📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 24 ஜூன், 2026

க.பொ.த.உ/த பிரிவுகளில் மாணவர்களை அனுமதிப்பதற்கான ஆகக் குறைந்த தகைமைகள்

க.பொ.த.உ/த வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் தொடர்பான 2008/17,2008/17(1), 2008/17(11),2009/16,2013/25 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத் துறைக்கும் மாணவர்களை அனுமதிப்பதற்கான ஆகக் குறைந்த தகைமைகள்.

1) பௌதீக விஞ்ஞானத் துறை
Physical Science Stream
*கணிதம், தமிழ்மொழி உட்பட 3C,3S சித்தியுடன் கணிதத்தில் "C" சித்தியையும், விஞ்ஞானத்தில் "S" சித்தியையும் ஒரே தடவையில் பெற்றிருக்க வேண்டும்.
*விஞ்ஞான பாடத்தில் "C"/"S" பெற்ற மாணவர்களின் கடந்த கால பெறுபேறுகளை(2016-2021) ஆய்வு செய்த போது, 66-69% மானோர் பௌதீகவியல்/இரசாயனவியல் பாடத்தில் சித்தியடையத் தவறியுள்ளனர்.
*ஆகவே கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்தில் குறைந்தது "B" சித்தி பெற்றவர்கள் பௌதீக விஞ்ஞான பிரிவில் சிறந்த பெறுபேறுகளைப் பெறலாம்.
2) உயிரியல் விஞ்ஞானத் துறை
Biological Science Stream
*கணிதம், தமிழ்மொழி உட்பட"3C" "3S" சித்தியுடன் விஞ்ஞான பாடத்தில் "C" சித்தியையும், கணிதத்தில் "S"சித்தியையும் ஒரே தடவையில் பெற்றிருக்க வேண்டும்.
*கணித பாடத்தில் "S" சித்தியைப் பெற்றவர்களின் கடந்த கால பெறுபேறுகளை(2016-2021) ஆய்வு செய்த போது,79-83% மானோர் பௌதீகவியல் பாடத்தில் சித்தியடையத் தவறியுள்ளனர்.
*ஆகவே கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்தில் குறைந்தது"B" சித்தி பெற்றவர்கள் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும்.
.............................................................
#குறிப்பு: 2008 இல் க.பொ.த சா/த பெறுபேறுகளுக்கு முன்பு பின்வருமாறு அமைந்திருந்தது.
*"D" -75 புள்ளிகளுக்கு மேல்
*"C" -60-74 புள்ளிகள்
*"S" -35-59 புள்ளிகள்
தற்போதைய க.பொ.த.சா/த பெறுபேறுகள் பின்வருமாறு உள்ளது.
*"A". -75 புள்ளிகளுக்கு மேல்
*"B". -65-74 புள்ளிகள்
*"C". -50-64 புள்ளிகள்
*"S". -35-49 புள்ளிகள்
# தற்போதைய "C" யும்,"S" உம், பழைய "S" க்குச் சமமானது. அதேவேளை பழைய பெறுபேறு "C" தற்போதைய "B" க்குச் சமமானது.
............................................................
3) உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவு
Biosystems Technology Stream
*கணிதம் தமிழ்மொழி உட்பட 3C,3S சித்தியுடன் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்தில்"S" சித்தி பெற்றிருக்க வேண்டும்.
*3C,3S உடன் விஞ்ஞான பாடத்தில் சித்தி பெற்று,கணிதத்தில் சித்தி அடையாதவர்கள், Pending அடிப்படையில் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்கலாம். அடுத்த வருடம் சித்தி அடையத் தவறினால், தொடர்ந்து கற்க அனுமதி வழங்கப்படமாட்டாது.
4) பொறியியல் தொழில்நுட்ப பிரிவு
Engineering Technology Stream
கணிதம், தமிழ்மொழி உட்பட"3C""3S" சித்தியுடன் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடத்தில் "S" சித்தி பெற்றிருக்க வேண்டும்.
5) வணிகத் துறை Commerce Stream
கணிதம்,தமிழ்மொழி உட்பட "3C","3S" சித்தியுடன் கணிதம்/வணிகக் கல்வி/வரலாறு/முயற்சியாண்மை பாடத்தில் குறைந்தது "C" சித்தி பெற்றிருக்க வேண்டும்.
6) கலைத் துறை Arts Stream
*கணிதம் ,தமிழ்மொழி உட்பட 3C,3S சித்தியுடன், கலைப் பிரிவில் தெரிவு செய்யும் ஒரு பாடத்தில் குறைந்தது "C" பெற்றிருக்க வேண்டும்.
*3C,3S உடன் கணித பாடத்தில் சித்தி அடையாத மாணவர்கள், Pending அடிப்படையில் கலைப் பிரிவில் அனுமதிக்க முடியும். எனினும் அடுத்த தடவையில் கணிதத்தில் சித்தியடைய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கலாம்.
*3C,3S உடன் கணிதத்தில் சித்தி அடைந்து, தமிழ் மொழியில் சித்தி அடையாத மாணவர்கள், Pending அடிப்படையில், அடுத்த வருடத்தில் சித்தியடைய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கலாம். இந்த மாணவர்களை Pending வரவு இடாப்பில் பதிவு செய்ய வேண்டும்.சித்தி பெற்றால், நிரந்தர வரவு இடாப்பில் பதியலாம்.
*கணிதம் மற்றும் தமிழ் மொழி உட்பட 2C,4S சித்தி பெற்றவர்களுக்கு மற்றொரு "C" ஐ, கணிதம்,தமிழ்மொழி தவிர்ந்த ஏனைய பாடங்களில் SBA சித்தியை ஏற்றுக் கொள்ளலாம்.இவர்கள் மீண்டும் பரீட்சைக்கு தோற்றி சித்தி அடையத் தேவையில்லை.
திரு.த.ரதீஸ்காந்
(BSc,SLTS,PGDE)
Science for technology teacher
BT/PD/KODDAIKALLAR M.V

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days