியையும் விகுதியையும் அல்லது இடைநிலையும்  விகுதியையும் இணைப்பதற்கு பயன்படும் உறுப்பு எவ்வாறு அழைக்கப்படும்? சாரியை
  185. 80 ஆவது ஆண்டின் நி்றைவில் கொண்டாடப்படும் விழா எது? அமுத விழா

தொகுப்பு - கலைமகன் பைரூஸ்


இவ்வாறான பதிவுகளை நீங்கள் படித்திட Follow this link to join my WhatsApp group எனும் வட்ஸப் குழுமத்துடன் இணைந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days