📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வியாழன், 24 ஏப்ரல், 2025

தரம் 4 - தரம் 5 | சரியான சொல்லைத் தெரிந்து கோடிடுதல்

     தமிழில் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுவதே சிறப்பானது. ஒலி வேறுபாட்டுச் சொற்களுக்கு ஏற்ப, அவற்றின் பொருள்களும் வேறுபடும் என்பதை மாணவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும். 

    இங்கு ஒவ்வொரு வினாவிலும் மூன்று சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

புதன், 9 ஏப்ரல், 2025

பெற்ற மனம் | சிறுகதை - ஹாலித் பைரூஸ்

    சித்திரைப் புத்தாண்டிற்கு பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு மாதம் விடுமுறை கிடைத்த சந்தோசத்தில் புத்தகப்பையைத் தோளில் சுமந்தவாறு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் வந்து நின்ற பேருந்தில் ஏறிய சுமந்திரனுக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. ஒரு இருக்கையில் வயதான முதியவர் ஒருவரும் பக்கத்தே அவரது வயதான மனைவியும் அமர்ந்திருந்தனர். அவ்விரு ஆசனங்களையும் தவிர ஏனைய அனைத்து ஆசனங்களும் வெறிச்சோடிக் கிடந்தன. வழமைக்கு மாறாக இன்று இப்படி இடம் கிடைத்தது பற்றி அவனால் நினைத்துப் பார்க்கவும் இயலவில்லை. வேறு நாட்களில் நின்றுகொண்டுதான்

வியாழன், 3 ஏப்ரல், 2025

இலங்கைத் தமிழ் படைப்புலகில் அல் அஸூமத் என்ற ஆளுமை!

இலங்கையின் புகழ்பூத்த, காலத்தால் பேசப்பட வேண்டிய ஆளுமைகள் பற்றி பாடசாலை மாணாக்கரும்... ஏன் ஆசிரியர்களும் அறிந்து கொள்ள வேண்டியவர்கள் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வது தேவைப்பாடானதே. 

அதற்கேற்ப, பிரபல எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட 'இலங்கைத் தமிழ் படைப்புலகில் அல் அஸூமத் என்ற ஆளுமை' பற்றிய கட்டுரை 'தமிழ்ச்சுடர்' தளத்தில் இற்றைப்படுத்தப்படுகிறது.

நன்றி - மு. சிவலிங்கம்

அகில இலங்கைத் தமிழ்த் தினவிழா போட்டி நிகழ்ச்சிகளில் திருத்தங்கள்

 அகில இலங்கைத் தமிழ்மொழித் தினப் போட்டிகள் - 2025 இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக தமிழ்மொழிப் பாட இணைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதற்கேற்ப, 2025 ஆம் ஆண்டுக்கான இணைப்பு மற்றும் 35/2018 சுற்று நிரூபத்தைப் பயன்படுத்தும்போது சில திருத்தங்களைக் கவனத்திற்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இணைப்பினைப்பினைப் பார்க்கவும். (சுற்றுநிரூபமும் இணைக்கப்பட்டுள்ளது.)


புதன், 2 ஏப்ரல், 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பகுதி 2 மாதிரி வினாக்கள்

      பின்வரும் பந்தியை வாசியுங்கள் 

    நாங்கள் அனைவரும் இரவு நேரம் நிலவின் ஔியில் குதூகலித்துக் கொண்டிருந்தோம். அவ்வேளையில் வானத்தில் வௌவால் கூட்டம் பறந்து சென்றது. அவற்றைப் பார்ப்பதற்கு வியப்பாக இருந்தது. வானத்தில் விண்மீன்கள் தகதகவென மின்னின. தவளைகள் கத்தும் சத்தம் காதைத் துளைத்தது. இரவில் பூத்த மலர்கள் கமகமவென நறுமணம் வீசின.

கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்குரிய விடைகளைப் பந்தியிலிருந்து தெரிந்தெடுத்து, புள்ளிக்ேகாட்டின் மீது எழுதுக.