📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

G.C.E. O/L பகுதி 1 : கடந்த பல ஆண்டுகளின் முக்கிய வினாக்கள் (2016 முதல்)

 

G.C.E. O/L தமிழ் – இலக்கணம்

பகுதி 1 : கடந்த பல ஆண்டுகளின் முக்கிய வினாக்கள் (2016 முதல்)

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர (G.C.E. O/L) பரீட்சையில்தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்தில் மாணவர்கள் அதிகமாகப் பிழை விடும் பகுதி இலக்கணப் பகுதியே ஆகும்.

இலக்கண வினாக்கள்:

  • கருத்து புரிதல் தேவைப்படுவது

  • சிறிய வேறுபாடுகளால் குழப்பம் தருவது

  • புள்ளிகளை இழக்கச் செய்வது

என்பன காரணமாக, இப்பகுதியில் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

அதனைக் கருத்திற்கொண்டு, 2016 முதல் கடந்த ஆண்டுகளில் வெளியான வினாப்பத்திரங்களில் இடம்பெற்ற முக்கிய இலக்கண வினாக்களை ஆண்டுவாரியாகத் தொகுத்து இங்கு வழங்கியுள்ளேன்.

மேலும்,

  • முக்கிய பகுதிகளின் விளக்கங்கள்

  • உதாரணங்கள்

  • விடை எழுதும் உத்திகள்

எனது YouTube தளத்தில் இற்றைப்படுத்தப்படும். அதேபோல் இங்கும் விரிவாகத் தெளிவுறுத்தப்படும்.

– தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்


இலக்கணம் – அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

(வினா இலக்கம் 21–30)


🟦 2021 (2022)

21. ககரம் 'K' என்னும் ஆங்கில எழுத்துக்கு நிகராக ஒலிக்கும் சொல்

  1. மகன்

  2. கணவன்

  3. தங்கை

  4. தகப்பன்

22. 'அல்' விகுதி பெற்று அமைந்த தொழிற்பெயர்

  1. வீழ்தல்

  2. எழுதுதல்

  3. படித்தல்

  4. மயங்கல்

23. பகுதி இரட்டித்துக் காலம் காட்டும் சொல்

  1. நடுகின்றான்

  2. நட்டான்

  3. நடுவான்

  4. நடுதல்

24. கருவிப்பொருள் வேற்றுமை இடம்பெற்ற தொடர்

  1. ஆற்றோடு ஆற்றுநீர் அலைந்து வரும்

  2. வெட்டும் பிடியைச் சிறக்கவே போட்டு

  3. அதன்பிறகு புள்ளும் தொடர்ந்து வரும்

  4. வெள்ளித் தட்டினால் விரல் கட்டமிட்டு

25. உடம்படுமெய் பெற்றுப் புணர்ந்த சொல்

  1. கலைவிழா

  2. கலையரங்கு

  3. கலைச்சொல்

  4. கலாசாரம்

26. பண்புத்தொகை

  1. வளர்மதி

  2. முகமதி

  3. வெண்மதி

  4. மதிமுகம்

27. ஏவல் வினை

  1. செய்யுங்கள்

  2. ஒழியட்டும்

  3. வாழ்க

  4. உதவுக

28. அகராதி ஒழுங்கில் அமைந்த சொற்றொகுதி

  1. அகம், ஆரவாரம், வீரம், முகம்

  2. கலம், கண்ணீர், கவிஞன், காலம்

  3. ஆடல், பாடல், புவனம், வாகனம்

  4. குருத்து, பருந்து, விருந்து, மருந்து

29. பொருத்தமற்ற உதாரணம் இடம்பெற்றுள்ள சொற்றொகுதியைத் தெரிவுசெய்க
(1) தொழிற்பெயர் – ஆட்டம், ஆடுதல், தேட்டம்
(2) பெயரடை – உருக்கமான, உருக்குலைந்து, சின்னஞ்சிறிய
(3) வினையடை – தனித்து, தனியாக, இனிமையாக
(4) வினையெச்சம் – ஓடி, ஓட, விழுந்து

30. புணர்ச்சி வகை
(1) இயல்புப்புணர்ச்சி – மதிமுகம், மலரிதழ், மடிமீது
(2) தோன்றல் விகாரம் – பாட்டுப்பெட்டி, இரவுச்செய்திகள், புலிக்குட்டி
(3) திரிதல் விகாரம் – மட்குடம், பழஞ்சோறு, கற்சிலை
(4) கெடுதல் விகாரம் – மரவேர், கனவுலகம், இதழியல்


🟦 2020

21. ககரம் 'h' என்னும் ஆங்கில எழுத்துக்கு நிகராக ஒலிக்கும் சொல்

  1. கடல் 2. ஆக்கம் 3. மங்கை 4. அகம்

22. இடைநிலை பெற்ற பெயர்ப்பகுபதம்

  1. உண்டான் 2. பொங்கும் 3. அறிஞன் 4. அரசன்

23. பெயரடை

  1. குறைவாக 2. இனிமையான 3. விரைந்து 4. விரைவில்

24. வேற்றுமைப் பொருளால் வேறுபடும் தொடர்

  1. வான்மதி 2. உச்சித்திலகம் 3. மணிக்கோபுரம் 4. சுவர்க்கடிகாரம்

25. கெடுதல் விகாரம் இடம்பெற்றுப் புணர்ந்தது

  1. ஊர்ப்பெயர் 2. மரவேர் 3. நிலாமுற்றம் 4. மலரிதழ்

26. இணைப்பிடைச் சொல்

  1. ஆனால் 2. ஆகையால் 3. ஆயினும் 4. எனினும்

27. ‘விழுந்தவள்’ என்பது

  1. படர்க்கை வினைமுற்று

  2. தொழிற்பெயர்

  3. வினையாலணையும் பெயர்

  4. பெண்பால் வினைமுற்று

28. அகராதி ஒழுங்கு

  1. கள்ளம், கபடம், காடு, குரங்கு

  2. வரம்பு, வயல், வாசல், வீடு

  3. தப்பட்டை, தப்பு, தாளம், தாரை

  4. ஏகம், ஏகாந்தம், ஏகுதல், ஏங்குதல்

29. பொருத்தமற்ற தொகை
(1) வேற்றுமைத்தொகை
(2) வினைத்தொகை
(3) பண்புத்தொகை
(4) உவமைத்தொகை

30. வினை வகைகள்
(1) தன்மைவினை
(2) முன்னிலைவினை
(3) படர்க்கைவினை
(4) வியங்கோள்வினை


🟦 2019

21. ககரம் 'g' என்னும் ஆங்கில எழுத்துக்கு நிகராக ஒலிக்கும் சொல்

  1. கப்பல்

  2. தேகம்

  3. தங்கம்

  4. சுகம்

22. இடைநிலை அமையப்பெற்ற பெயர்ப்பகுபதம்

  1. ஓடுதல்

  2. மரங்கள்

  3. கூத்தன்

  4. அறிஞன்

23. வினையடை

  1. நடந்து

  2. நேற்று

  3. அழகான

  4. வேகமான

24. வேற்றுமைத் தொகையாய் அமைந்த சொற்றொடர்

  1. குடும்பச் சொத்து

  2. தேடிய சொத்து

  3. பொதுச்சொத்து

  4. அழியாச்சொத்து

25. இயல்புப் புணர்ச்சி இடம்பெற்ற சொல்

  1. மணியோசை

  2. கடலலை

  3. பூங்கொடி

  4. மரவேர்

26. ‘செத்த மாட்டில் உண்ணி கழன்றது போல’ – இடம்பெற்ற வேற்றுமைப் பொருள்

  1. இடம்

  2. ஒப்பு

  3. நீங்கல்

  4. ஏது

27. ‘சாலச் சிறந்தது’ – ‘சால’ என்னும் உரிச்சொல் உணர்த்தும் பொருள்

  1. பொருத்தம்

  2. உறுதி

  3. கூர்மை

  4. மிகுதி

28. ‘கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ – ‘கற்றோர்’ என்பது

  1. தொழிற்பெயர்

  2. காரணப்பெயர்

  3. வினையாலணையும் பெயர்

  4. ஆக்கப்பெயர்

29. பொருத்தமற்ற உதாரணம் இடம்பெற்றுள்ள சொற்றொகுதி
(1) அஃறிணை – மரம், செடி, குருவி
(2) ஆண்பால் – வந்தான், படித்தவன், நோயாளி
(3) பெண்பால் – மங்கை, தங்கை, வந்தாள்
(4) பலர்பால் – ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்

30. தொகை வகைகள்
(1) உவமைத்தொகை – பால்நிலா, மதிமுகம், கயல்விழி
(2) உம்மைத்தொகை – வீடுவாசல், கோயில்குளம், சோறுகறி
(3) பண்புத்தொகை – வெண்சங்கு, நேர்கோடு, வட்டநிலா
(4) வினைத்தொகை – ஏவுகணை, சுடுசோறு, கடுகதி


🟦 2018

21. ‘கணினிகள் இயங்கியது’ என்பது

  1. எண்வழு

  2. கால வழு

  3. திணைவழு

  4. மரபு வழு

22. ‘கண்ணன் அலுவலகத்தில் இருந்தான்; அவனைத் தேடி அப்பா வந்தார்’ – மாற்றுப் பெயர்

  1. கண்ணன்

  2. அலுவலகம்

  3. அப்பா

  4. அவன்

23. ‘பரிசு’ என்பது

  1. எழுவாய்

  2. பயனிலை

  3. செயப்படுபொருள்

  4. அடைமொழி

24. சிறு + குடை →

  1. சிறுகுடை

  2. சிறுக்குடை

  3. சின்னக்குடை

  4. சிற்குடை

25. ‘ஏவுகணை’ என்பது

  1. பண்புத்தொகை

  2. உவமைத்தொகை

  3. வினைத்தொகை

  4. வேற்றுமைத்தொகை

26. ‘மிக அழகான’ என்பது

  1. பெயரெச்சத் தொடர்

  2. வினையடைத்தொடர்

  3. பெயர்த்தொடர்

  4. பெயரடைத்தொடர்

27. பின்னொட்டு ஏற்காத சொல்

  1. அநீதி

  2. நோயாளி

  3. புதுமை

  4. அரசியல்

28. ‘வாய்க்கால்’ என்பது

  1. இலக்கணமுடையது

  2. இலக்கணப்போலி

  3. எழுத்துப்போலி

  4. மரூஉ

29. பொருத்தமற்ற உதாரணம் இடம்பெற்றுள்ள சொற்றொகுதி
(1) பெயர்ச்சொல் – கதிரை, மார்கழி, செம்மை
(2) இடுகுறிப்பெயர் – மரம், மலை, மண்
(3) வினைச்சொல் – படி, அலை, நடை
(4) உரிச்சொல் – சால, உறு, தவ

30. பெயர் வகைகள்
(1) கூட்டுப்பெயர் – மின்சாரநிலையம், எழுதுகோல், பறிமுதல்
(2) ஆக்கப்பெயர் – முதலாளி, கணையாழி, விடுகாலி
(3) தொழிற்பெயர் – காணுதல், நடத்தல், கூவுதல்
(4) வினையாலணையும் பெயர் – வந்தவன், போனவன், நடந்தவன்


குறிப்புகள்

✔ தினமும் 10 வினாக்கள் பயிற்சி செய்யவும்.
✔ புணர்ச்சி / தொகை / வேற்றுமை → அதிக கவனம்.
✔ அகராதி ஒழுங்கு வினாக்கள் – எளிதாய் புள்ளியைப் பெற்றுத் தரும்.
✔ கடந்த ஆண்டு வினாக்கள் = மீண்டும் கேட்கப்படும் வாய்ப்பு அதிகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days