📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 15 ஜூன், 2025

💙 தந்தைக்கு ஒரு பாச கவிதை 💙

சில வார்த்தைகள் மாறாத அன்புக்கு...
17 வயதான ஒரு மாணவன். ஆனால் அவரது உள்ளத்தில் உருகி நெகிழும் ஒரு கவிஞன்.
தந்தையின் அரவணைப்புக்கும், நேசத்துக்கும், சுருக்கமற்ற உறவுக்காக ஒரு சிறகில்லாத பறவை —
இன்று தனது இதயத்தின் குரலைக் கவிதையாக வடித்திருக்கிறான்.
இதோ, அவரது நெஞ்சின் ஓசை... ஒரு தந்தைக்கு மகனின் வார்த்தைநீராழி!

👑 தந்தை… ஒரு மழலையின் முதல் நாயகர்! 💙

அவர் என் குரலல்ல, ஆனால் என் மெளனத்தின் வலி கேட்பவர்…
அவர் என் கரங்களைப் பிடித்தவர் அல்ல,
ஆனால் என் மனதை பிடித்து கனவுகள் நடக்க வைத்தவர்…

சின்ன வயதில் சக்கரம் போல சுழன்ற என் உலகில்,
அவர் என் மையம்…
நான் விழுந்த போதெல்லாம் முதலில் வந்தவர்…
நான் உயர்ந்த போதெல்லாம் பின்னால் நின்று களித்தவர்…

தந்தை என்பது
புத்தகத்தில் எழுதப்படாத கவிதை!
அவர் நடுவில்தான்
என் வாழ்கையின் எல்லா வரிகளும்!

இன்று நான் நிமிர்ந்து பேசுகிறேன் என்றால்,
அது அவரின் நிழலில் வளர்ந்த நம்பிக்கையின் அடையாளம்!

🌹 தந்தையர் தின நன்றிப் பதிவாக…
இது என் இதயத்தின் ஓர் ஓரத்தில் நின்ற
அன்புக்குரிய நபருக்கு.

💌 Happy Father’s Day!

— ஹாலித் பைரூஸ்
2025/06/15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக