அணிகளிலே தலையாயது உவமை. இலக்கியங்களிலும் பேச்சு வழக்கிலும் பெரும்பாலும் உவமைகள் கையாளப்படுகின்றன.
நன்கு அறிந்ததைக் கொண்டு அறியாததை விளக்குவதே உவமையாகும். அவ்வாறான உவமையை உள்ளடக்கிய தொடரே உவமைத் தொடராகும்.
தாம் சொல்லக் கருதிய விடயத்தை மிகவும் சுருக்கமாகவும், சுவைபடவும்,
கேட்போர் மற்றும் வாசிப்போர் தௌிவாக விளங்கிக் கொள்வதற்கு இந்த உவமைத் தொடர்கள் பயன்படுகின்றன.கீழ்வரும் உவமைத் தொடர்களில் உள்ள உவமானங்களுக்குப் பொருத்தமான உவமேயங்களைச் சேர்த்து அழகிய வாக்கியங்களைக் உருவாக்கக் கற்றுக் கொள்வோம்.
- அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல
- அச்சாணி இல்லாத் தேர்போல
- அடியற்ற மரம் போல
- அடுத்தது காட்டும் பளிங்கு போல
- அணை கடந்த வௌ்ளம் போல
- அத்தி பூத்தாற் போல
- அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல
- அனலிடைப்பட்ட மெழுகு போல
- ஆகாயக் கோட்டை கட்டினது போல
- ஆடி ஓய்ந்த பம்பரம் போல
- ஆண்டிகள் கூடி மடம் கட்டினது போல
- ஆப்பிழுத்த குரங்கு போல
- ஆலையில் அகப்பட்ட கரும்பு போல
- ஆவிற்கு இரு கோடு போல
- ஆற்றங்க கரையில் மரம் போல
- ஆற்றிற் கரைத்த புளி போல
- ஆனைவாய் அகப்பட்ட கரும்பு போல
- இடியோசை கேட்ட நாகம் போல
- இணை பிரிந்த அன்றில் போல
- இரண்டு தோணியில் கால் வைத்தது போல
- இலவு காத்த கிளி போல
- இரு தலைக் கொள்ளி எறும்பு போல
- இரும்பும் காந்தமும் போல
- இலை மறை காய் போல
- இனம் பிரிந்த மான் போல
- ஈருடலும் ஓருயிரும் போல
- உட்சுவர் இருக்க புறச்சுவர் தீற்றுதல் போல
- உடுக்கை இழந்தவன் கை போல
- உமி குற்றிக் கை சலித்தது போல
- உயிரும் உடம்பும் போல
- உருத்திராட்சப் பூனை போல
- உருள் பெருந் தேருக்கு அச்சாணி போல
- உள்ளங்கை நெல்லிக்கனி போல
- ஊசியின் வழியே செல்லும் நூல் போல
- ஊமை கண்ட கனவு போல
- ஊருணி நீர் நிறைந்தாற் போல
- ஊழித் தீ போல
- எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விட்டது போல
- எட்டி பழுத்தாற் போல
- எடுப்பார் கைப்பிள்ளை போல
- எய்தவன் இருக்க அம்பை நோவது போல
- எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினது போல
- எரி முன்னர் வைத்தூறு போல
- எலியும் பூனையும் போல
- ஏட்டுச் சுரைக்காய் போல
- ஏவற்பேய் கூரையைப் பிடுங்கியது போல
- ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல
- ஔியைக் கண்ட இருளைப் போல
- ஓடும் புளியம்பழமும் போல
- ஓரச்சிலே உருக்கி வார்த்தாற் போல
- கட்டுக்கடங்காக் காளை போல
- கடல் மடை திறந்தாற் போல
- கடன்பட்டார் நெஞ்சம் போல
- கண்கெட்ட பின் சூரிய வணக்கம் செய்வது போல
- கண்ணை இமை காப்பது போல
- கண்ணைக் கட்டி காட்டிலே விட்டது போல
- கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தாற் போல
- கரும்பு தின்னக் கைக்கூலி கேட்பது போல
- கல்லிலே நார் உரிக்கிறது போல
- கலங்கரை விளக்கம் போல
- கல் மேல் எழுத்துப் போல
- கனி இருப்பக் காய் கவர்தல் போல
- காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல
- காகம் உணவு கலந்துண்பது போல
- காட்டாற்று வௌ்ளம் போல
- காட்டில் எறித்த நிலா போல
- காட்டுத் தீ போல
- காந்தம் இரும்பைக் கவர்வது போல
- காய்த்த மரத்திற்கு கல்லெறி விழுவது போல
- காய்ந்த மாடு கம்பில் விழுந்தது போல (கம்பு - தினை வகை)
- கார்த்திகை பிறை கண்டது போல
- காலத்தாற் பெய்த மழை போல
- கிணற்றுத் தவளை போல
- கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல
- கிளியை வளர்த்துப் பூனை வாயிற் கொடுத்தது போல
- குடத்துள் விளக்குப் போல
- கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல
- குரங்கின் கைப் பூமாலை போல
- குருடனுக்குக் குருடன் வழிகாட்டியது போல
- குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போல
- குளிக்கப் போய்ச் சேறு பூசியது போல
- குன்றின் மேலிட்ட விளக்குப் போல
- குன்று முட்டிய குருவி போல
- கூலிக்கு மாரடிப்பது போல
- கொம்பரில்லாக் கொடி போல
- கொழுகொம்பற்ற கொடி போல
- சகடக் கால் போல
- சந்திரன் இல்லா வானம் போல
- சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல
- சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல
- சருக்கரைப் பந்தரிலே தேன்மாரி பொழிந்தாற் போல
- சாடிக்கு மூடி போல
- சிங்கத்தின் காட்டைச் சிறு நரி வளைத்தாற் போல
- சித்திரப் பதுமை போல
- சிவபூசையில் கரடி புகுந்தது போல
- சிறகிழந்த பறவை போல
- சுடச் சுடரும் பொன் போல
- சுழல் காற்றில் அகப்பட்ட துரும்பு போல
- சூரியனைக் கண்ட தாமரை போல
- சூரியனைக் கண்ட பனி போல
- சூரியன் முன் மின்மினி போல
- செக்கு மாடு போல
- செவிடன் காதில் ஊதிய சங்கு போல
- சேற்றில் முளைத்த செந்தாமரை போல
- தரித்திரனுக்குப் புதையல் கிடைத்தது போல
- தலையிருக்க வால் ஆடுதல் போல
- தவித்த முயலை அடிப்பது போல
- தழலது கண்ட மெழுகது போல
- தாமலை இலையிலே தண்ணீர் போல
- தாரகை நடுவண் தண்மதி போல
- திங்களைக் கண்டு பொங்கும் கடல் போல
- திரிசங்கு சுவர்க்கம் போல
- தீட்டிய மரத்திற் கூர் பார்ப்பது போல
- துரும்பைத் தூணாக்குதல் போல
- தூங்குகின்ற புலியைத் தட்டி எழுப்புதல் போல
- தூண்டிற் புழுவினைப் போல
- தூண்டிலில் அகப்பட்ட மீன் போல
- தேடிய பூண்டு காலில் சிக்கியது போல
- தொட்டனைத்தூறும் மணற்கேணி போல
- நகமும் சதையும் போல
- நடுவூரில் நல்ல மரம் பழுத்தாற் போல
- நல்ல மரத்திற் புல்லுருவி பாய்ந்தது போல
- நவில் தோறும் நூல் நயம் போல
- நரி வாலைக் கொண்டு கடலாழம் பார்த்தல் போல
தொடரும்....
📢 தமிழ்ச்சுடர் WhatsApp குழுவில் இணையுங்கள்
புதிய பதிவுகள் • கல்வி தகவல்கள் • உடனடி அப்டேட்கள்
JOIN NOW
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days